'ஒருத்தனை ஏமாத்தனும்னு முடிவு பண்ணிட்டா மொதல்ல அவன் ஆசையை தூண்டனும்' - இது சதுரங்க வேட்டை பட வசனம்.
அதுக்கு உதாரணம் கீழேயுள்ள ஆட்கள், அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டுப்போய் , தங்களுடைய ஆட்சிக்காலத்திலேயே , தனது எம்.எல்.ஏ பதவிகளை இழந்து, மீண்டும் அந்த எம்.எல்.ஏ பதவியாவது கிடைக்காதா என ஏங்கி, தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட்டைக்கூட வாங்க முடியாமல் தோற்றுப்போன ஏமாளிகள் இவர்கள்.
இதில் 15 பேருக்குதான் அமைச்சர் பதவி ஆசை. 3 பேருக்கு முதலமைச்சர் நாற்காலி மீது ஆசை.
"எடப்பாடியை வீட்டுக்கு அனுப்பிட்டு இந்த பதினெட்டு பேர்ல ஒருத்தரை முதலமைச்சராக்குவேன்னு ஒரு டுபாக்கூர் சொன்னதை நம்பி 3 பேர் ரொம்ப ஆசையை வளர்த்துட்டு சுத்துனாங்க. அந்த 3 முதலமைச்சர் கேன்டிடேட் தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, வீடியோ வெற்றிவேல்.
குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு ஒருத்தனுக்கு தான் ஏமாற்றப்படுறோம்னு தெரிந்ததும் திமுகவுக்கு எஸ்கேப் ஆகி இப்ப எம்.எல்.ஏவாகவும் ஆகிட்டான். அதுல மீதி இருந்த 17ம் இப்ப நடுத்தெருவுல நிக்குது.
ஒரேயொருமுறை எம்.எல்.ஏவாக இருந்தாலே அவர் பதவிக்காலம் முடிந்தபிறகு சாகும்வரை எம்.எல்.ஏ பென்ஷன் கிடைக்கும். அது ஒரு எம்.எல்.ஏ தகுதிநீக்கம் செய்யப்பட்டா கிடைக்காது. இந்த 17 பேருக்கும் பென்ஷன்கூட கிடைக்காது.
முன்னபின்ன தெரியாத ஈமு கோழி வளர்ப்பில் லட்சலட்சமா சம்பாதிக்கலாம்னு ஆசைப்பட்டு பணத்தை இழந்த ஆட்கள் மாதிரிதான் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு எல்லாத்தையும் இழந்து இப்ப புலம்பிட்டிருக்காங்க.
No comments:
Post a Comment