HONEY MOON (ஹனிமூன் – தேனிலவு) பெயர் வந்த வரலாறு! – சுவாரஸ்யத் தகவல்கள்
ஹனிமூன் (தேனிலவு) பெயர் வந்த வரலாறு! – சுவாரஸ்யத் தகவல்கள்
புதுமண தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவிற்கு ஹனிமூன் என்று பெயர்வரக் காரணம் திருமணமான
ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு
தான். தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனி மூன். ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் தான் இருந்து ள்ளது. அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர். டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிக ளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம். இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர்.

எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்தி
ற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில்இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனை த்திலும் உண்டு. மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவ சாயிகளின் வழக்கம். ருமேனிய மக்கள் புதுமண பெண்ணின் முகத்திலும், உடலிலும் தேனை தடவிக்கொண்டு முதலிரவை கொண்டாடு வார்கள்.

பலகாரங்களை தேனில் தொட்டு மணமக்கள் சாப்பிடுவது பால்கன்
நாடு களில் உள்ளமரபு. ஒரு கோப்பையில் தேனை வைத்துக்கொண்டு மண மகனும் மணமகளும் மாறிமாறி பருகுவது சீனர்கள் வழக்கம். இப்படி புது ப்பெண், மாப்பிள்ளைக்கு பல தரப்பட்ட பழக்கங்களை தேனை க்கொண்டே உருவாக்கியுள்ளார்கள்.


.
No comments:
Post a Comment