மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் அவர்கள் அப்பழுக்கற்ற மனிதர்தான் -
யாரையும் தரம் தாழ்ந்து பேச மாட்டார் -
ஜெயலலிதாவைக் கூட அம்மா என்றும் -
கருணாநிதியை கலைஞர் என்றும் அவர்கள் கட்சித் தொண்டர்கள் அழைப்பது போலவே குறிப்பிட்டுப் பேசுவார் -
கருணாநிதியை கலைஞர் என்றும் அவர்கள் கட்சித் தொண்டர்கள் அழைப்பது போலவே குறிப்பிட்டுப் பேசுவார் -
தனது உழைப்பால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்சியை வளர்த்து 2014-ல் MPயாகி இன்று மத்திய அமைச்சராக உள்ளார் -
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார் இந்த நான்காண்டுகளில் -
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார் இந்த நான்காண்டுகளில் -
ஆனால், இவர் சமீப காலமாகத் தடுமாறுவது போல் தெரிவது எனக்கு மட்டும்தானா?-
முதலாவதாக இங்கே ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமாக மாறி நாம் அனைவரும் ஒரே குரலில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள் தேவை என்று கம்பு சுற்றிக் கொண்டிருக்க -
இந்தப் போராட்டங்களே பிரிவினைவாதிகளான, தமிழ் தேசியம் பேசுபவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களின் வேலைதான் என்றும் புரிய வைக்க முயற்ச்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் -
இவர் 1996-ல் அப்பொழுதே நான் ஸ்டெர்லைட்டை மூடச்சொல்லி போராடி சிறை சென்றதாக பழைய Photo க்களை எடுத்து பரவவிட்டு நமது கருத்துக்களை நீர்த்துப்போகச் செய்தார் -
1996-ல் தான் ஆலையே ஆரம்பிக்கப்பட்டது அதற்குள் எப்படித்தான் சுற்றுச்சூழல் மாசுபடும் என்று கண்டறிந்தாரோ?- இருக்கட்டும் -
அடுத்ததாக நாம் இங்கே ஒரு நூற்றாண்டாக பரப்பப்பட்டு வரும் திரா"விடத்தை"எதிர்த்து கம்பு சுற்றி வரும் நேரத்தில் -
நானும் "திராவிடன்" தான் என்று அடுத்த அம்பை எடுத்து நெஞ்சில் சொருகினார் -
சென்னை விமான நிலையத்தில் அண்ணாவின் சிலையை திறக்கச் சொன்னேன் என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் -
இன்று புதியதலைமுறை கோவையில் பிரிவினைவாதி அமீரை வைத்து நடத்திய நிகழ்ச்சியில் இந்த இயக்கத்துக்காக உயிர்த்தியாகம் செய்த சசிக்குமாரின் இறுதி ஊர்வலத்தைக் கொச்சைப்படுத்திப் பேசிய பொழுது வெகுண்டெழுந்த கோவை வாசிகள் அமீரை எதிர்த்துக் குரல் எழுப்பினர் -
அவர்களே காவல் நிலையத்தில் புகார் அளிக்க அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது -
இந்த நிலையில் அந்தத் தொலைக்காட்சியே அந்த சர்ச்சைக்குறிய கருத்துக்களை எடிட் செய்துதான் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது -
அப்படியானால் சர்ச்சைக்குறிய வகையில் அமீர் பேசியதை அந்தத் தொலைக்காட்சியே ஒப்புக் கொண்டதாகத்தான் அர்த்தம் -
