Sunday, September 25, 2011

2ஜி நெருக்கடி: ப.சிதம்பரத்துடன் தொலைபேசியில் பிரணாப் ஆலோசனை

2ஜி விவகாரத்தால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எழுந்துள்ள நெருக்கடியை தொடர்ந்து அவருடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தொலைபேசி மூலம் ஆலோசித்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேட்டை அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் என்று தற்போதையை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானதால்,சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயார்க் வந்த பிரதமரை சந்திப்பதற்காக பிரணாப் வாஷிங்டனில் இருந்து நியூயார்க் வந்துள்ளார்.

இந்நிலையில் பிரதமருடன் பேசுவதற்கு முன்னதாக ப.சிதம்பரத்தை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பிரணாப் முகர்ஜி, 2ஜி விவகாரம் தொடர்பாக அவருடன் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பிரதமருக்கு தாம் எழுதிய கடிதம் குறித்தும் சில விளக்கங்களை அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமரை சந்தித்த பின்னர், 2ஜி விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் முகர்ஜி பேசக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சிதம்பரம் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பிரதமர் ஏற்க மறுத்துவிட்டார்.என்னுடைய அமைச்சர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...