Monday, May 27, 2019

தெரிந்ததும் தெரியாததும் .


1.இருட்டில் சாப்பிடக் கூடாது.
சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி, அதன் பின்பே சாப்பிட வேண்டும்.(இன்று மின்சாரம் உள்ளதால் இப்படி தடையாகும் நேரத்தில் ஒருமுறை சூரிய சிந்தனை செய்வது நன்மை )
2. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன்- மனைவிக்கும்,
மகன்- தாய்க்கும்,
பெண்- தந்தைக்கும் வெற்றிலை மடித்துத் தரக் கூடாது.
3.குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரியை பார்க்கச் செல்லும் போதும், ஆலயம் செல்லும்போதும் வெறுங்கையுடன் செல்லக் கூடாது.
4.இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி, தலையில் தேய்க்க வேண்டும்.
5.தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.
6. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.
7.மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.
8. பேசும்போது எதையும் கிள்ளிப் போடக் கூடாது.
8. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
9.சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் தூவி விட ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தீர்ந்து போகும் ..
10.சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில்
(காலை4.30- 6 மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம்உண்டாகும்.
முன்வினைப் பாவம் விலகும்.
மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும்
மிகவும் உகந்தவை.இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை,
கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...