இதை எடப்பாடி அரசும் கூட ஏற்றுக்கொண்டு வழக்கைப் பதிவு செய்ததோடல்லாமல் அந்தச் சேனலை அரசு கேபிளில் 499-வது இடத்திற்கு கொண்டு சென்று விட்டது -
இந்த நிலையில் புதிய தலைமுறைக்கும் அமீருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய மத்திய மோடி அரசின் பிரதிநிதி அந்த ஊடகத்துக்கு வக்காலத்து வாங்குகிறார் -
இப்படி இருந்தால் உங்களை நம்பி பொதுமக்கள் எப்படி வருவார்கள்?-
மீண்டுமொரு பதிவை இதே போன்று இட்டு கண்ணாடி வீட்டில கல் எறிய நான் தயாரில்லை -
கேட்பதையெல்லாம் இதே பதிவில் கேட்டுவிடுகிறேன் -
உண்மையில் தமிழகத்தில் பா.ஜ.க வளர வேண்டும் என்ற எண்ணம் தலைமைக்கு இருக்கிறதா?-
தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கக் கூடிய இந்தச் சூழ்நிலையில் கூட தமிழகத் தலைவர் தமிழிசை ஆழ்நிலை தியாணத்தில் இருப்பது ஏன்?-
தமிழகத்தில் இருக்கும் அத்துனை தொண்டர்களும் எதிர்பார்க்கும் தலைமை மாற்றத்தை நீங்கள் ஏன் மத்திய தலைமையிடம் கொண்டு செல்வதே இல்லை -
ஏனைய பிற திராவிடக் கட்சிகளின் வழியில் செல்லுமிடமெல்லாம் " டாக்டர் அக்காவே ", "தமிழகத்தின் வேலுநாச்சியாரே", என்று கட் அவுட்டுகள் வைத்து புளங்காகிதம் அடைவதை மக்கள் விரும்புவதில்லையே இவற்றையெல்லாம் தடுக்க ஏதாவது முயற்சி எடுத்தீர்களா?-
ஏனைய பிற திராவிடக் கட்சிகளின் வழியில் செல்லுமிடமெல்லாம் " டாக்டர் அக்காவே ", "தமிழகத்தின் வேலுநாச்சியாரே", என்று கட் அவுட்டுகள் வைத்து புளங்காகிதம் அடைவதை மக்கள் விரும்புவதில்லையே இவற்றையெல்லாம் தடுக்க ஏதாவது முயற்சி எடுத்தீர்களா?-
"காலா" திரைப்படத்தை 30 வருட ரஜினி ரசிகர்களே வெகுண்டெழுந்து எதிர்த்து வருகையில் -
அருமையான திரைப்படம் என்று விருது தரச் சொல்கிறாரே தமிழிசை அதை நீங்கள் கூட ஏற்றுக்கொள்கிறீர்களா? -
ஒன்றரை சதவீத ஓட்டுவங்கி கொண்ட திரிபுராவில் கூட தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துவிட்டோம் -
ஆனால், தமிழகத்தில் ரஜினியின் முதுகில் ஏறி சவாரி செய்து ஏதாவது அமைச்சர் பதவி, வாரியம், கீரியம் என்று பெற்று காலத்தை ஓட்டிவிட விரும்புகிறீர்களா? -
அவர், ஏற்கனவே தெளிவாக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டது தங்களுக்குத் தெரியாதா?.
அவர் கூட மக்கள் மன்றம் என்ற பெயரில் உறுப்பினர்களை வேகமாகச் சேர்த்து வருகிறார் -
நீங்கள், தமிழக பா.ஜ.க வைக் கலைத்துவிட்டு ரஜினியின் மக்கள் மன்றத்துடன் இணையப் போகிறீர்களா?
இப்படியே போய்க் கொண்டிருந்தால் தமிழக பா.ஜ.க வில் ஒரே ஒரு தொண்டன் கூட இருக்க மாட்டான் -
தொண்டர்களின் மனநிலை அறிந்து செயல்படாத எந்தக் கட்சியும் வளர முடியாது -
இந்த இயக்கத்திற்காக உயிர் நீத்த நூற்றுக்கணக்கான உயிர்களை கொச்சைப்படுத்துவது போல் செயல்படுகிறது தமிழக பா.ஜ.க வின் தலைமை -
No comments:
Post a Comment