நீண்ட காலத்திற்க்கு பின் தமிழக தேர்தல் களத்தில் எல்லா கட்சிகளும் தனித்தே களம்மிறங்குகின்றன. திமுக தனித்து களம் காண்கிறோம் என காங்கிரஸ், விசியை கழட்டி விட்டுவிட்டு 91க்கு பின் தனித்து களம்மிறங்கியுள்ளது. 4 மாத்திற்க்கு முன் நடந்த சட்டமன்ற தேர்தலில் பங்காளிகளாக இருந்த தேமுதிக, கம்யுனிஸ்ட், புதிய தமிழகம், சரத்குமார் கட்சி போன்றவற்றை துரத்தியடித்துவிட்டு தனியாக நிற்கிறது அதிமுக. எங்களுக்கும் தன்மானம்மிருக்கு என பாமகவும் தனித்து வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதைப்பார்த்து எந்த கட்சிக்கு எவ்வளவு ஒட்டு பலம் என்பதை இந்த தேர்தல் மூலம் முடிவு செய்துவிடலாம் என பலரும் கணக்கு போட்டு காத்திருக்கின்றனர். அப்படி காத்திருப்பது முற்றிலும் தவறானது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்கை கொண்டு ஒரளவு மட்டுமே கணக்கிட முடியும். காரணம், உள்ளாட்சி தேர்தல் என்பது கிராம, நகர அளவில் நடப்பது. இங்கு கட்சிகளுக்கு செல்வாக்குயிருக்காது. வேட்பாளர்களின் தனித்தன்மை, சாதி ஆகியவையே வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும்.
திமுகவினர் அதிமுகவினருக்கும், அதிமுகவினர் தேமுதிகவினருக்கும் மாத்தி மாத்தி ஓட்டுப்போடுவார்கள். காரணம், இங்கு கட்சியை விட சாதியும், மதமும்மே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். அப்படியிருக்க இதை வைத்து எந்த அரசியல் கட்சியின் செல்வாக்கையும் தீர்மானித்துவிட முடியாது. அப்படி தீர்மானிக்க நினைப்பவர்கள் விமர்சகர்களல்ல.
திமுகவினர் அதிமுகவினருக்கும், அதிமுகவினர் தேமுதிகவினருக்கும் மாத்தி மாத்தி ஓட்டுப்போடுவார்கள். காரணம், இங்கு கட்சியை விட சாதியும், மதமும்மே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். அப்படியிருக்க இதை வைத்து எந்த அரசியல் கட்சியின் செல்வாக்கையும் தீர்மானித்துவிட முடியாது. அப்படி தீர்மானிக்க நினைப்பவர்கள் விமர்சகர்களல்ல.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் ஆளும்கட்சிக்கு சாதகமாகவே அமையும். இதுதான் இதற்க்கு முந்தைய கால தேர்தல் வரலாறும். அதற்க்கு காரணம், மக்கள் யார் ஆளும்கட்சியோ அந்த கட்சி பிரதிநிதிகள் இருந்தால் மட்டுமே நமக்கு தேவையானது தேடி சுலபமாக வரும் என்ற எண்ணத்தில் வாக்களிப்பவர்கள். இப்படி விழும் வாக்கை கொண்டும் போய் ஒரு கட்சியின் கணக்கில் சேர்க்க முடியாது. காரணம் இது சட்டமன்ற தேர்தலோ, நாடாளமன்ற தேர்தலோயில்லை.
எனது கூற்றுப்படி இந்த தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் அதிமுகவுக்கு சாதகமாக அமையும், இரண்டாம் இடத்தை திமுக பிடிக்கும். மற்றப்படி தேமுதிக, பாமக பட்டியலில் வரலாம். காங்கிரஸ், வி்.சி, புதிய தமிழகம், இடது வலது கம். கட்சிகள் போன்றவர்கள் டெப்பாசிட் வாங்கினால் அதிசயம் என்பது எனது கருத்து.
இந்த தேர்தல் மக்கள் மன்றத்திலோ, அரசியல் மட்டத்திலோ பொிய அளவில் மற்றத்தை கொண்டு வராது.இந்த வெற்றி மூலம் எம்.பி தேர்தல் வரை அரசியல் செய்யவோ, அறிக்கை விடவோ வசதியாக இருக்கும்மே தவிர வேற ஒன்றும்மில்லை.
No comments:
Post a Comment