Sunday, November 13, 2022

தயவுசெய்து கொலஞர் என்று சொல்லாதீர்கள் கருணாநிதி என்று குறிப்பிடவும்.

 தந்தை ஆட்சியை விட சிறப்பான ஆட்சி தருவாரென நம்பிக்கையோடு விடியல் ஆட்சியை எதிர்பார்த்தனர் மக்கள். நல்ல மெஜாரிட்டியோடு ஆட்சியில் அமர்ந்தார் ஸ்டாலின். ஆரம்பம் என்னவோ நன்றாக இருந்ததாக தோன்றுகிறது பிறகுதான் ஆட்டம் ஆரம்பமானது. தனயன் ஆட்சியை விட தந்தை ஆட்சியே என்பது போல் ஒவ்வொரு விஷயத்தையும் கையாண்டார் தனயன். ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக ஊன்ற வைத்தது திராவிட மாடல் ஆட்சி. அதிலும் பிராமணர்களை எதிரியாகவே பாவிக்கிறது திராவிட மாடல். கொலைக் குற்றவாளிகளை ஏதோ சாதனை படைத்தது போல் விடுதலையை கொண்டாடுவதும் முதல்வரே அவர்களை சந்திப்பதும் விருந்தளிப்பதும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள். டாஸ்மாக்கை மூடுவோமெனச் சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டு கல்யாணம் செய்ய நூறு பொய்கள் சொல்வதில்லையா என்று மனசாட்சியின்றி பேசும் தமக்கை. கலைஞர் தன் பிள்ளைகளை தன்னைவிட தன் பிள்ளைகள் பொய்மையின் வழியில் செல்ல வளர்த்திருக்கிறார். மக்காளின் தலையிலும் சுமைகளைச் சுமத்தி அதற்கும் முந்தைய அரசு மீதும் மோடி அரசு மீதும் பழி சுமத்தி திராவிட மாடல் அரசு மக்களுக்காகவே உழைக்கின்ற கட்சி என்ற மாய பிம்பத்தை உருவாக்குகிறது. பொய்யும் பித்தலாட்டங்களும் இரட்டை வேடங்களும் ஏறத்தாழ 60வருடங்களாக நீண்ட சினிமா போல் தமிழ்நாட்டு மக்களை ஏதோ போதையிலேயே வைத்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு

ஒரு படத்தில் வீரப்பா கூறுவார். நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று. அதைப்போல் வாரிசு அரசியலை ஊக்குவித்து தங்கள் குடும்பத்து வருமானத்தை பெருக்குவதிலேயே நேரத்தைக் கடத்துகிறது இந்த திராவிட மாடல் அரசு
மக்கள் இனியாவது முழித்துக் கொள்ள வேண்டும். தமிழக இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலை வாய்ப்பு பெருக வேண்டுமானால் மாற்றம் அவசியம். தற்போது தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், கட்டிட வேலைகள் எல்லாவற்றிலும் வட மாநிலத்தோர் வேலை செய்கின்றனர். சென்னையிலேயே ஹிந்தி தெரியாவிட்டால் சமாளிப்பது கஷ்டம். ஆனால் திராவிட மாடல் அரசு ஹிந்தியை அனுமதிக்க மாட்டோமென போராட்டம் நடத்திவிட்டு ஹிந்தி பேசும் மக்களை பெருவாரியாக பணி அமர்த்துவதை வேடிக்கை பார்ப்பது இரட்டை வேடமில்லையா?
ஒரு பக்கம் கோவில்களை இடித்துவிட்டு அறநிலையத்துறையில் கோடிக்கணக்கான சொத்துக்களையும் பணத்தையும் சுரண்டிவிட்டு நாங்கள் ஹிந்துக்களுக்கு எதிரானவர்களில்லை என்று சொல்லி இரட்டை வேடம் போட்டால் இன்று பிறந்த குழந்தைகள் கூட நம்பாது
இனியாவது வரும் தேர்தல்களில் வாரிசுகளை ஊக்குவிக்கும் கட்சிகளை ஆதரிக்காமல் மக்களின் எதிர்கால நலனில் உண்மையான அக்கறையோடு இரட்டை வேடம் பூணாமல் நிஜ முகத்தோடு வரும் அரசியல் கட்சிகளை ஆதரிப்போம். அடுத்த தேர்தலிலாவது மாற்றத்தை மக்கள் கொண்டு வராவிட்டால் தமிழகத்தை தெய்வமே வந்தாலும் காப்பாற்ற முடியாது.

எல்லாம் சரி, அது என்ன தந்தயைவிட நல்லாட்சி கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது. தந்தை நல்லாட்சி கொடுத்தாரா? மனதை தொட்டு சொல்லவும்.தந்தை நல்லாட்சி தரவில்லை. ஆனால் ஸ்டாலின் செய்வதுபோல் கோவில்களை இடிக்கவில்லையே. ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கவில்லையே.............

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...