Wednesday, October 11, 2017

அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கும்பகோணத்தில் லேசான சளிக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பரிந்துரைத்த மருந்தினை SYRUP சாப்பிட்ட சற்று நேரத்திற்கு முன்பு வரை விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்தது.
குழந்தையின் அருகிலேயே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருந்த நம்மால் இன்னும் சாப்பிட மனம் வரவில்லை.துயரத்திலிருந்து மீளவில்லை.
இது குறித்து தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் அறிமுகமானவர்களிடம் இது குறித்து பேசிய போது அவர்கள் தெரிவித்த சில செய்திகள் அதிர்ச்சியளித்துள்ளது..
பாட்டில் மருந்துகளில் ஒட்டப்பட்டிருக்கும் மருந்து தயாரிப்பு(date of manufacture)
மற்றும் காலாவதியாகும் தேதிகள் (date of expiry) பல நேரங்களில் நம்பும்படியாக இல்லை. மருந்துகளில் ஒட்டப்பட்டிருக்கும் மருந்து தயாரிப்பு(date of manufacture)
மற்றும் காலாவதியாகும் தேதிகள் (date of expiry) பல நேரங்களில் நம்பும்படியாக இல்லை.
காலாவதியான மருந்து பாட்டில்களில் உள்ள ஸ்டிக்கரை எடுத்துவிட்டு
பொய்யான தேதிகளை போட்டு
ஒட்டப்படுகின்றன..
மருத்துவர்களிடம் பணியாளர்கள் இது குறித்து கேட்டபோது
காலாவதியான மருந்துகளை மேலும் ஆறு மாதங்கள் பயன்படுத்தலாம் என்றும் அப்படி பயன்படுத்துவதால் உயிருக்கு எந்த ஆபத்தும்.நேராது..நோய் குணமாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
பணியாளர்களை மருத்துவர்கள் போலியான தேதிகளை உள்ளடக்கிய ஸ்டிக்கரை ஒட்ட கட்டாயப்படுத்துகின்றனர்.
மேலும் மருந்துக்கடைகளிலும்
மருத்துவமனைகளிலும் ஒன்று இரண்டு மாத்திரைகள் வாங்கும் போது
அந்த மாத்திரைகள் காலாவதியானதாக இருக்க வாயுப்புள்ளதாம்..
tablet strips இல் தேதியை கட் செய்து விட்டு தரப்படுகிறதாம்.
எனவே மாத்திரைகள் வாங்க நேரிடும் போது முழு strip யையும் வாங்குவது சிறந்தது ..அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது.
பலர் காலாவதி தேதி பற்றி கவலைப்படுவதில்லை.
காலாவதி தேதியை பார்த்து.வாங்கும் நம் போன்றவர்களுக்கும்
இத்தகைய செய்திகள்
அவநம்பிக்கையையும்
அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் தனியார் மருத்துவர்கள் கம்பெனி விளம்பரத்திற்காக இலவசமாக மருத்துவ பிரதிநிதிகளிடம் பெற்றுக்கொண்டு அதன் effect பற்றி கவலைப்படாமல்
அதனையே நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றனர்..
இதனை நாம் எவ்வாறு
எதிர்கொள்ள போகிறோம்.
கடவுளுக்கு அடுத்து
மருத்துவர்கள் என கூறப்படுவதுண்டு..
சேவை நோக்கில் மருத்துவராக பணியாற்றிய காலங்கள் ஓடி போய்
இப்பொழுது இலட்சணக்கணக்கில் செலவு செய்து மருத்துவப்படிப்பு படித்து
செலவு செய்த பணத்தை திரும்ப பெறுவதற்காக இத்தனை மோசடி...
மொத்தத்தில் மருத்துவ சேர்க்கையை முறை படுத்தினால் மட்டுமே இதனை ஓரளவு கட்டுப்படுத்த இயலும்..
ஆனாலும்
மிக சில மருத்துவர்கள்
விதி விலக்கு..
மருந்துகடைகள் விதி விலக்கு.
மருந்துக்கடைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறதா.?
தனியார் மருத்துவமனைகள் கண்காணிக்கப்படுகின்றனவா...?
என்றால் இல்லை..இல்லவே இல்லை.
அரசு மருத்துவமனைகளை பற்றி சொல்ல தேவையே இல்லை ..
கண்காணிப்பு என்ற பெயரில்
கவர்கள் கைமாறுகின்றன..
எதிலும் ஊழல் ஊழல்.
சுயநலத்திற்காக போராடுவது போல நடிக்கும் அரசியல்வாதிகள்.,
அரசியல்.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது
நம் அனைவரின் கடமையாகும் .
இஙு்கு பதிவு செயுதுள்ள படத்தில் குழந்தைக்கு அளிக்கப்பட்ட மருந்தினை காணலாம்..அதில் காலாவதியாகும் தேதி முடியடையவில்லை.
நமது சந்தேகம்
அந்த தேதி உண்மையா?
பொய்யா?
மனித உயிர் சார்ந்த விஷயம் பகிருங்கள்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...