Friday, September 23, 2011

2ஜி விவகாரத்தில் புதிதாக சிக்கியுள்ள சிதம்பரம்!


2ஜி ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்பிருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக அவர் பதவி விலக வேண்டுமென பாஜக உட்பட பிரதான எதிர்க்கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த மார்ச் மாதம், பிரதமருக்கு, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதக்குறிப்புக்களில், ப.சிதம்பரம் வலியுறுத்தியிந்தால், 2ஜி ஸ்பெக்ரம் உரிமங்களை ஏலம் மூலம் விற்பனை செய்திருக்க முடியும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள உத்தேச இழப்புக்களை தவிர்த்திருக்க முடியும் என தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த கடிதம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், ஊழலை முன்கூட்டியே தடுக்க கூடிய சந்தர்ப்பமிருந்தும் ப.சிதம்பரம் தவறிழைத்துள்ளதால், 2ஜி ஊழலுக்கு சிதம்பரமும் பொறுப்பேற்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தயவை சிதம்பரம் நாடியுள்ளார். ஐ.நா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள பிரதமரை, அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது இந்த விவகாரத்தில், தான் நியூயோர்க்கிலிருந்து எதிர்வரும் 27ம் திகதி டெல்லி திரும்பும்வரை பொறுமையாக இருக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 'ப.சிதமரத்திற்கு 2ஜி விவகாரத்தில் தொடர்பு உள்ளது அம்பலமாகியுள்ளதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவியை உடனடியாக அவர் இராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...