
தயவுசெய்து இங்கே விவரிக்கப்பட்டுள்ள உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்… நீங்கள் கோபக்காரராக இருந்தால்…
உங்களின் கோபத்தை தூண்டும் உணவுப்பொருட்கள்
இந்த உலகில் தோன்றிய, தோன்றும், தோன்றவிருக்கும் அனைத்து உயிரினங்களு க்கும் சரி அது மனிதராக இருந்தாலும், மிருகமாக இருந்தாலும் சரி உணவு என்பது
அவசியம். உணவு உட்கொள்வதால்தான் உயிர் வாழமுடிகிறது. அந்த வகையில்
மனிதர்கள் அனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணரமுடியும் என்பது தெரி யும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும்.

எனவே ஏற்கனவே உங்களுக்கு மூக்கிற்குமேல் கோபம் வருமாயின், கீழே கொடு
க்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை மட்டும் தயவுசெய்து சா ப்பிடாதீர்கள். சரி, இப்போது உங்களுக்கு அதிகளவு கோபத்தை வரவழைக்கும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

*காரமான உணவுகளை மனஅழுத்தத்தில் இருக்கும்போது உட்கொண்டால், அதனால் இரைப்பையில் அமிலசுரப்பு அதிகரி த்து, அதனால் நெஞ்செரிச்சலை உணரக்கூடும். மேலும் காரமான உணவுகள்,
உட லின்வெப்பத்தை அதிகரிப்பதால், அது உங்கள் பரபரப்புடன் இருக்கச்செய்யும் . ஆகவே நீங்கள் இந்த உணவை சாப்பிடா தீர்.

*கலிபோர்னியாவில் மேற்கொண்ட ஆய்வுஒன்றில் அதிகளவு ட்ரான்ஸ் கொழுப்பு க்களை உட்கொண்டால், அதிகளவு கோப த்தை வெளிப்படுத்தக்கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உடலை சீராக வைத்துக்
கொள்ள ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்களை மெட்டபாலிசம் செய்யு ம்போது இடையூறை ஏற்படுத்தும். எனவே எண்ணெயில் பொரி த்த உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

* காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுவோருக்கு, அதிலும் தூங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பருகினால், தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி, அதனால் கோபத்தையும், எரிச்சலையும் உண்டாக்கும். எனவே எப்போதும் காபி குடிப்பதாக இருந்தால், படுக்கைக்கு 3 மணிநேரத்திகு முன் குடியுங்கள்.




No comments:
Post a Comment