'உள்ளடி' வேலைகள் பார்த்த நிர்வாகிகள் மீது ஜெ., பாணியில் கடும் நடவடிக்கைகள் எடுக்க திமுக தலைவர் ஸ்டாலின் தயாராகி வருகிறார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 37 தொகுதிகளில், அமோக வெற்றி பெற்றுள்ளது. அதில், தி.மு.க., சார்பில், 19 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், 22 சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில், 13 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள போதும், சட்டசபை தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சியை கைபற்றலாம் என ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது நிறைவேறாமல் போனதால், அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை. போட்ட கணக்கு தப்பியதால் ஸ்டாலினும் விரக்தியில் உள்ளார். இந்நிலையில் சட்டசபை இடைத்தேர்தலில், திமுக.,வுக்கு தோல்வி கிடைத்த இடங்களில், 'உள்ளடி' வேலை பார்த்த நிர்வாகிகள் மீது, ஜெ., பாணியில கடும் நடவடிக்கைகளை எடுக்க ஸ்டாலின் தயாராகி வருகிறார்.
No comments:
Post a Comment