Friday, September 23, 2011

திமுகவின் கடந்த ஆட்சி பற்றி சிஏஜி

கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற அவலங்களை சிஏஜி தோலுறித்துக் காட்டி இருக்கிறது.
புதிய தலைமைச் செயலகக் கட்டிட திறப்பு விழாவிற்கு அமைக்கப்பட்ட டூம்மிற்கு மூன்று கோடியே ஐம்பத்தாறு லட்ச ரூபாய்க்கு டெண்டரே விடாமல் ஒருவருக்கே வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தமிழக மக்களின் பணம்.
அடுத்து, அரசு கேபிள் டிவியை ஆரம்பித்து 28 கோடி ரூபாய்க்கு உபகரணங்கள் வாங்கி, அதைக் குப்பையில் போட்டிருக்கிறது கடந்த திமுக ஆட்சி. ஏன் இப்படிச் செய்தார்கள் என்பதற்கான காரணங்கள் அனைத்தும் உங்களுக்கே தெரியும் என்பதால் விட்டு விடலாம்.
அதற்கடுத்து, மின்சாரத்துறையில் ஒழுங்கீனமற்ற நிர்வாகத்தால் ஏகப்பட்ட இழப்புகள் என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் செய்தி ஆதாரம் இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை.
அதிமுக அரசு இப்பணத்தினை திமுகவினரிடமிருந்து திரும்பி வசூலிக்க வேண்டும். பொதுமக்கள் பணத்தை வீண் செய்தால் யார் ஆட்சி செய்கிறாரோ அந்தக் கட்சியினரிடமிருந்து பணத்தை வசூல் செய்ய அம்மா நினைத்தால் சட்டமே போடலாம். செய்வாரா?
அதுமட்டுமல்ல, தயா நிதி, கலா நிதிகளிடம் சிபிஐ விசாரணை செய்திருக்கிறது என்ற கூடுதல் செய்தியும், ஏர்செல்லுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என்ற செய்தியும் வெளி வந்திருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமே திமுகவினராக இருக்கலாமோ என்ற சந்தேகத்தினை குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள். அச்செய்தி கீழே.
சிறையில் இருந்து வெளியே வந்த ஜான் பாண்டியன், திருமாவளவனுடன் நெருங்கி வந்தார். பரமக்குடி கலவரங்களைப் பார்க்கும் போது, பெருமளவில் திட்டமிட்டு நடத் தப்பட்டது போல் தெரிவதாகக் கூறும் போலீஸார், ‘‘இந்த திட்டமிடுதல் ஜான் பாண்டியனுக்குத் தெரியுமா? என்பது தெரியவில்லை. இதன் பின்னணியில் திருமாவளவன் இ ருக்கலாம் என்றும் சந்தேகம் இருக்கிறது’’ என்கிறார்கள். வழக்கமாக விருதுநகர், மானாமதுரை வழியாக பரமக்குடி வரும் ஜான் பாண்டியன் இந்தமுறை கமுதி வழியாக  வர முயன்றதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இவர்கள் இருவரையும் வேறு யாராவது இயக்குவார்களோ என்ற சந்தேகமும் போலீஸுக்கு இருக்கிறது.
ஆட்சி மாறியதில் இருந்தே தி.மு.க.வினர் வரிசையாக உள்ளே போய்க் கொண்டிருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் எந்த அனுதாபத்தையும் தி.மு.க.விற்குப் பெற்றுத்  தரவில்லை. உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இது தனக்கு பெருமளவு பின்னடைவாக இருக்கும் என தி.மு.க. நினைக்கிறது. எனவே, இந்தக் கலவரத்தின்  பின்னணியில் தி.மு.க. இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செல்கிறது. எந்த பிரச்னைக்கும் அறிக்கை கொடுக்கும் கருணாநிதி இதற்கு அறிக்கை கொடுக்காததை  காரணமாகச் சொல்கிறார்கள். ( நன்றி குமுதம் ரிப்போர்ட்டர் )
அதுமட்டுமா, சொத்துப் பறிப்பு வழக்கில் சிறை சென்றவர்களை திரும்பவும் கைது செய்தால் போராட்டம் செய்வோம் என்று மிரட்டல் அறிக்கைகளை திமுகவினர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குற்றம் செய்தால் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல், இப்படி அறிக்கை விடுவது அப்பட்டமான மிரட்டல். அரசு அறிக்கை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொத்துப் பறிப்பு வழக்குகளை மட்டுமே போட்டுக் கொண்டிருப்பதை விட சொத்துக்குவிப்பு வழக்குகளையும் விரைவில் அரசு போடுமா என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு.
கேபிள் டிவியை தன் காலடியில் வைத்து, கொடுங்கோல் ஆட்டம் போட்ட சன் டிவிக்கு ஆப்பை அடித்த அம்மாவை தமிழக மக்கள் பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். டிடிஎச் சர்வீசுக்கு 30% பர்சண்டேஜ் வரி மட்டும் போதாது என்றும் 75% வரி போட வேண்டும் என்றும் சொல்கின்றார்கள்.
தகுதியற்ற தலைவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வந்தால் மக்கள் பணம் என்ன ஆகும் என்பதை சிஏஜி சுட்டிக்காட்டி இருக்கிறது. அன்னாக்கள் இப்படியான தவறான ஆட்சி செய்பவர்களிடமிருந்து நஷ்டக் கணக்கை வசூலிக்க சட்டம் இயற்ற போராட வேண்டியது காலத்தின் அவசியம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...