Friday, May 24, 2019

ஃபுட் பாய்சனுக்கு காரணம் என்ன?

நாம் தினமும் உண்ணும் உணவில் கவனம் தேவை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் சமைத்த உணவுகளை ஃபிரிட்ஜ் உள்ளதே என்று பிரோலில் துணிகளை அடுக்குவது போல அடுக்கி வைத்து உண்பது ஃபுட் பாய்சனுக்கு முக்கியகாரணம்.
எண்ணெய், பால் போன்ற பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போகக்கூடியவை அதனை சேர்த்து வைத்து சாப்பிடக்கூடாது.

மளிகை பொருட்களில் புஞ்சை புடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு புஞ்சை பிடித்த பொருட்களை வெய்யிலில் காயவைத்து உபயோகிக்க வேண்டும். சில சமயம் அப்படி பயன்படுத்தும் பொருட்கள் கெட்டுப்போகவும் வாய்ப்பு உள்ளது.
கடைகளில் வாங்கும் அனைத்து உணவு பொருட்களுக்கும் எக்ஸ்பைரி தேதியை பார்த்து உபயோகிக்க வேண்டும்.
முடிந்த வரை அன்றாடம் தேவையான உணவுகளை அன்றே சமைத்து உண்பது சிறந்தது.
கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து இருக்கும் இன்ஸ்ட்டன்ட் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...