ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு, கருணாநிதியை கன்னாபின்னாவென சாடியுள்ளார். ஏற்கனவே ஒருமுறை கருணாநிதியை தனிப்பட்ட முறையில் விமர்சித்திருந்த மார்கண்டேய கட்ஜு, முதலமைச்சர் ஜெயலலிதா விவகாரத்திலும் கடுமையாக சாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்கண்டேய கட்ஜுவின், பேஸ்புக் பதிவு இதோ...
"என்ன மாதிரியான மனிதர் இந்த கருணாநிதி...?", "அவருக்கு அடிப்படை நாகரீகம் தெரியாதா...?" மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அவர் கேட்டிருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை கேட்டிருப்பது மனிதாபிமானமற்ற முறையல்லவா? இது வெட்கப்படக் கூடிய கீழ்த்தரமான செயலாகும். இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகவும் ஆட்சேபனைக்குரியதாகும். இதையெல்லாம் கூறும் அவருக்கு நாகரீகம் இல்லாததையும், இழிவான (Vile) நடத்தையையும் காட்டுகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உண்மையில் உடல் நிலை சரியில்லைதான்... அவருடைய புகைப்படங்களைக் கேட்பதை நிறுத்தி விட்டு, அவர் விரைவில் நலம் அடைய மட்டுமே அவர் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அரசியல், காரணங்களுக்காக இவர் எந்த நிலைக்கு வேண்டுமானலும் இறங்குவார் என்பதை இது காட்டுகிறது என கருணாநிதியை தனிப்பட்ட முறையில் காய்ச்சு... காய்ச்சு... என வறுத்தெடுத்திருக்கிறார் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு. ஏற்கனவே ஒரு முறை சொத்து வழக்கில் ஜெயலலிதா பெங்களூருவில் இருக்கும்போது, கருத்து கூறிய கருணாநிதிக்கு இதே போன்று கண்டனம் தெரிவித்திருந்தார் மார்கண்டேய கட்ஜு என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment