Monday, May 27, 2019

தன்மான காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்.

காங்., கட்சியினரை ‛காய்ச்சி' எடுத்த ராகுல், பிரியங்கா
தேர்தல் தோல்வி பற்றி ஆராய்வதற்காக கூடிய காங்., காரிய கமிட்டி கூட்டத்தில், பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, கட்சியினரை ராகுலும் பிரியங்காவும் காய்ச்சி எடுத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ராகுல் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு பொருத்தமானவர் இல்லை என்று யாரோ ஒருவர் பேசி இருக்கிறார்
அதை தொடர்ந்து பேசிய ராகுல், ‛
======================================
‛இங்கேயே பல தலைவர்கள் இருக்கிறீர்கள். ஆனால் கட்சிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள். மகனுக்கு சீட் தராவிட்டால் கட்சியில் இருந்து விலகுவேன் என்று ப.சிதம்பரம் மிரட்டினார். மகன்களுக்கு சீட் வாங்குவதே முதல் வேலை என்று கமல்நாத்தும், அசோக் கெலாட்டும் அலைந்தனர். அவர்கள் இருவருமே ஜெயிக்கவில்லை. ராஜஸ்தானில் ஒரு இடத்தில் கூட கட்சி வெற்றி பெறவில்லை'' என்று பொறிந்து தள்ளி விட்டார்.
‛‛என்னையே சில தலைவர்கள் பிளாக் மெயில் செய்கின்றனர். அதனால் தான் நான் பதவி விலகுகிறேன் என்று சொல்கிறேன். எனது இடத்துக்கு என் சகோதரி பெயரை சொல்லக் கூடாது. எங்கள் குடும்பத்தை சாராத யார் பெயரையாவது கூறுங்கள்'' என்றாராம்.
‛‛காவலாளியே ஒரு திருடன்'' என்று மோடி பற்றி ராகுல் செய்த விமர்சனத்துக்கு ஆதரவாக மற்ற தலைவர்கள் யாரும் குரல் கொடுக்க வில்லை நீங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு என்ன செய்திர்கள்
அடுத்து பேசிய பிரியங்கா,
================================
‛‛கடுமையாக தேர்தல் பிரசாரம் செய்த ராகுலின் உழைப்பை கட்சி தலைவர்கள் யாரும் பாராட்டவில்லை. நான் மட்டுமே பாராட்டினேன். அவருக்கு வேறு யாரும் ஒத்துழைப்பு தரவில்லை. ராகுலின் தலைமை பற்றி இப்போது கேள்வி எழுப்பும் தலைவர்கள், அப்போது எங்கு போனீர்கள்' என்று கேட்டார்.
கூட்டத்தில் பிரியங்கா தான் அதிக கோபத்தில் இருந்துள்ளார். அடிக்கடி பொறுமையை இழந்து, ஆவேசமாக பேசி உள்ளார்.
இதைப் பார்த்து காங்., மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி, ‛‛ இங்கு நடப்பதை வெளியே யாரும் சொல்லக் கூடாது'' என்றும் வேண்டுகோள் வி்டுத்துள்ளார்.
தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்று அறிவி்த்த ராகுல், மற்ற தலைவர்களின் வேண்டுகோளுக்குப் பிறகும் முடிவை மாற்றாமல் இருக்கிறார். இன்னும் நிறைய பேர், கெஞ்சிக் கேட்டுக்கொண்டால் மட்டுமே ராஜினாமாவை வாபஸ் பெற வேண்டும் என்று ராகுல் நினைக்கிறாராம்.
தங்கள் குடும்பத்தினரைத் தவிர, வேறு யாரும் தலைவர் பதவிக்கு வர துணிய மாட்டார்கள் என்ற தைரியத்தில் இருக்கிறாராம் ராகுல்.
ராகுல் மற்றும் பிரியங்காவின் உதவியாளர்களில் பலர் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டது மற்ற தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...