Sunday, October 29, 2017

இசைஞானியினின் இசையில்.......

** இசைஞானியின் குரலில் *** *** எனக்கு பிடித்த பாடல்கள் ** *இசைஞானியின் இசை மேடையில்*
*1985*ல்,*கோவை தம்பி*அவர்கள் தயாரிப்பில்,திரு.மணிரத்னம்* இயக்கத்தில்வெளியான. *இதய கோயில்*படத்தில் இடம்பெற்ற இப்பாடல்,இசைஞானியினின் இசையில், அவர் பாடிய பாடல்களில் மிக சிறந்த பாடல் என்று கருதுகிறேன்.
இப்படத்தில் இப்பாடலை SPB sir பாடி இருந்தாலும்,இசைஞானியின் குரலில் இந்த பாடலில் ஒருவித இனம்புரியாத ஈர்ப்பு, இருக்கும்.
**** ஒரு சிறிய பிளாஷ்பேக் ****
தயாரிப்பாளர் கோவை தம்பி- இளையராஜா கூட்டணியில் அணைத்து படங்களும் சூப்பர் ஹிட்.
*இதய கோயில்*படத்திற்கு முன்பாக,இவர்கள் கூட்டணியில் *பயணங்கள் முடிவதில்லை*, *உதயகீதம்*போன்ற படங்கள் இசைஞானியின் இசையால் வெற்றிபடங்களாக ஆகியிருந்த சூழ்நிலையில்,இதயகோயில் பாடல் பதிவின் போது நிகழ்ந்த சில கசப்பான நிகழ்வுகள் காரணமாக,இப்படத்தின் பாடல்களை கேட்டு,கோவைத்தம்பி அவர்கள் திருப்தி அடையவில்லை.
இசைஞானி இளையராஜா அவர்கள் தயாரிப்பாளர் கோவைத்தம்பி அவர்களை சமாதானப்படுத்தி, பாடல்கள் நன்றாக உள்ளது,நமது முந்தய படங்கள் போலவே இந்த படத்தின் பாடல்களும் பேசப்பட்டு படம்,வெற்றிப்படமாக அமையும், என்று உறுதியளித்ததன் பேரில், கோவைத்தம்பி அவர்கள் அரைமனத்துடன் சம்மதித்தார்.
* இதய கோயில் *படம் பாடல்களுக்காவே வெற்றிப்படமாக,மாறியது தமிழ் திரைஉலகம் அறிந்ததே.இதயக்கோயில் படத்தின் பாடல்கள் இசைஞானியின் இசைக்கான படங்களில் ஒன்றாகிப்போனது.
*அதன்பின் 7 வருடங்களுக்கு பின் 1992 ல் தான் கோவைத்தம்பியின் படத்திற்கு ( உன்னை வாழ்த்தி பாடுகிறேன்)இசைஞானி இசையமைத்தார்.

ஓம்நமசிவாயாபோற்றிரு வாழ்க வளமுடன்.



*10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் கண்டு பிடிப்பு .*.! அமெரிக்கா வில்– *எப்படி சாத்தியம்.*
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.
அதெப்படி *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள்.
சிவபூமிதான் நாம் வாழும் பூமி .
இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.
தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர்
இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.
குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.
இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய *மக்கீஸ்வரம் என்ற சிவாலயம் இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது*.
*இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.*
மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)
தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.
பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.
நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)
திருக்கேதீஸ்வரம்,
திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)
ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.
உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்
புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,
ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,
வாழ்க்கையையும்,
பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).
வட அமெரிக்காவில்கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்
பட்டுள்ளது.
இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.
கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.
பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.
சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.
சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.
எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.
எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்
சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.
சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.
அதிகம் பகிருங்கள் சிவனின் பெருமையையும் தமிழின் பெருமையையும் உலகறியட்டும்.
*நமசிவய*
*திருச்சிற்றம்பலம்*
Image may contain: plant and outdoor

இவன் தன்னை ஒரு அறிவு ஜீவி என நினைக்கிறான்....

