Monday, September 12, 2011

விரைவில் தமிழகம் முன்மாதிரியாக திகழும்?!


சுப்ரீம் கோர்ட், "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில்? மேற்கொள்ளும் நடவடிக்கையைப் போல், தமிழகத்தில் நடந்துள்ள, மிகப் பெரிய குற்றமான நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், எந்த உயர் அந்தஸ்தில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் பாகுபாடின்றி தண்டிக்கப்பட வேண்டும்.


தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும், தனிப்பிரிவிலும் கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, அத்தனையும் தீர விசாரணை செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கே மிகுந்த காலம் தேவைப்படும் என்றே தோன்றுகிறது.



பணிச் சுமையால் தவறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால், நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படும். மேலும், குற்றம் புரிந்தவர்களும், சுப்ரீம்கோர்ட் வரை சென்று, கால விரையம் ஏற்படுத்துவர்.நில மோசடிப் புகார்களின் விசாரணையை முடித்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வழக்குகளையும் ஒருங்கிணைத்து, ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில், தனிப்பிரிவு ஏற்படுத்தி, தொடர்ந்து விசாரிக்க வேண்டும். 


யாரையும் பழிவாங்கும் எண்ணமில்லாமல், விசாரணைக்கான காலம் நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும், போதுமான சட்டத்திருத்தங்கள் கொண்டு வந்து, விரைந்து நீதி வழங்கி, இழந்த நிலங்களை மீட்க ஆவன செய்ய வேண்டும். அப்போது தான், மோசடி பேர்வழிகளிடமிருந்து விளை நிலங்களை மீட்க முடியும். விரைந்து நீதி வழங்குவதில், தமிழகம் முன்மாதிரியாக திகழும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...