Thursday, October 26, 2017

இதெல்லாம் செஞ்சா வழுக்கைத் தலையிலும் முடி வளரும்!

ஆண்கள் எதற்கு பயப்படுகிறார்களோ இல்லையோ தலையில் சொட்டை வந்து விட்டால் என்னாவது என்று பெரிதும் பயப்படுகிறார்கள். அவர்களின் தலையாயப் பிரச்சனையாக இருக்கும் சொட்டையை தீர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்றும் எப்படி தவிர்க்கலாம் என்று இதில் தெரிந்து கொள்ளலாம்.
நம் முடி ஒரு வித புரத இழைகளால் ஆனது. குறிப்பாக கரோட்டின் என்னும் புரதம். தலையில் இருக்கும் Follicle இருந்து தான் முடி வளர்கிறது. சொட்டையைப் பற்றியும் அதனை தவிர்க்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்வதற்கு முன்னால் நம் முடியைப் பற்றியும் அதன் வளர்ச்சியைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
முடி வளர்கிறது என்றால் தொடர்ந்து முடி வளர்ந்து கொண்டேயிருக்கிறது என்று அர்த்தமன்று முடியின் வளர்ச்சி மூன்று பருவங்களைக் கொண்டது.
ஒரு முடி தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்திற்கு வளரும். இது மூன்று முதல் ஏழு வருடங்கள் வரை நீடிக்கும். இதனை அனாஜன் என்பர் அடுத்ததாக கட்டாஜன் பருவம். இந்தப் பருவத்தில் இயற்கையாகவே முடி உதிரத்துவங்கும்.
மூன்றாவது பருவம் டிலாஜன். இதனை ஓய்வு நிலை என்று கூட சொல்லலாம். அதிகமான வளர்ச்சியோ அல்லது உதிர்தலோ இருக்காது. இப்பருவம் நான்கு மாதங்கள் வரை நீடிக்கும். ஒவ்வொரு முடியும் இப்படியான சுழற்சியில் இருக்கிறது.
தலையில் வழுக்கை வருவதற்கு மிக முக்கியமான காரணங்கள் வயது முதிர்வு, பரம்பரை,மற்றும் ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோன் தான். ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களில் ஒரு வகையான Dihydro testosterone சுரக்கிறது, இதன் அளவைப் பொறுத்தே முடியின் வளர்ச்சி இருக்கும். அதிகமாக இருந்தால் முடி கொட்டும் மற்றும் சொட்டை ஏற்படும்.
வழுக்கை பெரும்பாலும் ஆண்களுக்கே வருகிறது பெண்களுக்கு அவ்வளவாக ஏற்படுவதில்லையே என்ற சந்தேகம் எழலாம். அதற்கு முக்கிய காரணம் இந்த ஹார்மோன் தான். பெண்களிடத்தில் இது அளவாகவே சுரக்கிறது.
வழுக்கை வராமல் தவிர்க்க, அல்லது ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் பின்வரும் வழிமுறைகளை பின்ப்பற்றினால் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்.
இதில் எலுமிச்சை விதைகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும். எலுமிச்சை விதைகள் மற்றும் கடுகு இரண்டு சம அளவு எடுத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
அத்துடன் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் ஹேர் பேக்காக போட்டு தலைக்குளிக்கலாம். இதனை தலையில் போடுவதால் எரிச்சல் உண்டாகும். அதனால் போட்ட சிறிது நேரத்திலேயே கழுவிவிடாதீர்கள்.
அதிமதுரம் பொடி என்றே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது அதனை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு டீஸ்ப்பூன் அதிமதுரப் பொடி, சிறிதளவு மஞ்சள் தூள்,அரைகப் பால் மூன்றையும் சேர்த்து பேஸ்ட்டாக்கி உங்கள் தலையில் மாஸ்க்காக போடுங்கள்.
அரைமணிநேரம் கழித்து கழுவிவிடலாம். இது முடி உதிர்தலுக்கான ஹார்மோன் அதிகமாக சுரப்பதை தடுக்கிறது.
உங்களுக்கு தேவையான தேங்காய் எண்ணெயை தனியாக ஒரு பாட்டிலில் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் நீங்கள் எடுத்திருக்கும் எண்ணெய் அளவுக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று சூடத்தை பொடியாக்கி சேர்த்திடுங்கள்.
ஒரு நாள் முழுவதும் அதனை காற்று புகா வண்ணம் மூடி வைத்திருக்க வேண்டும். பின்னர் அதனை நீங்கள் தினமும் பயன்படுத்தலாம். குறைந்தது ஒரு நாள் ஒரு நாளவது இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைத்திடும்.
தலைமுடிப்பிரச்சனை என்றாலே இவைகள் இல்லாமல் எந்த தீர்வுகளும் இருக்காது. தேங்காய் எண்ணெயை லேசாக சூடேற்றுங்கள்.
அப்போது அதில் சிறிது கறிவேப்பிலை, செம்பருத்தி, பொடியாக நறுக்கிய நெல்லிக்காய் சேர்த்து சூடாக்குங்கள். அது ஆறியது, வடிகட்டி தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
முதலில் இஞ்சியை தோல் நீக்கி சுத்தப்படுத்தி துருவிக் கொள்ளுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுள்ள ஆலிவ் ஆயிலை சூடாக்குங்கள். அது சூடானதும் இறக்கிவிடலாம்.
அந்த எண்ணெயில் துருவி வைத்திருக்கும் இஞ்சி சேர்த்து பத்து நிமிடங்கள் வைத்திருங்கள். பின்னர் அந்த எண்ணெயை இஞ்சியுடன் சேர்த்தே தலையில் தேய்த்து மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊறியதும் தலைக்குளிக்கலாம்.
இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை அரைத்து மைய பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். இதனை அப்படியே தலையில் ஹேர்பேக்காக போட்டு ஒரு மணி நேரம் காத்திருந்து பின்னர் தலைக்குளிக்கலாம்.
அப்படியில்லையெனில் உங்களுக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெயையை எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து சூடாக்குங்கள். பின்னர் இந்த எண்ணெயை தலைக்கு மசாஜ் செய்திடலாம்.
ஆலிவ் ஆயில் அனைத்துவிதமான முடிப்பிரச்சனைக்கும் சிறந்த தீர்வளிக்கிறது. ஆலிவ் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் பட்டைத் தூளைசேர்த்து எண்ணெயையை சூடாக்குங்கள்.
இளஞ்சூடானதும். அதனை தலைமுழுவதும் தேய்த்து மசாஜ் செய்திடுங்கள். குறிப்பாக முடி இல்லாமல் இருக்கும் வழுக்கை ஏற்ப்பட்ட பகுதியில் அதிக அழுத்தம் கொடுங்கள், பின்னர் அரை மணி நேரம் காத்திருந்ததும். அதிக கெமிக்கல் சேர்க்காத ஷாம்புவைக் கொண்டு தலைக்குளிக்கலாம். வாரத்திற்கு இரண்டு முறை இதனைச் செய்திடுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...