Sunday, November 13, 2022

ஒரு அனுபவம்.

 வாரம் சுமார் 40 பேருக்கு வீட்டில் தயாரித்த உணவை பசித்தோருக்கு அளிப்பது வழக்கம்…கடந்த வாரம்.. குப்பை எடுத்து பிழைக்கும் ஒரு பெண்ணிடம் உணவுப்பொட்டலத்தை கொடுக்கும்போது அவர் கேட்டார்…” சாமி சாப்பாடுங்களா? “

“ஆம்”… என்றேன்( சாப்பாடு விநியோகிக்கும் முன்பு ஒரு பொட்டலத்தை சுவாமி படங்கள் முன்பு வைத்து வணங்குவது வழக்கம் )
அந்த பெண் சொல்கிறார்..” வேண்டாங்க… நாங்க அதை சாப்பிடமாட்டோம்..”
அப்போது தான் கவனித்தேன் அந்த பெண் கழுத்தில் சிலுவை தொங்கியதை!
நான் ஆச்சரியப்படவில்லை.. நண்பர் அந்த அனுபவம் உண்டு, அதனால்!
என்னை யோசிக்கவைப்பது…
சாதாரண குப்பை பொறுக்கும் பெண்ணிடம் இந்த “சாமிக்கு படைத்தது சாத்தான் உணவு “ என்ற விஷம் விதைக்கப்பட்டிருக்கும்போது…
ரம்ஜானுக்கு இன்னும் பிரியாணி வரவில்லை பாய் என்று முகமறியா ஃபேஸ்புக் நண்பர்களிடம் பிச்சை எடுக்கும் இந்துக்கள்….
கிறிஸ்துமஸ் கேக்கிற்கு அலைபவர்களை …
வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் நடக்கும் பூஜையில் வைக்கும் பொரிகடலை நைவேத்தித்தியத்தை மறுக்கும் அல்லது “பூஜையில் வைக்கும் முன்பு எனக்கு தனியாக எடுத்து வைத்துவிடு” என கேட்கும் கிறித்தவ சக ஊழியரை பார்த்துள்ளேன்..
( there are exemptions… I admit )
இப்போதைய இந்து இளைய தலைமுறை ..நமது கலாச்சாரம் பற்றி எந்த புரிதலும் இல்லாமல் வளர்ந்து வருகிறார்கள்…
ஞாயிறு சர்ச் , வெள்ளி மசூதிக்கு போகாத மாற்று மத இளைஞர்களே கிடையாது…
அதுவும் மசூதிகளில் நடக்கும் “ மூளைச் சலவையில் “ மயங்காத …
சர்சுகளில் வருடம் 365 நாட்களும் அந்த ஒரே ஒரு கறுப்பு கலர் புத்தகத்தையே திரும்ப திரும்ப படித்து இந்துக்களை மட்டும் சாத்தானாக உருவகப்படுத்தும்….சூழலில்..
குலதெய்வம் கோவில் என்பது நமது இந்துதர்மத்தின் மகத்தான விஷயம் என்ற புரிதல் இல்லாமல் வளர்க்கப்படும் நமது இளைய தலைமுறை…
தங்களது மத அடையாளங்களை தவறோ, சரியோ … புர்கா, தொப்பி, கணுக்கால் மேலே கட்டிய லுங்கி, பைஜாமா என்று….
கழுத்தில் சிலுவை இல்லாத, முக்காடு போடாமல் சர்ச் போகும்… அவர்களை காணவே முடியாது !
தெருவில் குப்பை பெருக்கும் ( rag picker) , மதம் மாற்றப்பட்ட பெண்ணிற்கு உள்ள மதப்பற்று …
நமது இளைய தலைமுறையினரிடம் இல்லவே இல்லை…

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...