Wednesday, November 9, 2022

மக்கள்பார்வைக்குசிலஉரத்த_சிந்தனைகள் .

 ரெண்டுநாளைக்கு முன்னால, எல்ல பத்திரிகைகள்லயும் ஒரு பரபரப்புச்

செய்தியைப் பார்த்திருப்பீங்களே!


"கவர்னர் ரவி டெல்லி விரைந்தார்"

என்று பயமுறுத்தலா செய்தி போட்டிருந்தாங்க. ஆனா உண்மையிலேயே அவர்தான்

பயந்துபோய் டெல்லிக்குப் பறந்திருக்கார். ஏன் தெரியுமா?


R.T.I. சட்டப்படி, வக்கீல் ஒருத்தர், தமிழ் நாடு ஆளுனர் ஆபீசுக்கு,  மூணு  கேள்விக்குப் பதில் கேட்டு மனுப் போட்டிருந்தார்.


"போற எடத்தில எல்லாம் சனாதன தர்மம் பத்தி ஆளுனர் பேசறார்.  சனாதனம்னா என்ன?" இது மொதக்கேள்வி!


"ஆளுனர் ரவி R.S.S உறப்பினரா," என்பது ரெண்டாவது கேள்வி!


"மாநில அரசின் ஒப்புதலின்றி அவர் போகிற இடத்திலேல்லாம் அவர் இஷ்டத்துக்குப் பேசலாமா," என்பது மூன்றாவது கேள்வி!


ராஜ்பவன் செக்ரட்ரியெட் அதைக் 

கண்டுக்கம விட்டிருச்சு.. சட்டப்படி பதில்

குடுத்தாகணும்ங்கிற நெருக்கடி வந்தப்ப,

இப்படி ஒரு பதிலை குடுத்திருக்கு.

அதில் என்ன சொல்லி இருக்குன்னா........


"சனாதனம் பற்றிய விளக்கம் எதுவும்

எங்கள் கோப்பில் இல்லை" இந்த ஒத்தைப் பதிலோடு கதையை முடிச்சிருக்கு.


மத்த ரெண்டுக்கும் எந்த பதிலும் இல்லை. அதுமட்டுமில்லாம,சட்டப்படி அனுமதிக்கப் பட்ட நாட்களைவிடக் கூடுதலா 20 நாள் தாமதமாக இந்த பதில் தரப்பட்டிருக்கிறது.


மனுதாரர் விடுறமாதிரி  இல்லை!

டெல்லிக்கு அப்பீலைத் தட்டி விட்டிருக்கார். 20 நாள் லேட்டுக்கு 25,000/- ரூபாய்வரை கவர்னருக்கு, அபராதம் விதிக்கலாம்.


அடுத்தது மூணு கேள்விக்கு ரெண்டுக்கு

பதில் தராததும்,   ஒரு கேள்விக்கு வெண்டக்காயை வெளக்கெண்ணை ஊத்தி வதக்கினாப்ல சொன்ன பதிலும், திருப்தியா இல்லைங்கிறதைச் சொல்லி

கூடவே, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் கேட்டிருக்கார்!

இப்பப் புரியுதா?


டெல்லியில இருந்து வந்ததும், ஆளுனர்

திருநள்ளார் இல்லாட்டி குச்சனூர் போவார்னு நெனைக்கிறேன்; ஏழறை நாட்டான் பார்வை இனிமே தான் ஜோலியைத் தொடங்கும்!


இதைத்தான் நுணலும் தன் வாயால் 

கெடும்ன்னு சொல்லிருக்காங்க!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...