உலக அனைத்துக்கும் ஆதார சக்தியாக திகழ்பவள் ஆதிபராசக்தி. ஆதிபராசக்தி யிடமிருந்து
தான் மும்மூர்த்திகளும் தோன்றினர். அன்னை ஆதிபராசக்தி உலக மக்களுக்கு அருள்புரிவதற்காகவே பல வடிவங்களும், பல பெயர்கள்கொண்டு கோயில் கொண்டிருக்கிறார். புண்ணிய பூமியான நம் நாட்டில் எண்ணற்ற அம்மன் திருத்தலங்கள் அமை ந்திருக்கின்றன. இதில் எந்த அம்மனை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்…
1) மதுரை மீனாட்சி அம்மன் (Madhurai Meenakshi Amman )
மதுரையில் ஆட்சிசெய்யும் மீனாட்சி அம்மன் வழிப ட்டால், சகலஐஸ்வரியங்களும் கிடைக்கும். திருமண த்தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் வேண்டிய வரமெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
2) காஞ்சி காமாட்சி அம்மன் (Kanchi Kamakshi Amman)
3) இருக்கன்குடி மாரியம்மன் (Irukkankudi Mariamman)
4) சமயபுரம் மாரியம்மன் (Samayapuram Mariamman)
5) வெக்காளி அம்மன் (Vekkali Amman)
வெக்காளிஅம்மன், பக்தியுடன் வேண்டுவோரது குறைகளை த் தீர்ப்பவள்; தீயவர்களிடம் வெம்மை காட்டி அவர்களை அ ழிப்பவள்; பக்தர்களிடம் தாய்க்குத்தாயாக, சேய்க்குசேயாக இருப்பவள்; வெக்காளி அம்மனை வெள்ளிக் கிழமைகளில் மனதார வழிபட்டு, அர்ச்சனை செய்தால் குடும்ப ஒற்றுமை, குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
6) வாராஹி அம்மன் (Varahi Amman)
வாராஹி அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் பஞ்சனி திதிகளில் விரலிமஞ்சள் மாலையை சமர்பித்து, அர்ச்சனை செய்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பி க்கை. வாராஹியை 16 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி , முழுமனதோடு வழிபட்டால் எல்லா வகையிலும்
வெற்றி கிட்டும்
7) துர்கை அம்மன் (Durgai Amman)
துர்கை என்பவள் துக்கம் தீர்ப்பவள். ராகுகால பூஜைக்கு உரிய வள். ஒருவருக்கு ராகு தசையோ அல்லது ராகு புத்தியோ நடை பெறும்போது, துர்கைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், ராகு வினால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கிவிடுவதாக பக்தர்க ள் நம்புகிறார்கள்.

No comments:
Post a Comment