நான் போட்டது மூணு போஸ்ட் -
1. படித்தவர்கள், பணக்காரர்கள், பிராமணர்கள் வாக்களிக்க வருவதில்லைனு -
விளக்கம்:- இத நான் ரெண்டு வருஷமா சொல்லிட்டு இருக்கேன் -
சென்னை போன்ற நகரவாசிகள் பெரும்பாலும் கிடைத்த ஐந்து நாட்கள் விடுமுறையைக் கழிக்க வெளியூர்களுக்குச் சென்று விடுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை -
இல்ல, நாங்க பிராமணர் எல்லாம் ஓட்டுப் போட்டோம்னு சொல்லவே முடியாது அதுவும் பா.ஜ.கவுக்கு _
2016 சட்டமன்றத் தேர்தல்ல பா.ஜ.க வாங்கின ஒட்டு 2.9% மட்டும் தான் -
ஆனா, இங்க பிராமணர்களோட ஓட்டு மட்டும் 3% இருக்கு -
அப்ப, 0.5% கூட ஓட்டுப் போடல அதாவது பா.ஜ.கவுக்கு _
2. அடுத்த Post மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற பிராமணர்களை அதிகமாகக் கொண்ட தொகுதியில் கமலஹாசனுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக 12% வாக்குகள் கிடைத்திருக்கிறது என்றும் -
அடுத்ததாக TTV க்கு ராமநாதபுரத்தில் அதிகமாக 13% வாக்குகள் கிடைத்திருக்கிறது என்றும் காரணம் என்ன என்றும் கேட்டிருந்தேன் -
இரண்டிற்கும் சாதிதான் காரணம் என்பது என் புரிதல் -
இதில், வசதியாக இரண்டாவது பாதியை மறைத்து விட்டு முதல் பாதி பதிவுக்கு பொங்குகிறார்கள் -
எவன் எவ்வளவு கேடுகெட்டவனாக இருந்தாலும் சாதி பார்த்து வாக்களிக்கிறார்களே என்ற வேதனையில் எழுதிய பதிவு அது -
3. மூன்றாவதாக நான் போட்டிருந்தது காலங்காலமாக இங்கே வர்ணங்கள் பற்றிப் பரப்பப்பட்டு வரும் வதந்தி பற்றிய விளக்கம் -
இதில் கண்டிப்பாக பிராமணர்கள் பற்றிக் கூறித்தான் ஆக வேண்டும் -
பிராமணர்கள் தான் இதை மற்றவர்களுக்குத் தெளிவாக விளக்கி ஆக வேண்டும் -
ஆனால், கடந்த ஐந்து வருடங்களாக டிவி விவாதங்களில் தோன்றும் பிராமணர்கள் இதை உரிய முறையில் விளக்கி இருக்கிறார்களா?-
எத்தனையோ பேர் பார்ப்பான் தான் சாதிகளை உருவாக்கினான் என்று முகத்திற்கு நேரே கூறிய போதும் -
இல்லையில்லை அப்படி ஒரு விஷயம் மநு-விலும் இல்லை கீதையிலும் இல்லை என்று கூறியிருக்கிறார்களா -
KTராகவன், நாராயணன் திருப்பதி, Nithyanantham msr, டாக்டர் ராமசுப்பு இன்னும் நிறையப் பேர் _
யாரவது ஒருவர் ஆணித்தரமாக விளக்கியிருக்கிறார்களா?-
செய்யவே மாட்டார்கள் ஏனென்றால் அந்த காரணம்- அதை அவர்களே கூறட்டும் -
மேலும், பல கோவில்களில் நடப்பவை பற்றி நான் எழுதிய பதிவுகளும் உண்மையே தான் -
இவையெல்லாம் காழ்புணர்ச்சி அல்ல -
ஆதங்கம் -
ஆதங்கம் -
இந்துக்களை ஒன்றுபடுத்த வேண்டிய தலையாய கடைமை பிராமணர்களுக்கு இருக்கிறது என்ற ஆதங்கம் -
இதற்கு மேல், நான் பிராமணர்களைப் பற்றி உயர்வாக எழுதிய பதிவுகள் ஏராளம் -
அவையும் உண்மைதான் -
ஆனால், இந்த மூன்று பதிவுகளுக்காக என்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தி பதிவிடுகிறார்கள் -
அதில் ஒரு அக்கா நான் பார்ப்பான் என்று திட்டியதாக பதிவு -
எந்த இடத்தில் நான் பார்ப்பான் என்று எழுதியிருக்கிறேன் என்று நிரூபித்தால் நான் முகநூலில் இருந்தே வெளியேறத் தயார் -
என்றும் -
No comments:
Post a Comment