என்ன ஒரு அபத்தமான ஒப்பிடுதல் . காசுக்காக இவர் என்ன வேண்டுமானாலும் சொல்வர் போல் உள்ளது. நல்ல ஆன்மிக செய்திகளை சேர்க்க நம்மிடையே பலர் உண்டு. இவரை தயவு செய்து புறக்கணிக்கவும்.

ஒருவர் எல்லா விசயங்களிலும் புத்திசாலியாகத்தான் இருப்பார் என்று எண்ணுவது தவறு...!!Image may contain: 1 person, text

முருக பக்தர்களுக்கு மட்டுமே.



ஒரு சின்ன ஆதங்கம் அவ்வளவே...
திருப்பதிக்கும், விநாயகருக்கும், சாய் பாபாவுக்கும் தரும் முன்னுரிமையை நம் தமிழ்க் கடவுள் முருகருக்கும் தாருங்கள் தமிழர்களே...
வந்தோர் எல்லாம் வள்ளலாய் மாறி, ஆளுக்கொரு பக்கம் நான் இந்து என பரவி விட்டனர்.
வடநாடுகளில் ஏது முருகன் பண்டிகை.
திராவிட ஆட்சியில் வளர விடவில்லை என பொறுப்பேற்கக் கூடாது.
அப்படி இருப்பின் ஏன் மற்ற கடவுள் வழிபாடு வளர்ந்தது...?
ஆனால், எத்தனை வட நாட்டுக் கோயில்களில் முருகனின் பிரகாரம் உள்ளது.
700 ஆண்டு முன் வந்த முகமது நபி வழி வந்த முஸ்லிம் மதம் இமயம் முதல் ராமேஸ்வரம் வரை.
400 ஆண்டு முன்வந்த கிறித்தவ மதமும் அப்படியே...
ஆனால் தமிழ் பிறந்த ஆண்டை, கல்தோன்றா முன் தோன்றிய காலம் என்கிறோம்.
இத்தனை பழமையான, வளமையான, செழுமையான முருகப் பெருமானை போற்றிப் பாராட்ட பெரிதாக வளர்க்க ஆளேதுமில்லை இன்று...
வாரியார் வாழ்ந்த நாளோடு போச்சு, முருகனின் புகழ் வீச்சு...
ஐயப்பனின் வழிபாட்டில் ஆரம்பித்து, சாய்பாபா, பிள்ளையார் என ஏகோபித்த ஆரவாரம் இங்கு.
தமிழன் தன் வரலாறே முருகனின் முன்னிலைதான் என அறியாது நிற்கிறான்.
நினைத்தாலே ஒட்டும் விபூதியாய் வியாபிப்பவனை, முதன்மைப் படுத்துவோம்.
எத்தனை ஆன்மீகப் பாடலை கேட்டாலும், முருகனின் பாடலை ஓர்முறை கேட்டாலும், உருகா தமிழன் உண்டோ...
காரணம், நமது மரபு அவரது வழி.
குல தெய்வ வழிபாடும், குமரனின் வழிபாடும் முக்கியம் நண்பர்களே...
முருகர் நமது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம்.....
Image may contain: 2 people, people smiling, text

Saturday, October 28, 2017

எளிய முறையில் சரணாகதி விளக்கம்....

மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை

மாட்டுக்கு
உயிர், அறிவு இரண்டும் உண்டு
ஆனால் வண்டிக்காரன்
உயிரில்லாத வண்டியை
அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..
எந்த இடம் செல்ல வேண்டும் என்பதை
தீர்மானித்து
வண்டியை
செலுத்துவான்.
எவ்வளவு தூரம்
எவ்வளவு நேரம்
எவ்வளவு பாரம்
அனைத்தையும்
தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே!
அறிவிருந்தும்
சுமப்பது தானாக இருந்தாலும்
மாட்டால்
ஒன்றும் செய்ய இயலாது
அதுபோல
உடம்பு என்ற
ஜட வண்டியை
ஆத்மா, உயிர்
என்ற மாட்டுடன் பூட்டி
இறைவன் என்ற
வண்டிக்காரன் ஓட்டுகிறான்
அவனே தீர்மானிப்பவன்
அவன் இயக்குவான்
மனிதன் இயங்குகிறான்
எவ்வளவு காலம்
எவ்வளவு நேரம்
எவ்வளவு பாரம்
தீர்மானிப்பது இறைவனே
இதுதான்
நமக்காக
இறைவன் போட்டிருக்கும் DESIGN
இதுதான்
இறைவன் நமக்கு
தந்திருக்கும் ASSIGNMENT
இதை
உணர்ந்தவனுக்கு
துயரம் இல்லை
இதை
உணராதவனுக்கு
அமைதி இல்லை...

பெர்முடா #முக்கோணம் பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன #அதர்வண , #ரிக் வேதங்கள்.

* 23 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் மிக தெளிவாக 'பெர்முடா முக்கோணம்' போன்ற ஒரு பகுதியைப் பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
* 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே 'பிரமாண்ட புராணத்தில்' இதுபோன்ற பகுதியை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
* பூமியில் இருந்து உருவான கிரகம்தான் செவ்வாய். அதனால்தான், பூமியின் மகன் ( son of bhumi) என்று சொல்கிறோம். அல்லது குஜா (kuja) என்றும் சொல்லப்படுகிறது. 'கு' என்றால் பூமி, 'ஜா' என்றால் பிறந்தவன் என்பது அதன் பொருள். இது சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் வார்த்தை.
* ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ள 'அஸ்ய வாம்ஸய என்னும் சூக்தத்தில் பூமியில் இருந்துதான் செவ்வாய் கிரகம் பிறந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி பிறந்த செவ்வாய் கிரகம், பூமியை விட்டு தனியாக பிரிந்து சென்றபோது, முக்கோண வடிவத்தில் பூமி மீது காயம் ஏற்பட்டுள்ளது. காயம்பட்ட பூமியில், தேவர்களின் மருத்துவர்களாகிய அஸ்வினி குமாரர்கள் இரும்பை காய்த்து ஊற்றி, அவ்விடத்தை சரி செய்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதனால், பூமி சற்று சாய்ந்து சுமார் 23 1/2 டிகிரி அளவுக்கு சாய்வான நிலையை அடைந்துள்ளது.
* பூமி சாய்வாக உள்ள பகுதியில்தான், இயற்கையாக இரும்பினால் உருவாக்கப்பட்ட காந்த ஈர்ப்பு சக்தியானது, எந்த பொருளையும் தன் வசம் ஈர்த்துக்கொள்கிறது. அத்துடன் அதிகளவு பனிமூட்டமும், உச்சக்கட்ட குளிர்ச்சியும் இப்பகுதியில் நிலவுகிறது.
* அதேபோல்தான் பூமியிலிருந்து, நிலவும் உருவாகி பிரிந்து சென்றுள்ளது.
#அதர்வண #வேதம்:
* அதர்வண வேதத்தில் பல அறிய கற்கள் மற்றும் பவளங்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக 'தர்பை கல்' என்னும் பகுதி, பெர்முடா முக்கோணத்தில் நிகழும் மாயையை ஒட்டியே அமைந்துள்ளன.
* 'தர்பை கல்' என்பது, உயர் அடர்த்தி கொண்ட நியூட்ரான் நட்சத்திரமாகும். இது மிக குறுகிய வடிவம் கொண்டது. இது ஒரு சக்தி வாய்ந்த மற்றும் ஆபத்தான கல்லாகும்.
* இந்த கல் உள்ள பகுதி, உயர்ந்த ஈர்ப்பு விசைகொண்ட ஒரு நிலமாக பார்க்கப்படுகிறது. இதற்கு ஈர்ப்பு விசை சக்தி அதிக அளவில் இருப்பதால், தர்பை கல்லின் மேல் பகுதியில் செல்லும் எந்த பொருளையும் கீழ் நோக்கி ஈர்க்ககூடிய அதிக சக்தியை பெற்றுள்ளது.
* இந்த 'தர்பை கல்'லிருந்து வெளிப்படும் எந்திர காந்த ஈர்ப்பு அலைக்கற்றையானது, ஒரு கம்பியில்லாத கருவியிலிருந்து, இன்னொரு கருவிக்கு செல்லும்போது, எதிர்படும் அந்த அமைப்பு முழுவதுமாய் தோற்றுப்போய் பழுதடைந்து விடும்.
* 19-வது காண்டம், 4-வது மந்திரமான 28 -வது சூக்தத்தில் என்ன சொல்லப்படுகிறது என்றால், 'ஏ தர்பை கல்லே! எழக்கூடிய எதிரிகளை தாங்கள் ஈர்த்து, எங்களை காப்பாற்றுங்கள்' என கூறப்பட்டுள்ளது. அதனால், இந்த கல்லில் இருந்து வெளிப்படும் சக்தியானது, புதிதாக உருவாகக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளையும், அடிப்படையிலேயே அழித்து விடும் ஆற்றல் படைத்து விடுகிறது.
* இந்த தர்பை கல்லிற்கு, தண்ணீரில் இருக்கும்போது, அதிக ஈர்ப்பு விசை கிடைக்கிறது.
* 7-ம் மந்திரத்தில், சொல்லப்படுவது என்ன என்றால், தயிர் எப்படி உறைகிறதோ அதுபோல், தர்பை கல்லானது, எதிர்படும் அனைத்தையும் உறைய செய்து, அதன் உண்மை தன்மையை அழித்து எரித்து விடும் ஆற்றல் உடையதாக சொல்லப்படுகிறது.
* நவீன அறிவியல்படி, அந்த கல், சிவப்பு வண்ணத்தில் இருப்பதாகவும், செவ்வாய் கிரகத்திற்கு இணையாக திகழ்வதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் மீத்தேன் அதிகமாக இருப்பதாலும், மீத்தேன் குமுழ்கள் அதிகமாக சுரப்பதாலும்தான் கப்பல் மற்றும் விமானத்தை தன் பக்கம் ஈர்த்துகொள்கிறது.
இவை எல்லாம் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டுள்ள 'தர்பை கல்' செயல்பாடுகளாக இருப்பது போலவே, பெர்முடா முக்கோணத்திலும் இருக்கிறது.
நவீன அறிவியல்படி செவ்வாய் கிரகம் முக்கோண வடிவத்தில் இருப்பதாகவும், அங்கு மீத்தேன் மற்றும் மீத்தேன் குமிழிகள் அதிகமாக சுரப்பதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன், அங்கு பல நதிகள் இருந்து வற்றியதற்கான சுவடுகள் காணப்படுவதாகவும் நாசா கண்டறிந்துள்ளது.
தற்போதையை நவீன உலகில், 'பெர்முடா முக்கோணம்' பற்றிய தகவல்களை நாசா இப்போது ஒவ்வொன்றாக கண்டறிந்து வந்தாலும், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்துக்களின் முந்தைய வேத காலம் என்று சொல்லப்படும் ரிக் வேதத்திலும், இறுதியான வேதமான அதர்வண வேதத்திலும் மற்றும் புராணங்களிலும் மிக தெளிவாக நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது பிரமிப்பாகதான் இருக்கிறது.
மூத்தோர் சொல் அமிர்தம் என்று அவ்வையார் சொன்னதுபோல், நமது முன்னோர்கள் சொன்னது அனைத்தும் உண்மையே என்று இதுபோன்ற விஞ்ஞான முடிவுகள் இந்து மதத்தின் சிறப்புகளை மேலும் தெளிவுப்படுத்துகிறது.

