இன்று அனைவர் கழுத்திலும் உருத்திராஷ்ஷம் இருக்க வேண்டும். இதோ ஒவ்வொன்று எடுத்து கொள்ளுங்கள். ஏனையோர் நாளை நாட்டு மருந்துக் கடையில் வாங்கி கொள்ளுங்கள். பஞ்ச முக உருத்திராஷ்ஷம் வெறும் 10-15 ரூபாய்தான் இருக்கும். இதனை மஞ்சள் அல்லது சிவப்பு அல்லது கறுப்பு கயிற்றில் கோர்த்து கழுத்தில் கட்டிக்கொள்ளுங்கள். விரும்பியவர்கள் கயிற்றில் கோர்க்கப்பட்ட உருத்திராஷ்ஷத்தை இன்று சிவன் கோவில் எடுத்து சென்று பூஜையில் வைத்து அங்கு வைத்தே அணிந்து கொள்ளுங்கள். ஆண், பெண், குழந்தைகள் என யாவரும் அணியலாம். எந்த குற்றமும் இல்லை. தனம், கல்வி, வீரம், புகழ், பாதுகாப்பு, ஏவல்பில்லிசூன்ய கண்திருஷ்டி நிவர்த்தி, கெட்ட பழக்கத்திலிருந்து விடுதலை, நோய் நிவர்த்தி, தன்னம்பிக்கை, குண்டலினி சக்தி ஆற்றல், சிவ அனுக்கிரகம், உயர் ஞானம் என விபரிக்க வார்த்தைகளே இல்லை.... ஞானியர் மட்டுமே அறிவர் சிவமே அனைத்தும் என. சிவன் ஏனைய தெய்வங்கள் போல இல்லை. மது, மாது, மாசிசம் புசிப்பவர்கள் கூட உருத்திராஷ்ஷம் அணிந்து கொள்ளலாம். அணிந்து வெறும் 3 மாதத்தில் இங்கு வந்து எனக்கு சொல்லுங்கள். உங்கள் உயர்விற்கு நான் சாட்சி... உங்கள் தீய கர்மவினைகளையும் மீறி உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நாளை உருத்திராஷ்ஷத்தை கழுத்தில் தரிக்கும் பாக்கியம் கிடைக்கட்டும்...

No comments:
Post a Comment