Saturday, October 28, 2017

மண்டைக்காடு பகவதி அம்மன்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக பிரசித்தமான கோவிலில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன்
கோவிலாகும்.இக் கோவில் ஐநூறு
ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது ஆகும்.
கோவில் திருவாங்கூர் மகராஜா மார்த்தாண்டவர்மனால் கேரள மாடலில்
கட்டபட்ட எளிமையான கோவிலாகும்.
இக்கோவில் பெண்களின் சபரிமலை
என அழைக்கப்படுகிறது.பெண்கள்
இருமுடி கட்டி விரதமிருந்து கோவில்
வருகின்றனர்.இக் கோவிலில் மாசி
மாதம் பத்தாம் தேதி திருவிழா கொண்டாடப்படுகிறது.
கோவிலில் பதினைந்தடி உயரமான
புற்று உள்ளது அதன் மீது அம்மன் சிலை
வைக்கப்பட்டுள்ளது.
பிள்ளைவரம் வேண்டல் உடல் உறுப்பு
நோய் நீக்க வேண்டல் திருமணம் வேண்டல் என்று மக்கள் வேண்டுவன
உடனே நிறைவேறுகின்றன.தங்கள்
வேண்டுதல் நிறைவேறியதும் மக்கள்
நேரத்திக்கடனை செய்கின்றனர்.
ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான
மக்கள் பொங்கல் விடுவது மிகச்சிறப்பாகும்.
இக்கோவிலில் பிரசாதமாக புட்டு வழங்கப்படுகிறது.
வரலாறு.
.......................
மண்டைக்காடு .....மாண்டகாடு
இப்பகுதி முன்பு பனங்காடாக இருந்தது.
இது பகுதி ஆள் நடமாட்டம் இல்லாதபகுதி
இதன் ஊர் பெயர் பருத்திக்காடு. இங்கு
நாடார் இனத்தார் பதநீர் இறக்கி அதனை
காய்ச்சி கருப்பட்டி தயார் செய்து விற்பனை செய்து பிழைத்து வந்தனர்.
அனந்தன் நாடார் அவர் மனைவி பொன்னமமை இவர்கள் இருவரும்
இப்பகுதியில் வசித்து வந்தனர்.இவர்கள்
பதநீர் இறக்கி காய்ச்சி கருப்பட்டி தயார்
செய்தனர்.
இங்கு இந்து நாடார் அல்லது கிருத்துவ
நாடார் யாராகினும் பருவத்தில் முதன்
முதலாக பதநீர் இறக்கும் பொழுது அவர்கள் வணங்கும் தெய்வம் பத்ரகாளி
அம்மனுக்கு படையல் செய்து பின் அதை
பயன்படுத்துவர்.கேரளாவில் பத்ரகாளியை பகவதி அம்மன் என்றழைப்பர்.
ஒருசமயம் பருவத்தில் முதல் பதநீர் இறக்கி படையல் செய்யும் முன் அனந்தன் ஆற்றில் குளிக்கச் சென்றார்.
அங்கு வந்த அவர் மனைவி படையல்
முடிந்தது என்று நினைத்து பதநீரை எடுத்து சென்று கருப்பட்டி காய்ச்சினாள்.
வீட்டிற்க்கு வந்த அனந்தன் கோபத்தில்
பொன்னம்மா பிடறியில் அறிவாளல்
தட்ட பொன்னம்மா அகால மரணம் அடைந்தாள்.கொலை செய்த அனந்தன்
கேரளா சென்று சாமியாரானார்.ஊர்
மக்கள் பொன்னம்மாளை அடக்கம்
செய்தனர்.பக்கத்தில் ஊர் கிணறு ஒன்று
இருந்தது.பொன்னம்மா ஆவி உலாவுகிறது என்று பெண்கள் அஞ்சினர்.
ஊரார் ஆவியை சாந்தப்படுத்த அவள்
இறந்த மாசி பத்தாம்தேதி படையல்
செய்து வழிபட்டனர்.இது தொடர்ந்து
அந்த இடத்தில் புற்று வளர அதுபெரிதாக
பேசப்பட்டது.இக்கோவில் பிரபலமாக
பகவதி அம்மன் என்றழைக்கப்பட்டது.
பொன்னம்மை மாண்டகாடு மண்டைக்காடானது.
அம்மனை துதிப்போம்.
ஸ்ரீராமஜெயம்.Image may contain: 3 people, crowd and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...