Friday, November 4, 2016

உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த இரவு நேர உணவுகள்

உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த இரவு நேர உணவுகள்


எந்த டயட் பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா? அல்லது டயட்டை பின்பற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? பெரும்பாலும் இரண்டாவது கேள்வி தான் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள். உண்மையில் காலையும், மதியமும் வஞ்சனை இன்றி உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப சாப்பிடலாம், தவறே இல்லை.

ஏனெனில், காலை மற்றும் மதியம் சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக நீங்கள் வெறுமென இருக்க போவதில்லை, ஏதேனும் வேலைகள் செய்துக் கொண்டுதான் இருப்பீர்கள். ஆனால், இரவு நேரத்தில், சத்தான, கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே ஒதுக்க வேண்டும்...

இனி, உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த இரவு நேர உணவுகளை பற்றி பார்க்கலாம்...

1. வாழைப்பழம் (Yes)
நம்மில் நிறை பேர் இரவு உணவை முடித்துவிட்டு ஓரிரு வாழைப்பழத்தை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால், இரவு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். மற்றும் உங்கள் உடலுக்கு தேவையான கலோரிகள் மொத்தமும் அந்த ஓர் வாழைப்பழத்திலேயே இருக்கிறது என்பது நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும்.


2. ஓட்ஸ் உணவு (Yes)
ஓட்ஸ் உணவு கொழுப்புச்சத்து இல்லாத ஓர் சிறந்த உணவு. இது, உடல் எடையை குறைக்க சீரிய முறையில் உதவும். அரை கப் ஓட்ஸ் உணவு போதுமானது.


3. தானிய உணவுகள் (Yes)
தானிய உணவுகளை வேகவைத்து சிறிதளவு உப்பு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே, உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்.

3. முட்டை (Yes)
இரவு நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேக வைத்த முட்டைகள் சாப்பிடலாம். வெள்ளை கரு மட்டும். வயிறு நிறையாவிட்டாலும், உடலுக்கு தேவையான சத்துகள் மொத்தமும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


4. கொழுப்பு நீக்கப்பட்ட பால் (Yes)
இரவு ஓர் டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்து வந்தால் ஓர் மாதத்திற்குள் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண இயலும்.


5. நொறுக்கு தீனிகள் (No)
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், அறவே மறக்க வேண்டிய உணவுகள் என்றால் அது நொறுக்கு தீனிகள் தான். இதனால் தான் பெரும்பாலானவர்களின் டயட் சீர்குலைந்து போகிறது.


6. கடின உணவுகள் (No)
இரவு நேரத்தில்... முழு சாப்பாடு, அதிகப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். இது உங்கள் உடல் எடையை மிக விரைவாக அதிகரிக்க செய்யும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.




7. மது (No)
இரவு நேரத்தில் மது அருந்துவது தான் உடல் எடை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இரவு நேரத்தில் மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்.


8. காபி (No)
சிலருக்கு காபி இல்லாத இரவும், பகலும் சாத்தியமற்றது. ஆனால், உண்மையில் இரவும் சரி, அதிகாலையும் சரி காபி குடிப்பது சரியான முறையல்ல. எனவே, முக்கியமாக இரவு தூங்கும் முன்பு காபியை பருக வேண்டாம். இரவு காபிக் குடிப்பதால், உங்களால் காலையில் விரைவாக எழ முடியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...