கறி சாப்பிடுங்க..! பாய் கடையில் தான் வாங்கினோம்.
முஸ்லீம் புள்ளைக வருது வழிவிட்டு நில்லுங்க என இடம் கொடுக்கும் இளைஞர்கள்.
தீபாவளி படையல்கள் சாமி கும்பிடுவதற்கு முன்னே தந்து நட்பு பாராட்டும் சமூகம்.
நோன்புக்கு நாங்க எதாவது செஞ்சு தரலாமா? என கேட்கும் அக்கம் பக்கம்.
பிள்ளைக்கு முடில கொஞ்சம் ஓதிப்பாருங்க என பள்ளியில் நிற்கும் சகோதரத்துவம்.
பாங்கு சொல்லியும் தொழுக போகம நிக்கிர கிளம்புடா என அதட்டும் ரூம்மெட்.
பார்க்காம இருந்திருப்பான்; அத தவிர வேறு எந்த காரணமும் இருக்காது கல்யாணத்துக்கு கூப்பிடாம இருக்கிறதுக்கு. பிரியாணி சாப்பிட கிளம்பு ! என புரிந்துகொள்ளும் தொப்புள் உறவு.
நிச்சயமா! ஏமாத்த மாட்டாங்க.அவங்க அல்லாஹ்வை வணங்குறவங்க என நம்பிக்கை பாராட்டும் சமூகம்.
ஒரு முஸ்லீம அடிக்கிறத வேடிக்கை பார்க்க முடியாது என கிளம்பும் உறவுமுறை தேடும் சொந்தம்.
இன்னும் சொல்லிட்டே போகலாம்...
ஒரு முஸ்லீமாக அவர்களுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கோம்...!!!!இன்ஷா அல்லாஹ்...
நன்றி!!!

No comments:
Post a Comment