Sunday, October 29, 2017

முருக பக்தர்களுக்கு மட்டுமே.



ஒரு சின்ன ஆதங்கம் அவ்வளவே...
திருப்பதிக்கும், விநாயகருக்கும், சாய் பாபாவுக்கும் தரும் முன்னுரிமையை நம் தமிழ்க் கடவுள் முருகருக்கும் தாருங்கள் தமிழர்களே...
வந்தோர் எல்லாம் வள்ளலாய் மாறி, ஆளுக்கொரு பக்கம் நான் இந்து என பரவி விட்டனர்.
வடநாடுகளில் ஏது முருகன் பண்டிகை.
திராவிட ஆட்சியில் வளர விடவில்லை என பொறுப்பேற்கக் கூடாது.
அப்படி இருப்பின் ஏன் மற்ற கடவுள் வழிபாடு வளர்ந்தது...?
ஆனால், எத்தனை வட நாட்டுக் கோயில்களில் முருகனின் பிரகாரம் உள்ளது.
700 ஆண்டு முன் வந்த முகமது நபி வழி வந்த முஸ்லிம் மதம் இமயம் முதல் ராமேஸ்வரம் வரை.
400 ஆண்டு முன்வந்த கிறித்தவ மதமும் அப்படியே...
ஆனால் தமிழ் பிறந்த ஆண்டை, கல்தோன்றா முன் தோன்றிய காலம் என்கிறோம்.
இத்தனை பழமையான, வளமையான, செழுமையான முருகப் பெருமானை போற்றிப் பாராட்ட பெரிதாக வளர்க்க ஆளேதுமில்லை இன்று...
வாரியார் வாழ்ந்த நாளோடு போச்சு, முருகனின் புகழ் வீச்சு...
ஐயப்பனின் வழிபாட்டில் ஆரம்பித்து, சாய்பாபா, பிள்ளையார் என ஏகோபித்த ஆரவாரம் இங்கு.
தமிழன் தன் வரலாறே முருகனின் முன்னிலைதான் என அறியாது நிற்கிறான்.
நினைத்தாலே ஒட்டும் விபூதியாய் வியாபிப்பவனை, முதன்மைப் படுத்துவோம்.
எத்தனை ஆன்மீகப் பாடலை கேட்டாலும், முருகனின் பாடலை ஓர்முறை கேட்டாலும், உருகா தமிழன் உண்டோ...
காரணம், நமது மரபு அவரது வழி.
குல தெய்வ வழிபாடும், குமரனின் வழிபாடும் முக்கியம் நண்பர்களே...
முருகர் நமது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம்.....
Image may contain: 2 people, people smiling, text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...