மண்டைக்காடு பகவதி அம்மன்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக பிரசித்தமான கோவிலில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன்
கோவிலாகும்.இக் கோவில் ஐநூறு
ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது ஆகும்.
கோவில் திருவாங்கூர் மகராஜா மார்த்தாண்டவர்மனால் கேரள மாடலில்
கட்டபட்ட எளிமையான கோவிலாகும்.
இக்கோவில் பெண்களின் சபரிமலை
என அழைக்கப்படுகிறது.பெண்கள்
இருமுடி கட்டி விரதமிருந்து கோவில்
வருகின்றனர்.இக் கோவிலில் மாசி
மாதம் பத்தாம் தேதி திருவிழா கொண்டாடப்படுகிறது.
கோவிலில் பதினைந்தடி உயரமான
புற்று உள்ளது அதன் மீது அம்மன் சிலை
வைக்கப்பட்டுள்ளது.
பிள்ளைவரம் வேண்டல் உடல் உறுப்பு
நோய் நீக்க வேண்டல் திருமணம் வேண்டல் என்று மக்கள் வேண்டுவன
உடனே நிறைவேறுகின்றன.தங்கள்
வேண்டுதல் நிறைவேறியதும் மக்கள்
நேரத்திக்கடனை செய்கின்றனர்.
ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான
மக்கள் பொங்கல் விடுவது மிகச்சிறப்பாகும்.
இக்கோவிலில் பிரசாதமாக புட்டு வழங்கப்படுகிறது.
வரலாறு.
.......................
மண்டைக்காடு .....மாண்டகாடு
இப்பகுதி முன்பு பனங்காடாக இருந்தது.
இது பகுதி ஆள் நடமாட்டம் இல்லாதபகுதி
இதன் ஊர் பெயர் பருத்திக்காடு. இங்கு
நாடார் இனத்தார் பதநீர் இறக்கி அதனை
காய்ச்சி கருப்பட்டி தயார் செய்து விற்பனை செய்து பிழைத்து வந்தனர்.
அனந்தன் நாடார் அவர் மனைவி பொன்னமமை இவர்கள் இருவரும்
இப்பகுதியில் வசித்து வந்தனர்.இவர்கள்
பதநீர் இறக்கி காய்ச்சி கருப்பட்டி தயார்
செய்தனர்.
இங்கு இந்து நாடார் அல்லது கிருத்துவ
நாடார் யாராகினும் பருவத்தில் முதன்
முதலாக பதநீர் இறக்கும் பொழுது அவர்கள் வணங்கும் தெய்வம் பத்ரகாளி
அம்மனுக்கு படையல் செய்து பின் அதை
பயன்படுத்துவர்.கேரளாவில் பத்ரகாளியை பகவதி அம்மன் என்றழைப்பர்.
ஒருசமயம் பருவத்தில் முதல் பதநீர் இறக்கி படையல் செய்யும் முன் அனந்தன் ஆற்றில் குளிக்கச் சென்றார்.
அங்கு வந்த அவர் மனைவி படையல்
முடிந்தது என்று நினைத்து பதநீரை எடுத்து சென்று கருப்பட்டி காய்ச்சினாள்.
வீட்டிற்க்கு வந்த அனந்தன் கோபத்தில்
பொன்னம்மா பிடறியில் அறிவாளல்
தட்ட பொன்னம்மா அகால மரணம் அடைந்தாள்.கொலை செய்த அனந்தன்
கேரளா சென்று சாமியாரானார்.ஊர்
மக்கள் பொன்னம்மாளை அடக்கம்
செய்தனர்.பக்கத்தில் ஊர் கிணறு ஒன்று
இருந்தது.பொன்னம்மா ஆவி உலாவுகிறது என்று பெண்கள் அஞ்சினர்.
ஊரார் ஆவியை சாந்தப்படுத்த அவள்
இறந்த மாசி பத்தாம்தேதி படையல்
செய்து வழிபட்டனர்.இது தொடர்ந்து
அந்த இடத்தில் புற்று வளர அதுபெரிதாக
பேசப்பட்டது.இக்கோவில் பிரபலமாக
பகவதி அம்மன் என்றழைக்கப்பட்டது.
பொன்னம்மை மாண்டகாடு மண்டைக்காடானது.
அம்மனை துதிப்போம்.
ஸ்ரீராமஜெயம்.Image may contain: 3 people, crowd and outdoor

Friday, October 27, 2017

Mastero is mastero.............

