நகரி, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைய உள்ள புதிய அரசில் நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது.லோக்சபா தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 149 தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.அக்கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா அமோக வெற்றி பெற்றார். கடந்த 2014ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் நகரி தொகுதியில் ரோஜா வெற்றி பெற்றார்.அப்போது ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார். இதனால் ஜெகன் மோகன் ரெட்டியின் நம்பிக்கைக்குரியவர்களில் முக்கியமானவராக ரோஜா உள்ளார்.இதையடுத்துஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் பதவியேற்க உள்ள புதிய அரசில் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment