Tuesday, October 10, 2017

*படித்தேன்.. இரசித்தேன்..*

இப்போது கலைஞர் அவர்கள் பேசும் நிலையில் இருந்திருந்தால்.. ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்.... (கற்பனை)
கேள்வி : நான் ஒரு பொருளாதார மேதை அல்ல என இப்போது பிரதமர் கூறியது சரியா.?

கலைஞர் பதில் : நாங்கள் இதை அப்போதே கூறினோம் அதை எள்ளி நகையாடியோர் இன்று உணர்ந்திருப்பார் அதுவே போதும்.
கேள்வி : தாஜ்மஹால் சுற்றுலாத்தலப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது பற்றி.?
கலைஞர் பதில் : எந்த பட்டியலில் அதை நீக்கினாலும் இதயங்களை பரிமாறிக் கொண்ட அந்தக் காதலின் சின்னத்தை உலகத்தார் இதயங்களில் இருந்து நீக்கவே முடியாது.
கேள்வி : தமிழகத்தில் டெங்கு பரவுகிறதே.?
கலைஞர் பதில் : இங்கு ஆளும் அரசே மக்களை பீடித்த ஒரு டெங்கு தானே இதில் ஆச்சரியங்கள் ஏதுமில்லை.
கேள்வி : தெர்மக்கோல் போட்டு ஆற்று நீரை ஆவியாகாமல் ஒரு அமைச்சர் தடுத்தாரே அதைப் பற்றி.?
கலைஞர் பதில் : பரமார்த்த குருவும் சீடர்களும் என்னும் வேடிக்கை கதைகள் படித்ததுண்டு அது கதையல்ல நிஜமே என்பதை அவர் உணர்த்தியிருக்கிறார்.. செய்தியைப் படித்து சிரித்தேன்.. நம் மக்களை எண்ணி அழுதேன்.
கேள்வி : கமல் அரசியலுக்கு வருகிறாராமே.?
கலைஞர் : ஏன் நானும் கலையுலகில் இருந்து தானே வந்தேன்.. தம்பி கமல் தாராளமாக வரட்டும் தென்றலை தீண்டிய அவர் புயலை தாண்டிப் பார்க்கட்டும்.
கேள்வி : சசிகலாவுக்கு பரோல் கிடைத்திருக்கிறதே?
கலைஞர் பதில் : அதென்ன அதியமானுக்கு மட்டுமே கிடைத்த அரிய நெல்லியா? சட்டப்படி அணுகினால் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்குமே.
கேள்வி : இல்லை சசிகலா வரவால் அதிமுகவில் சலசலப்பு வருமா.?
கலைஞர் பதில் : இது அந்தக் கட்சியினரைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி அவர்களிடம் சலசலப்புக்குப் பஞ்சமேது.. ஆனால் தி.மு.கழகம் பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது.
கேள்வி : இரட்டை இலை யாருக்கு கிடைக்கும்?
கலைஞர் பதில் : யூகங்களுக்கு பதில் தர முடியாது தற்போது தாமரைக்கு கீழே இலைகள் இருக்கிறது என சூசகமாக சொல்ல முடியும்.
கேள்வி : தமிழகத்தில் காவிக் கொடி பறக்கும் என்கிறார்களே அது நடக்குமா.?
கலைஞர் பதில் : நிச்சயம் பறக்கும் நானே ஏற்றி இருக்கிறேன்.. நம் மூவர்ண தேசிய கொடியில் உள்ள காவி நிறம் தான் அது.. அது இந்தியா முழுவதும் எங்கும் பறக்குமே.
கேள்வி : ஸ்டாலின் செயல்பாடுகள் சரியில்லை என்கிறார்களே அது பற்றி.?
கலைஞர் பதில் : செயல் தலைவர் என்பவர் ஒரு செயலைச் செய்பவர் மட்டுமல்ல ஒரு செயலை எங்ஙனம் துவக்கி எப்படி வெற்றிகரமாக முடிப்பது என்பதிலேயே இருக்கிறது.. முதல் பந்திலேயே சிக்சர் தூக்க முடியாது ஃபீல்டிங் விதிகள் மாறும் போது அதிரடிக்கு மாறவேண்டும் அதுவரை தடுப்பாட்டமே சிறந்தது அதை தான் அவர் செய்கிறார் வெற்றி பெறுவார்.
கேள்வி : 2ஜி வழக்கின் தீர்ப்பு எப்படி வரும் என்று நினைக்கிறீர்கள்?
கலைஞர் பதில் : நீதியை நம்புகிறோம் நீதிக்கு தலை வணங்குவோம்.
கேள்வி : அய்யா கடைசிக்கேள்வி தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் தேவையா.?
கலைஞர் பதில் : கடந்த தேர்தலில் முடியட்டும் விடியட்டும் என்னும் கோஷத்தை கழகம் சொன்னது இன்று தமிழகமே ஒரே கோஷமாக இந்த ஆட்சி முடியட்டும் விடியட்டும் என்கிறார்களே அதிலேயே நீங்கள் புரிந்து கொள்ளலாமே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...