ஒவ்வொருவருக்கும் எது மனதை இதப்படுத்துமோ .. வருடிக் கொடுக்குமோ... தான் விரும்பும் உலகத்துக்கு எடுத்துச் செல்லுமோ அதை இளையராஜாவின் பாட்டு செய்து விடும். அந்த பாட்டு என்ன படம், யார் நடிகர்கள், என்ன கதை, யார் பாடலாசிரியர் என்பதையெல்லாம் தாண்டி இளையராஜா என்ற மகுடிக்காரருக்காகவே கேட்டிருப்போம் அவர் இசையமைத்த பாடல்களை.
வயலின் என்ற ஒரு வாத்தியத்தை இந்த கலைஞனை விட யாருமே இதை விட அம்சமாக உபயோகப்படுத்தி இருக்க முடியாது..
மெட்டி படத்தில் வரும் "மெட்டி ஒலி காற்றோடு " என்ற பாடலில் என்ன ஒரு haunting ஆனாலும் ஒரு cheerful ஆன இசையை தந்திருப்பார்.
பாடல் ஆரம்பிக்கும் "நாநன நன.." ஹம்மிங்கிலிருந்து என்ன மாதிரியான smooth transition ஐ கொண்டு வந்திருப்பார் அந்த பல்லவியின் முதல் வரிக்கு.
இந்த பாடலும் அதை காட்திப்படுத்திய விதமுமே ஒரு புதுமை தான். ஒரு ஆண் குரலும் பெண் குரலும் ஒலிக்கும் பாடல். கண்ணை மூடிக் கொண்டு பாடல் வரிகளை கேட்டால் காதலர்கள் பாடுவது போல் இருக்கும். இசையிலும் ஒரு காதல் வெளிப்பாபே எஞ்சி நிற்கும். ஆனால் காட்சியில் ஒரு இளம் தாயும் அவரின் வயதுக்கு வந்த இரு பெண்களுக்குள் இழையோடும் நட்பை பிரதிபலிக்கும். இப்போது மீண்டும் கேட்டுப் பார்த்தால், அதே வரிகளும் அதே இசையும் இந்த உறவை சொல்வதற்கும் மிகப் பொறுந்திப் போகும்.
மிக துல்லியமான composition இது.
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் என்னை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்லும் பாடல்களில் இதுவும் ஒன்று.

அப்பிடியா.......#இருக்கு.

😅 மோடி, எலிசபெத் ராணி, ரஷ்ய அதிபர் புதின்...... மூவரும் நரகத்திற்கு சென்றனர்.
😅 அங்கு உள்ள பொதுத் தொலைபேசியிலிருந்து நாடுகளுடன் தொடர்பு கொள்ளலாம் என எமதர்மன் உதவி செய்கிறான்.
😅 அதிபர் புதின் அரை மணி நேரம் மாஸ்கோவிற்கு பேசினார். 1000 டாலர் பில் வந்தது. அதற்கான காசோலையை எமதர்மனிடம் வழங்கி சென்றுவிட்டார்...
😅 அடுத்ததாக எலிசபெத் ராணியும் லண்டனுக்கு அரைமணி நேரம் பேசினார். 500 டாலர் என பில் வந்தது. காசோலை கொடுத்து விட்டார்.
😅😅😅 இம்முறை நம்ம ஊர் கதாநாயகன் மோடி. டில்லிக்கு ஒன்றரை மணி நேரம் பேசினார். பில் வந்தது. வெறும் 5 டாலர்கள் மட்டுமே. புதினும், ராணியும் எமதர்மனிடம் குடுமிப்பிடி சண்டை. என்னய்யா இது, எங்களுக்கு அதிக பில் இந்தியாவுக்கு மட்டும் குறைவான பில் என்று. . . .
😅 எமதர்மன் சிரித்துக் கொண்டே சொன்னாராம். . . " மோடி இந்திய தேசத்தைக் கடந்த 3 ஆண்டுகளில் நரகமாக மாற்றிவிட்டார். எனவே நரகம் To நரகம் லோக்கல் கால் தான் "
😀😃😄😁😆😅😂🤣😅

