Tuesday, May 28, 2019

கரூர் தலப்பாகட்டு பிரியாணி கடையின் அடாவடி....

உணவில் காயத்திற்கு போடும் பாண்டேஜ் இருந்ததால், புகார் கூறிய இளைஞர்களை மிரட்டிய கடை நிர்வாகம்...
நேற்று கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தலப்பாகட்டி பிரியாணி உணவகத்திற்கு சாப்பிட வந்த இளைஞர் ஒருவருக்கு வழங்கிய பிரியாணியில் காயத்திற்கு போடும் பாண்டேஜ் ஒன்று இருந்துள்ளது.
இது பற்றி கடை நிர்வாகியிடம் புகார் கூறிய போது வந்தமா, சாப்பிட்டமா போய்கிட்டே இருக்கனும்... இல்லேன்னா நடக்கறதே வேர.. இப்படி சினிமா வில்லன் மாதிரி அடாவடியாக கூறியுள்ளனர்.
Image may contain: one or more people
பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள், கடை நிர்வாகி அடாவடித்தனமாக பதில் கூறியதை கண்ட தும் அனைவரும் கடை நிர்வாகிகளை கண்டித்து சத்தம் போட்டு...சாப்பாட்டை பாதியிலேயே முடித்துக்கொண்டு கடையின் முன் திரளாக கூடினர்.
தகவல் அறிந்த கரூர் காவல் துறையினர் இது பற்றி விசாரித்தனர். கூடவே உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதார ஆய்வாளரிடம் புகார் அளித்தனர்.
தலப்பாகட்டி உணவகத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
No photo description available.
வாடிக்கையாளர்கள் ஏதாவது புகாரோ அல்லது உணவில் குறைபாடோ கூறினால்... புகார் கூறியவரை கடையில் வேலை பார்க்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு மிரட்டுவது.... உன்னை யாரும் சாப்பிட கூப்பிடல... பிடிச்சா சாப்பிடு இல்லைன்னா போய்க்கிட்டே இரு... இப்படி மூன்றாம் தரமாக மிரட்டும் நிலை தொடர்ந்து நடக்கிறது.
பொது மக்களும் நமக்கு எதுக்கு வம்பு என்று அமைதியாக சென்று விடுகிறார்கள்..
மேலும் தலப்பாகட்டி பிரியாணி கடையின் விளம்பரத்தால் கவரப்படும் பொதுமக்கள் இப்படி தொடர்ந்து அவமானப்படுகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் தலப்பாகட்டி பிரியாணி கடைகள் இருக்கிறது. அதனால் வருமானமும் நிறைய வருகிறது. இதனால் கடையின் உரிமையாளரும் இப்படி பட்ட புகார்களை கண்டு கொள்வதில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்... எந்த ஒரு தொழிலுக்கும் வாடிக்கையாளர்கள் தான் முக்கியம்....
அதை ஆணவத்தால் மறந்தால்.. காலம் நிச்சயம் பாடத்தை கற்றுக்கொடுக்கும்...
அதற்கு தலப்பாகட்டி பிரியாணி கடை நிறுவனம் ஒன்றும் விதிவிலக்கல்ல...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...