திக்..திக்.. அந்த ஒரு மணிநேரம். மோடி ரூட் மாறுது...சட்டென தயாரான எஸ்.பி... திண்டுக்கல்லில் என்ன நடந்தது... மோடியுடன் பயணித்த அண்ணாமலை..
கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி நேற்று முதல்நாள் திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். முன்னதாக சென்னையில் இருந்து மைசூரு செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி பெங்களூரில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்விற்கு மதுரையில் இருந்து வரும் போது பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்தார். ஹெலிகாப்டரில் வந்து திண்டுக்கல்லில் இறங்கி அங்கிருந்து 2 கிமீ காரில் பயணம் செய்தார். ஆனால் அவர் திரும்பி செல்லும் போது வானிலை மோசமாக இருந்தது. இதை முன்பே கணித்து இருந்தனர். இதனால் மோடி திரும்பி வரும் போது காரில் வந்தாலும் வருவார் தயாராக இருங்கள் என்று அறிவிக்கப்பட்டது. திண்டுக்கல் எஸ்.பிக்கு இதற்காக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதோடு உயர் அதிகாரிகளும் தயார் நிலையில் இருந்தனர். ஒருவேளை மோடி காரில் வந்தால் ரெடியாக இருக்க வேண்டும் அந்த நெடுஞ்சாலை மொத்தமும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திண்டுக்கல்லுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை திண்டுக்கல்லில்தான் இருந்தார். ஆனால் அவர் ஹெலிபேட் அருகே இருந்தார்...
பிரதமர் மோடி திரும்பி செல்கையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பாஜக நிர்வாகிகளுடன் அவர் நின்றார். பாஜக நிர்வாகிகளுடன் நிர்வாகியாக அவர் நின்ற நிலையில் திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைக்கு வரும்படி தகவல் வந்ததும் வேகமாக அங்கு சென்றார். அங்கு பிரதமர் மோடி காரில் செல்வதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த தகவல் உடனடியாக திண்டுக்கல் மற்றும் மதுரை எஸ்.பிக்கு தெரிவிக்கப்பட்டது.
என்ன நடந்தது?
பிரதமரின் கான்வாய் செல்ல உடனே கிளியரன்ஸ் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி செல்லலாம். சாலை பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின்பே பிரதமரின் கான்வாய் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. சமீபத்தில் குஜராத்திற்கு பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது குஜராத் முதல்வர் புபேந்திரபாய் பாட்டீல் மோடியை சந்தித்தார்.
பின்னர் அவர் மோடியுடன் கான்வாய் காரில் செல்வதாக இருந்தது. ஆனால் பிரதமரின் காரில் வேறு யாரும் செல்ல முடியாது என்று கூறி அவரை அனுமதிக்கவில்லை. ப்ரோடோகால்படி அவருடன் வேறு யாரும் செல்ல முடியாது என்று அனுமதிக்கவில்லை. ஆனால் முதல்வருக்கே வழங்கப்படாத அந்த மரியாதையை நேற்று முதல்நாள் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. இது மிகப்பெரிய விஷயம் ஆகும்.
கான்வாய் காரில் உடன் வந்த அண்ணாமலையுடன் பிரதமர் மோடி பல விஷயங்களை இந்த பயணத்தில் ஆலோசனை செய்தார் . எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவம் இது என்று அண்ணாமலை கூறினார். முன்னதாக அண்ணாமலை, மோடி வரும் போது சாலை ஓரம் நின்று வரவேற்றார். இதனால் அண்ணாமலையை ஒதுக்கிவிட்டனர் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வைத்தனர். இந்த நிலையில் அண்ணாமலைக்கு மிகப்பெரிய மரியாதையை மோடி கொடுத்துள்ளார். அண்ணாமலை மீது மோடி வைத்து இருக்கும் மதிப்பு காரணமாக இந்த மரியாதையை அவர் வழங்கியதாக கூறப்படுகிறது....

No comments:
Post a Comment