இஸ்லாமியர்களை மிக சரியாக புரிந்து கொண்டவர்கள் இந்து உறவுகள் ..!!!

கறி சாப்பிடுங்க..! பாய் கடையில் தான் வாங்கினோம்.
முஸ்லீம் புள்ளைக வருது வழிவிட்டு நில்லுங்க என இடம் கொடுக்கும் இளைஞர்கள்.
தீபாவளி படையல்கள் சாமி கும்பிடுவதற்கு முன்னே தந்து நட்பு பாராட்டும் சமூகம்.
நோன்புக்கு நாங்க எதாவது செஞ்சு தரலாமா? என கேட்கும் அக்கம் பக்கம்.
பிள்ளைக்கு முடில கொஞ்சம் ஓதிப்பாருங்க என பள்ளியில் நிற்கும் சகோதரத்துவம்.
பாங்கு சொல்லியும் தொழுக போகம நிக்கிர கிளம்புடா என அதட்டும் ரூம்மெட்.
பார்க்காம இருந்திருப்பான்; அத தவிர வேறு எந்த காரணமும் இருக்காது கல்யாணத்துக்கு கூப்பிடாம இருக்கிறதுக்கு. பிரியாணி சாப்பிட கிளம்பு ! என புரிந்துகொள்ளும் தொப்புள் உறவு.
நிச்சயமா! ஏமாத்த மாட்டாங்க.அவங்க அல்லாஹ்வை வணங்குறவங்க என நம்பிக்கை பாராட்டும் சமூகம்.
ஒரு முஸ்லீம அடிக்கிறத வேடிக்கை பார்க்க முடியாது என கிளம்பும் உறவுமுறை தேடும் சொந்தம்.
இன்னும் சொல்லிட்டே போகலாம்...
ஒரு முஸ்லீமாக அவர்களுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கோம்...!!!!இன்ஷா அல்லாஹ்...
நன்றி!!!Image may contain: 1 person, standing and text

சில ப‌ழங்களும் – பல பலன்களும்!

