சமீபத்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலையாளிகளின் விடுதலைக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த ஒரு சம்பந்தமில்லை.
இன்று நாதுராம் கோட்ஸே தூக்கில் இடப்பட்ட நாள்.
கோட்ஸே கோழைத்தனமாக மனித வெடி குண்டை வீசி அப்பாவி பொது மக்கள் 20 பேர்களை கொல்ல வில்லை. வெடி குண்டை காரில் வைத்து அனுப்பவில்லை
கோட்ஸே யரைக் கொல்ல வேண்டுமோ அவரை மட்டுமே கொன்றுவிட்டு சுத்தி நின்ற அப்பாவிகளை சாக அடிக்கவில்லை..
கொலை செய்துவிட்டு ஓடி ஒளியவில்லை.
கையில் இருந்த துப்பாக்கியால் சுற்றி இருந்தவர்களை மிரட்டிவிட்டு தப்பிக்க முயலவில்லை.
ஆயில் டாங்கரில் ஒளிந்து அடுத்த மாநிலத்துக்கு தப்பிக்கவில்லை.
போலீஸ் நெருங்கியதும் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
வழக்கை நடத்த கட்டப்பஞ்சாயத்து வக்கீல்கள் புடை சூழ வரும் புகழ் பெற்ற வக்கீல் யாரையும் வைத்துக்கொள்ளவில்லை. தனது வழக்கிற்காக அவனே வாதாடினான்
வழக்கு நிதி என்று யாரையும் வசூலிக்க சொல்லவில்லை.
பொற்குவை தாரீர் என்று யாரையும் கூவ அனுமதிக்கவில்லை.
முக்கியமாக காந்தியைத் தாங்கி வந்த இரண்டு இளம் பெண்களுக்கு ஒரு சிராய்ப்பு கூட ஏற்படுத்தவில்லை.
கொலையை மிக மிக அருகில் நின்று பார்த்த நேரடி சாட்சிகளான அந்த அபலைகளைக் கோர்ட்டுக்கு இழுக்கவில்லை.
வழக்கு நடந்த போது நாள் தவறாமல் கோர்ட்டில் ஆஜராகத் தவறவில்லை.
வாய்தா மேல் வாய்தா வாங்கவில்லை.
கீழ் கோர்ட்டு தீர்ப்பு வந்ததும் உயர் நீதி மன்றம் சென்று Appeal செல்லவில்லை.
உச்ச நீதி மன்றம் செல்லவில்லை.
ரெவ்யூ பெட்டிஷன் போடவில்லை.
சீராய்வு மனு போடவில்லை.
ஜனாதிபதி விடம் கருணை மனு போடவில்லை.
தூக்கு உறுதியானதும் அதை நாள் கடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இறுதியாக யாரும் கோட்ஸேயைப் புரிந்து கொள்ளவுமில்லை.
கோட்ஸே தன்னை புரியவைக்க எந்த முயற்சியும் எடுக்கவுமில்லை.

No comments:
Post a Comment