Saturday, September 24, 2011

அரசியல்! எல்லாமே அரசியல்!!


தமிழ் அகராதியில் மாத்திரமல்ல, உலகின் அனைத்து மொழிகளிலும் கூட சில சொற்களுக்கான சரியான- பூரண விளக்கத்தைக் கொடுத்துவிட முடியாது. அதில், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும்அரசியல்முக்கியமானது. ‘அரசியல்என்கிற சொல்லின் பூரண அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியாதது போலவே, அரசியலையும் யாராலும் முழுமையாக விளங்கிக்கொள்ள முடிவதில்லை.

தனிமனிதன்என்கிற நிலையில் இருந்துஇரு மனிதர்கள்என்கிற சமூக நிலைக்குச் செல்கின்ற தருணத்திலேயேதன் அல்லது தங்களின்நலன் சார்ந்த முக்கியத்துவம் அதிகரிக்கிறபோது அரசியல் தோற்றம் பெறுகிறது. இது, குடும்பம், கிராமம், சமூகம், இனக்குழுமம், நாடு, பிராந்தியம், உலகம் என்று விரிந்து செல்கிறது. இதற்குள்ளும் மதம்-மார்க்கம், சாதி, வர்க்கம் என்கிற பல கிளைப்பிரிவுகளும் உண்டு. அப்படிப்பட்ட அரசியலைச் சுற்றியே அனைவரும் இயங்குகின்றோம். அல்லது இயக்கப்படுகின்றோம்.

(அரசியல்- தொடர்பில் என்னால் வழங்கக்கூடிய நீண்டநேர யோசனைகளுக்குப் பின்னரான வரவிலக்கணம் மேலுள்ளது. ‘அரசியல்என்கிற வார்த்தையில் தோற்றம் கிரேக்கத்திலிருந்தா- இலத்தின் அமெரிக்க நாடுகளிலிருந்தா ஆரம்பித்தது என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமில்லை. அதுபோக, அரசியல் தொடர்பில் தமிழில் மிகப்பெரிய விளக்கங்களையுடைய கட்டுரையையோ- நூல்களையோ படிக்கும் வாய்ப்பும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அதற்கு, என்னுடைய ஆர்வமற்ற தேடல்கூட காரணமாக இருக்கலாம். எனினும், என் தேடலில் கிடைத்தவற்றில் அவ்வளவு திருப்திகரமாக எவையும் அமையவில்லை.)

ஒவ்வொரு புதிய அரசியலின் தோற்றத்திற்குப் பின்னாலும் ஆயிரம் அரசியல் இருக்கின்றனஎன்பது என்னுடைய எண்ணம். அதாவது, அரசியல் என்பது நாட்டை ஆளும்- பலரும் கூறுவது போலசாக்கடை அரசியல்மட்டுமல்ல. அரசியல் என்பது எம்முடைய வாழ்க்கையின் அடிநாதமாகவும்- இறுதிவரை பிரிந்து செல்ல முடியாததுமாகவும் இருக்கின்றது. ஒவ்வொருவருடைய நலனும் எப்போதுமே அவரவருக்கு முக்கியமானது. இந்த முக்கியத்துவம் என்றைக்கும் முடிவுக்கு வராது. அந்த முடிவு கிடைக்காத பட்சத்தில் அரசியலும் முற்றுப்பெறாது. இதுவே, அரசியல் தொடர்பிலான அடிப்படையாகவும் இருக்கும்.

சரி, தற்போதைய நடைமுறை அரசியலுக்கு வருவோம். ஜனநாயகத்தின் அடிப்படையே வாக்களிப்பு. அந்த வாக்களிப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்ற மிகமுக்கிய அரசியல் அதிகாரமாகும். எங்களிடமிருக்கிற அரசியல் அதிகாரம் என்கிற வாக்கின் மூலம், எங்களின் நலன் சார்ந்த அரசியல் அதிகாரத்தை பெருப்பித்து சட்ட வரைபு மன்றங்களுக்கு (சட்ட மன்றம், பாராளுமன்றம், மாநிலங்களவை- மக்களவை, காங்கிரஸ் என்று பலதும்) உறுப்பினர்களாக அனுப்புகின்றோம். அப்படி எங்களினால் அனுப்பப்படுகின்றவர்களினாலேயே, எங்களை வரையறுக்கிற சட்ட வரைபுகளை ஏற்படுத்தப்படுகின்றன.

ஆக, சரியோ- பிழையோ அதிக தருணங்களின் மக்களின் நலன் சார்ந்தஅல்லது எதிரான முடிவுகளை மக்களேதான் எடுக்கின்றோம். அதுபோகவும், மக்களின் 90 வீதமானவர்கள் நடைமுறை அரசியலில்வாக்களிப்புஎன்ற நிலைக்குப் பின்னர் எதிலும் நேரடியாக பங்கெடுக்க முன்வராத போதே சூழ்ச்சிகளும்- ஊழல்களும்- காட்டிக்கொடுப்பும்- முறையான செயலாற்றமையும் தோற்றம் பெறுகிறது. இதுவே, மக்களை அதிக நெருக்கடிக்குள் தள்ள செய்கிறது.

எங்களுடைய தேவைகளை உடனடியாகவும்- முறையற்றும் பெற எத்தனிக்கின்றபோதே அரசியல் ஆட்டத்தின் அடுத்த கட்டம் எங்களின் முன்னால் விரிய ஆரம்பிக்கின்றது. இந்த அரசியல் அடுத்த கட்ட ஆட்டமேவளச்சுரண்டல்- பிராந்திய ஆளுகை- உரிமை மறுப்பு- அடிமைத்தனம்- வல்லாதிக்கம்- சர்வாதிகாரம்என்கிற நிலைகளுக்கு இட்டுச் செல்கின்றது. இந்த உலகத்தில் யாராக இருந்தாலும், அரசியல் என்கிற நிலைக்குள் எப்படி வராமல் இருக்க முடியாதோ; அதுபோல நியாயமற்ற அரசியல் ஆட்டத்துக்குள்ளும் இல்லாமல் போகமுடியாது.

எம்முடைய ஆரம்பமும்- முடிவும் அரசியலுக்குள்ளேயே நிகழ்ந்துவிடுகிறது. எங்களின் நலனில் காட்டுகிற அக்கறையின் குறிப்பிட்டளவினையாவது எதிராளியிடமும் காட்டுகின்றபோதுகனவான் அரசியல்சாத்தியப்படுகிறது. அந்த கனவான் அரசியலே ஓரளவுக்கு நம்மையும்- இந்த உலகத்தையும் நல்ல நிலையில் வைத்திருக்க உதவும். மற்றப்படி எல்லாமே அரசியலுக்குள்ளேயே முடிந்து போகிறது!!
படம்: வினவு தளத்திலிருந்து பெறப்பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...