சில ப‌ழங்களும் – பல பலன்களும் 
ப‌ழங்களும் அவற்றின் பலன்களும் – ப‌ழங்களும் அவற்றின் பலன்களு ம்
பழங்கள்- இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில், நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால், அன்றாட உணவில், ஏதாவது ஒரு பழத்தையு ம் சேர்த்து கொண்டால் நல்லது என்கிறது, மருத்துவ
ஆராய்ச்சி முடிவுகள். எந்தெந்த பழங்களில் என்னென் ன பலன்கள் உள்ளன என்பதற்கு, இதோ சில டிப்ஸ்:
எலுமிச்சை
✔ அதிகமான பேதி ஏற்பட்டால், ஒரு எலுமிச்சை பழத் தின் சாறை, அரை டம்ளர் நீரில் கலந்துகொடுத்தால், உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப் பை போக்க, எலுமிச்சை பழத்தை கடித் து, சாற்றை உறிஞ்சி குடித்தால், உடனே களைப்பு தீரும்.
✔ கபம் கட்டி, இருமலால் கஷ்டப்படுகிறவர், ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந் து, 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளி யாகி நலம் ஏற்படும்.
திராட்சை
✔ பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளுக்கு, திராட்சை சாறு ஒரு சிறந்த மருந்து. தள்ளிப் போதல், குறை வாகவும், அதிகமாகவும்போதல் போன்ற குறைபா டுகளுக்கு, கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில், சிறிது சர்க்கரை சேர்த்து, தினமும் வெறும் வயி ற்றில் சாப்பிட்டு வந்தால், முறையான கால இடை வெளியில் மாதவிலக்கு வெளியாகும். தொடர்ந்து, 21 நாட்கள் சாப்பிட வேண்டும்.
பேரீச்சை
✔தினமும், இரவில் படுக்க செல்லு ம்முன் , ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீச்சம் பழத் தையும் உண்டுவந்தால், உடல்பல ம் பெறும். ரத்த விருத்தியும் உண் டாகும்.
✔ தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்க, தினமு ம் பேரீச்சம் பழம் சாப்பிடலாம். கண் சம்பந்தமான கோளாறுகளும், நரம்பு சம்பந்தமான கோளாறு களும் நீங்கும்.
ஆரஞ்சு
✔ ஆரஞ்சில் வைட்டமின் ஏ, வைட்டமி ன் சி, பி மற்றும் பி-2 உள்ளன. இதில், சுண்ணாம்புச் சத்தும் அதிகம். பலநாள் வியாதியில் இருந்து எழுந்தவர்களுக் கு, இது இயற்கை அளித்த சத்து மருந் து.
✔ இரவில் துாக்கமில்லாமல் கஷ்டப்ப டுபவர், படுக்க போவதற்கு முன், அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட்டால், செமையாக துாக்கம் வரும்.
வாழை
✔ மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர், தின மும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் இரவு உணவிற்கு பின், ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், ஜீரண சக்தி உண்டாகும்.
✔ கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன், தி னசரி உணவில்செவ்வாழை ப் பழம் வேளைக்கு ஒன்று வீதம், 21 நாட்களுக்கு கொ டுத்து வந்தால், பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெ ளி வடைய ஆரம்பிக்கும்.
பலா
✔ இதில் வைட்டமின் ஏ மற்றும் உயிர்ச்சத்து அதிகம். சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையு ம். வைட்டமின் ‘ஏ’க்கு, தொற்று கிருமிக ளை அழிக்கும் சக்தி இருப்பதால், உடலில் நோய் தொற்றாது.
பப்பாளி
✔ ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியது. பல் தொடர்பான குறை பாட்டுக்கும், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி உதவும். நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை அதிகரிக்கவும், ரத்த விரு த்தி உண்டாகவும், ஞாபக சக்தியை பெருக் கவும் பப்பாளி கை கொடுக்கும்.
✔ பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக் கிருமிகளை கொல்லும், ஒரு வகை சத்து உள்ளது. பப்பாளி பழம் சாப் பிடுபவர்களின் ரத்தத்தில், நோய் கிருமி கள் தங்குவதை அது தடுத்து விடும்.
மாதுளை
✔ மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கு ம் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர், தொடர்ந்து மூன்று நாள் மாதுளம் பழம் சாப்பிட் டால், குணம் பெறலாம்.
✔ வறட்டு இருமல் உள்ளவர் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் இருமல் குண மாகும். பித்தம் சம்பந்தமான குறைபாட்டிற்கும் மாதுளம் பழம் ஏற்றது.
கொய்யா
✔ எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கும். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்ப வர்கள் கொய்யாப்பழம் உண்பது நல்லது. விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்தி ற்கு இருப்பதால், வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால், அதை உடனே கொன்று விடும்.
அன்னாசி
✔ உடலில் போதிய ரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு, அன்னாசிப்பழம் சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன் னாசி பழத்தை, சிறுசிறு துண்டுகளா க செய்து வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து, தின மும் இரவில் ஒரு டம்ளர் பாலில், ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து பருக வேண்டும்; 40 நாட்க ளில் ரத்தம் அதிகரித்திருக்கும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...