நாம் நமக்குள் எதிர்ப்பு சக்தியான நிலைகள் எத்தனையோ உணர்வை எடுத்துத்தான் மனித உடலைப் பெற்றிருகின்றோம். தீமை என்ற உணர்வுகளை நுகர்ந்தால் நம் மனித உடலுக்குள் அது எதிர்க்கும் சக்திகள் நிறைய உண்டு.
எதைப் பார்த்தாலும் உடனே கவலை, எதைப் பார்த்தாலும் வேதனை, எதைப் பார்த்தாலும் சங்கடம் இதைப் போன்று இருப்பவர்கள் உடலில் அந்த எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
இப்படிப்பட்டவர்கள் உடலில் அந்த எதிர்ப்பு அணுவின் சக்தி குறைவாகிவிட்டால் நுகரும் உணர்வெல்லாம் நுகர்ந்த உணர்வுக்கே அடிமையாகி அதனால் கடும் வேதனையாகும் நிலை வருகின்றது. அப்பொழுது அது நோயாக மாற்றுகின்றது.
உதாரணமாக ஒருவருக்கு மாற்றுக் கிட்னி பொருத்த வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது இரண்டு உடலின் உணர்வுகளையும் இணையச் செய்தல் வேண்டும்.
ஏனென்றால் இன்னொரு உடலிலிருந்து கிட்னியை எடுத்து வைக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் இந்த உடலுக்குள் பிரித்துவிடும். இது தடுத்துவிட்டால் இணைத்துக் கொண்ட கிட்னிக்கு இணையாது.
இணையவில்லை என்றால் பிரிந்துவிடும். அதற்காக வேண்டி நடு மையமாகும் நிலைகளில் இதற்குச் சமமான நிலையில் ஆக்குவதற்காக இந்த உடலில் எதிர்ப்பு சக்திகளைக் குறைப்பார்கள்.
எத்தகைய உணர்வின் அணு கொண்டு இந்தக் கிட்னிக்குப் பொருத்தப்பட்டுள்ளதோ அதற்குத் தக்க விஞ்ஞானிகள் இதற்கு எதிர்ப்பு சக்தியான நிலைகளைச் சமப்படுத்தும் மருந்துகளைக் கொடுப்பார்கள்.
அப்பொழுது இந்த இரண்டு கிட்னியும் கொஞ்சம் ஒத்து வேலை செய்யும்.
இப்படி அவர்கள் இணைந்து அந்த மருந்தினைக் கொடுத்துக் கொண்டே வந்தால் அந்தக் கிட்னி சீராக இயங்கி வரக்கூடிய உப்புச் சத்தினை வடிகட்டக்கூடிய தன்மை வரும். உடல் ஆரோக்கியம் இருக்கும்.
ஆனால், இதில் சிறிதளவு வித்தியாசமாகிவிட்டாலும் சங்கடம் தான்.
அதன் காரணம் என்ன என்றால் இந்த இரண்டுக்கும் எதிர்ப்பு நிலை வரப்படும் பொழுது எதிர்ப்பு சக்தியை இந்த உடலுக்குள் குறைத்துவிடுவார்கள், அப்பொழுதுதான் சமமான நிலையில் பொருத்திய கிட்னி சீராக இயங்கும்.
ஆனால், காய்ச்சல் உள்ளவர்கள் மாற்றுக் கிட்னி பொருத்தியவர்களிடம் பேசினால் என்ன ஆகும். காய்ச்சல் உண்டாக்கிய கிருமி அது வலுவானது. இங்கே இந்த உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததால் அவர்களை உடனே தாக்கும்.
அதே சமயத்தில் இவர்கள் சாப்பிடும்போது வாழை இலையிலோ அல்லது தட்டிலோ சுடு தண்ணீர் விட்டுக் கழுவவேண்டும் கழுவவில்லை என்றால் அந்தக் கிருமிகள் ஒட்டிக்கொள்ளும்.
அப்படி ஒட்டிக் கொள்ளும்போது அந்தத் தட்டில் போட்டுச் சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததால் உடலுக்குள் கிருமிகள் சென்று சீக்கிரமாகவே அவர்களுக்கு நோய் வந்துவிடும்.
அதே மாதிரி காய்கறிகளையோ மற்ற உணவுகளையோ உட்கொண்டாலும் அவைகளைச் சமப்படுத்தும் மாத்திரை சாப்பிட வேண்டும் அதாவது “ஜீவ மாத்திரை” என்று சொல்வார்கள்.
அதைத் தினசரி சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளைக்குச் சாப்பிடவில்லை என்றாலும் அந்த 24 மணி நேரத்தில் வேறு கிருமிகள் வந்துவிடும்.
இவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தால் தான் மாற்றுக் கிட்னி பொருத்தியவர்கள் வாழ முடியும். இதையெல்லாம் விஞ்ஞான அறிவிலே செய்கின்றார்கள்.
(மாற்றுக் கிட்னி பொருத்தப்பட்டவர்களிடம் கேட்டால் இதையெல்லாம் அப்படியே சொல்வார்கள்)
விஞ்ஞானம் இன்று உடலைக் காக்கும் நிலைக்கு இதைச் செயல்படுத்துகின்றது. சிறிது காலம் வாழலாம்.
ஆனால், மெய்ஞானிகள் காட்டிய “உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலையையோ, என்றுமே நிரந்தரமாக விண்ணிலே ஒளியின் சரீரமாக வாழும் நிலையையோ" இன்னும் எட்டவில்லை இன்றைய விஞ்ஞானம்.
இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.
No comments:
Post a Comment