Friday, May 24, 2019

2019 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு மரண அடி! தமிழ்நாடு மட்டுமே விதிவிலக்கு..???

1) மெஹபூபா மெஹ்தி என்ற பெண்மணியை
அறிவீர்கள்! கடந்த ஆண்டு வரை காஷ்மீர் 
முதல்வராக இருந்தவர். பழைய உள்துறை அமைச்சர்
மப்டி முகமது சயத்தின் மகள் இவர்.
2) மெஹபூபா அனந்தநாக் தொகுதியில் போட்டி இட்டார்.
தோற்று விட்டார். மூன்றாம் இடம் வந்தார். இவருடைய
கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த
மக்களவையில் இக்கட்சிக்கு இடம் பூஜ்யம்.
3) பீகாரின் பிரபல வாரிசு அரசியல் கட்சி லல்லு பிரசாத்தின்
RJDக்கு இந்த மக்களவையில் இடம் பூஜ்யம்.
4) லல்லுவின் மகள் மிசா பாரதி பாடலிபுத்திரம் தொகுதியில்
பாஜகவிடம் தோற்றார்.
5) பீகாரில் சரண் (Saran) தொகுதியில் லல்லு பிரசாத்தின்
மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்வின் மாமனார்
(அதாவது லல்லு பிரசாத்தின் சம்பந்தி) போட்டி இட்டார்.
இவர் பெயர் சந்திரிகா ராய். இவர் தோற்று விட்டார்.
இவரை பாஜகவின் ராஜிவ் பிரதாப் ரூடி தோற்கடித்தார்.
6) மேற்கு வங்கத்தில் ஜங்கிபூர் தொகுதியில்
போட்டியிட்ட அபிஜித் முகர்ஜி (முன்னாள் ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜியின் மகன்) தோல்வி அடைந்தார்.
இவரை திரிணாமூல் தோற்கடித்தது. அபிஜித் முகர்ஜி
மூன்றாம் இடம் வந்தார்.
7) உபியில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வின்
மனைவியும், முலாயம் சிங் யாதவ்வின் மருமகளும்
ஆகிய டிம்பிள் யாதவ் கனோஜ் தொகுதியில் போட்டி
இட்டார். தாம் பேரழகி என்று கருதிய அவர் வெற்றி
உறுதி என்று நம்பி இருந்தார். ஆனால் தோற்று விட்டார்.
8) மாநிலம்: உபி. தொகுதி கனோஜ். முடிவு விவரம்.
பதிவானவை = 11,40,496
சுப்ரத் பதக் (பாஜக) = 5,63,087
டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி) = 5,50,734
பாஜக வெற்றி!
9) தெலுங்கானாவில் அசுர பலத்துடன் முதல்வராக
இருப்பவர் சந்திரசேகர ராவ். இவரின் மகள் கவிதா.
இவர் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்டுத்
தோற்றார். இவரை பாஜகவின் அரவிந்த் தருமபுரி
என்பவர் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில்
தோற்கடித்தார்.
10) தெற்கே வந்தால், கர்நாடகத்தில் முன்னாள் பிரதமர்
தேவகவுடாவின் பேரனும், இப்போதைய கர்நாடக
முதல்வர் குமாரசாமி கவுடாவின் மகனும் ஆகிய
நிகில் கவுடா (வயது 31) மாண்டியா தொகுதியில் போட்டி
இட்டார். இவர் ஒரு சினிமா நடிகரும் ஆவார். அதாவது
நமது உதயநிதி ஸ்டாலினுடன் இவரை ஒப்பிடலாம்.
உதயநிதியும் நடிகர்; அரசியல்வாதி.
11) ஆனால் தேவகவுடாவின் பேரனைக் காயடித்தனர்
மாண்டியா மக்கள். தோல்வி அடைந்தார்.
மாநிலம்: கர்நாடகம். தொகுதி: மாண்டியா. முடிவு விவரம்.
சுமலதா அம்பரீஷ் (பாஜக ஆதரவு சுயேச்சை) = 7,03,660
நிகில் குமாரசாமி = 5,77,784
1,25,876 வாக்குகள் வித்தியாசத்தில் நிகில் தோற்றார்.
12) இவை பொதுவான ஒரு போக்கு. அதே நேரத்தில்
பிற மாநிலங்களில் ஒரு சில வாரிசுகளும் வெற்றி
பெற்றுள்ளனர்.
13) இந்தப் பொதுப்போக்கிற்கு விதிவிலக்கு
தமிழ்நாடு மட்டுமே. எங்கு நோக்கினும் வாரிசுகள்.
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, கள்ளக்குறிச்சி தொகுதிகளில்
வெற்றி பெற்ற திமுகவினர் நால்வரும் வாரிசுகளே...
இது போக ஏகப்பட்ட வாரிசுகளுக்கு தமிழகம்
வெற்றி தேடிக் கொடுத்துள்ளது.
இந்த மோடி அலையில் தன் மகன் மட்டும் வெற்றி பெற முடியாமல் போய்விட்டதே என கழக பொருளாளர் நெஞ்சு வலியில் மருத்துவ மனையில்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...