நீங்கள் சொல்ல சொல்ல இ மெயில் தானாகவே எழுதப்பட் டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாய ம் இல்லை. பேச்சறியும் மென் பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந் தால், நாம் சொல்வதை அது பு ரிந்து கொண்டு எல்லாவற் றையும் வாக்கியங்களாக எழு தித்தரும். இப்போது இந்த வசதியை
உங்கள் உலாவிக்கே (பிரவுசர்) கொண்டு வந்திருக்கிறது டிக்டே ஷன்.இயோ இணைய தளம்.
இந்த தளத்தை உங்கள து நட்பான உதவியாள ர் என்று வைத்துக் கொ ள்ளுங்களேன். இதில் நீங்கள் இமெயிலை டிக்டேட் செய்யலாம் . கட்டுரை மற்றும் ஆவ ணங்களை டிக்டேட் செ ய்யலாம். நீங்கள் சொ ல்லுவது இருந்தாலும் அதை எழுத்து வடிவில் டைப் செய்து தருகிறது இந்த தளம். இதை பயன் படுத்துவதும் எளிதானது தான். இதன முகப்பு பக்கத்தில் மாணவர்களின் நோட்டு பக்கம் போல கோடுகளை கொண்ட குறிப்பேடு இரு க்கிறது. அந்த குறிப்பேட்டின் கிழே உ ள்ள, டிக்டேட் செய்யவும் பகுதியை கி ளிக் செய்து விட்டு , யாரோ நீங்கள் சொ ல்வதை எல்லாம் கேட்க காத்திருப்பது போல மளமளவென்று சொ ல்ல வேண்டும். இப்படி சொல்லப்படு வதை எல்லாம் அந்த குறிப் பேடு டைப் செய்து தரும்.
இமெயில் அனுப்புவதாக இருந்தால் , அதை டைப் செய்யாம லே இப்படி டிக் டேட் செய்து அனுப்பிவிடலாம். அட நன் றாக இருக்கிறதே என வியக்கத்தோ ன்றுகிறாதா?
பொதுவாக பேச்சறியும் மென் பொருளை தனியே வாங்கி பயன்படுத்த வேண்டும். ஆ னால் இந்த தளமோ அதை தா னே உள்ளீடு செய்து ,நம் பய ன்பாட்டிற்கு தருகிறது. இந்த வசதி கூகுல் கூரோமிலேயே இருப்பது தான் . அது எத்த னை பேருக்கு தெரியும் எனத் தெரியவில்லை. ஆனால் இந் த தளம் கூகுல் குரோமில் உ ள்ளடங்கியுள்ள பேச்சறியும் மென்பொருள் வசதியை எல்லோரும் பயன்படுத்தக்கூடிய அழகான சேவையாக எளிதாக்கி தந்திருக்கி றது. பணிச்சுமை மிக்கவர்களுக்கும் ,எழுதுவ தை ஒரு வேலை யாக நினைப்பவர்களுக்கும் இந்த சேவை பேரூதவியாக இருக்கும்.
இவ்வளவு சொல்லிவிட்டு, இப்போது ஏமாற் றம் தரக்கூடிய ஒரு தகவல். இந்த டிக்டேஷன் சேவையை ஆங்கிலத்தில் தான் பயன்படுத்த லாம். இந்தி , தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி களில் பயன்படுத்தும் வசதி இல்லை. இத்த னைக்கும், இந்தி யரான அமீத் அகர்வால் தான் இந்த சேவையை உருவாக் கியுள்ளார். அப்படி யும் இந்தியும் இல்லை , தமிழும் இல்லை. அகர்வால் வாருங்கா லத்தில் இந்திய மொழிகளை கொண்டு வருகி றாரா என பார்க்கலாம். இல்லை கூகு லு குரோம் அதை செய்ய காத்த்ருப்பாரா என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment