Friday, October 27, 2017

டெங்கு காய்ச்சலோட போக்கு...

💊 இது தான் டெங்கு காய்ச்சலோட போக்கு...
💊 முதல் மூணு நாள் நல்லா உடம்பு சுடும்
💊 அடுத்த மூணு நாள் ஜில்லுனு உடம்பு குளிர்ந்திடும்
ஆனா அதுக்கப்பறம் தான் பிரச்சனை ஆரம்பிக்குது பாருங்க...
💊 ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கறதே 4,5,6 நாட்கள்ல தாங்க..காய்ச்சலோட போக்க பாருங்க..
💊 முதல் மூன்று நாள் 103-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது..
💊 ஆக, நாம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது 4,5,6 நாட்கள் தான்
💊 முதல் மூன்று நாட்கள்ல , உடல் உஷ்ணத்தால உடம்புல இருக்குற நீர் சத்து குறையுது ...
நா வரண்டு போறதும் , சிறுநீர் சரியா போகாம இருக்குறது , இதெல்லாம் முதல் மூன்று நாட்கள் இருக்கும்.
💊 அடுத்த மூன்று நாட்கள் தான் நமக்கு போர் காலம் ...
இதுல தான் ரத்த கசிவு நடக்க வாய்ப்பு இருக்கிறது. ரத்த கசிவு வெளியே பல்லில் ஈறுகளில் இருந்து வெளியேறலாம் .. மலம் கருப்பாக வெளியேறுவது இதெல்லாம் இந்த 4,5,6 நாட்களில் தான் நடக்கும் .
ரத்த டெஸ்ட் களில் முதல் மூன்று நாட்கள் எந்த பாதிப்பும் வெளியே தெரியாது ஆனால் 4 ஆம் நாளின் தொடக்கத்தில் இருந்து தட்டணுக்கள் சரிவதை கண்டுபிடிக்கலாம் , 5 ஆம் நாளும் 6 ஆம் நாளும் அதனினும் குறைந்து பிறகு மீளும்
💊 ஆகவே டெங்குவை தெரிஞ்சுக்க மூணு அறிகுறி.
💊 ஒன்று
டெங்கு ஜுரம் அடிக்கிறது முதல் மூனு நாள். நாலாவது நாள் சட்டுனு குறைஞ்சுச்சுனா அலர்ட் ஆயிடணும்
💊இரண்டு
நீர் சத்துதான் டெங்குவோட டார்கெட் , சோ முடிஞ்ச அளவு தண்ணி , ஓ.ஆர்.எஸ், இளநீர், மோர்னு குடிச்சுட்டே இருக்கணும்.
💊 மூன்று
இதுதான் முக்கியமான விசயம்
காய்ச்சல் அடிச்சா இந்த முக்கியமான முதல் மூனு நாள கவுண்டர்ல மருந்து சாப்புட்டு வீணாக்கிட்டு, 4,5,6 ஆவது நாள் ரத்தக்கசிவு நடக்கும் போதும் கவனிக்காமல் இருந்தால் சிரமம் .
💊 இதை தெரிஞ்சிருந்தா டெங்குவில் இருந்து சிக்காம தப்பிக்கலாம்💊

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...