மத்திய உளவு அமைப்புகளிடமிருந்து கிடைத்த அவசர எச்சரிக்கை காரணமாக, மும்பை விமான நிலையம் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலையில் இருந்து ‘ரெட் அலர்ட்’ நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவுவரை சாதாரண பாதுகாப்பு ஏற்பாடுகளே செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு நடைமுறைகள் அதிகாலை 2 மணிக்கு மாற்றப்பட்டன.
பெயர் தெரிவிக்கப்படாத மேலைநாட்டு உளவு அமைப்பு ஒன்று (சி.ஐ.ஏ?) , மத்திய உளவுத்துறைக்கு இந்த விஷயத்தில் உளவுத் தகவல் ஒன்று கொடுத்திருப்பதாக தெரியவருகின்றது.
“மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தாக்குதல் ஒன்று நடாத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. குறிப்பிட்ட தாக்குதல், விமான நிலையக் கட்டடம் மீதான தாக்குதலாக இருக்காது. ஆனால், ‘விமானங்கள் தொடர்பான’ தாக்குதலாக இருக்கலாம்” என்பதே சென்ட்ரலுக்கு கிடைத்துள்ள உளவுத் தகவல் என்று கூறப்படுகின்றது.
விமானங்கள் தொடர்பான தாக்குதல் என்றால், மும்பை விமான நிலையத்துக்கு வரும் விமானங்களா, அல்லது அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானங்களா என்பதில் மத்திய உளவு அமைப்புகள் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
காரணம், மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுக்கமாக மாற்றினாலும், மும்பை விமான நிலையத்துக்கு வரும் விமானங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. அது, அந்தந்த விமானங்கள் எங்கிருந்து வருகின்றனவோ, அந்தந்த விமான நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு இறுக்கமாக உள்ளன என்பதில் தங்கியுள்ளது.
விமான நிலையத்துக்கு வெளியே மகாராஷ்டிரா போலீஸ் பாதுகாப்பும், விமான நிலைய வளாகத்துக்குள் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அருகிலுள்ள ஜூஹூ விமான நிலையமும் கடும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறு லைட் ஏர்கிராஃப்ட்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அந்த விமான நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
சர்வதேச விமான நிலையத்தைவிட, அந்த சிறிய விமான நிலையமே தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு சுலபமானது என்ற நிலை நேற்றுவரை இருந்தது. இன்று அதிகாலையில் இருந்து அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்துவரும் சில தினங்களுக்குள் நீங்கள் மும்பை விமான நிலையம் ஊடாக பயணிக்க வேண்டியிருந்தால், போர்டிங் நடைமுறைகள் வழமையைவிட அதிக நேரம் எடுக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

No comments:
Post a Comment