Tuesday, May 28, 2019

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்று கொண்டனர்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் அ.தி.மு.க. ஒன்பது இடங்களிலும், தி.மு.க. 13 இடங்களிலும் வெற்றி பெற்றது.ஆண்டிப்பட்டியில் மகாராஜனும், தஞ்சாவூரில் நீலமேகமும், பெரியகுளத்தில் சரவணக்குமாரும், பெரம்பூரில் சேகரும், பூந்தமல்லியில் கிருஷ்ணசாமியும், குடியாத்தத்தில் காத்தவராயனும், திருப்போரூரில் இதயவர்மனும், ஆம்பூரில் வில்வநாதனும், திருவாரூரில் பூண்டி கலைவாணனும், ஒசூரில் சத்யாவும், அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜியும், ஒட்டப்பிடாரத்தில் சண்முகையாவும், தி.குன்றத்தில் சரவணனும் வெற்றி பெற்றனர்.


இவர்கள் அனைவரும், இன்று(மே 28) சபாநாயகர் தனபால் அறையில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர். சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சட்டசபையில் தி.மு.க.,வின் பலம் 101 ஆக அதிகரித்துள்ளது. 
முன்னதாக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் திமுகவின் தலைமை அலுவலகத்தில் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

LA,D.M.K,DMK,எம்.எல்.ஏ.,தி.மு.க,


பொறுத்திருந்து பாருங்கள்

இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், எம்எல்ஏக்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது சட்டசபை கூடியதும் தெரியவரும். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து, சட்டசபை கூடும் தேதி அறிவித்த பின்னர் முடிவெடுக்கப்படும். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.




அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்பது பேர் நாளை(மே 29) காலை பதவியேற்க உள்ளனர். இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...