Saturday, May 25, 2019

அமேதியில் ராகுல் தோல்விக்கு காரணம் என்ன?

 கடந்த, 1980ல் இருந்து, காங்., குடும்ப சொத்தாக இருந்த, உத்தர பிரதேசத்தின் அமேதி லோக்சபா தொகுதியில், காங்., தலைவர் ராகுலின் தோல்விக்கு முக்கிய காரணம், கிராமப் பகுதியில் உள்ள மக்களுடன் நேரடி தொடர்பு இல்லாததே எனக் கூறப்படுகிறது.
 அமேதி, ராகுல், தோல்வி, காரணம் ,என்ன?

காங்கிரசின் கோட்டைலோக்சபாவுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், உத்தர பிரதேசத்திலுள்ள, அமேதி தொகுதியின் முடிவு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தொகுதியில், முன்னாள் பிரதமர் இந்திராவின் இரண்டாவது மகனான, சஞ்சய், 1980ல் வென்றார். அவரைத் தொடர்ந்து, இந்திராவின் மூத்த மகன், ராஜிவ், நான்கு முறை இங்கு வென்றுள்ளார்.அவருடைய மனைவி, சோனியா, 1999ல், இங்கு வென்றார். 



ராஜிவ் - சோனியாவின் மகனும், காங்., தலைவருமான, ராகுல், இந்தத் தொகுதியில், தொடர்ந்து, மூன்று முறை வென்றார். காங்கிரசின் கோட்டை என்றழைக்கப்படும் இந்தத் தொகுதியில், தற்போது நடந்த தேர்தலில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 55 ஆயிரத்து,120 ஓட்டுகளில், ராகுலை வென்றார். 



கடந்த, 2014ல் நடந்த தேர்தலில், ராகுல், 1.07 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், ஸ்மிருதி இரானியை வென்றார்.கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும், ஸ்மிருதி இரானி இந்தத் தொகுதிக்கு அடிக்கடி பயணம் செய்து, மக்களை சந்தித்து வந்தார். 



அவருடைய கடின உழைப்பே, இந்தத் தேர்தலில், ராகுல் தோல்விக்கு காரணமானது.பிரசார யுக்திஇது குறித்து, அமேதி தொகுதி மக்கள் கூறியதாவது: கடந்த, 1980ல் இருந்து இந்தத் தொகுதி, முன்னாள் பிரதமர் இந்திரா குடும்பத்தாரின் சொத்தாகவே இருந்து வந்துள்ளது.கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, பா.ஜ.,வின் மத்திய அமைச்சராக பணியாற்றிய, ஸ்மிருதி இரானி, இங்கு தீவிரமாக களமிறங்கினார். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தினார்; மக்களை நேரடியாக சந்தித்து பேசினார். அவருடைய தீவிர பிரசாரம், காங்., கோட்டையை தகர்க்கும் வகையில் அமைந்தது.


தொகுதியின், எம்.பி.,யாக இருந்த ராகுல், அவ்வப்போது இங்கு வருவார். ஆனால், அமேதி தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளுக்கு, அவர் அதிகம் சென்ற தில்லை. கட்சித் தலைவராவதற்கு முன்பே அப்படிதான் இருந்தார்.அவருக்கு ஆலோசனை வழங்கும் குழுவினர், சரியான பிரசார யுக்தியை வகுத்து தரவில்லை. அதேநேரத்தில், ஸ்மிருதி இரானி, ஒவ்வொரு நடவடிக்கையையும் திட்டமிட்டு செயல்படுத்தினார். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் சென்று, பா.ஜ., அரசின் திட்டங்கள், மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து, அவர் நேரடியாக விளக்கினார். 



எடுபடவில்லை

ராகுலின் தங்கை, பிரியங்கா வின் பிரசாரமும்  இங்கு எடுபடவில்லை. அவரும் விமான நிலையத்தில் இறங்கி, நகர்பகுதிகளில் மட்டுமே மக்களை சந்தித்தார். நெடுஞ்சாலையில் காரில் போகும்போது, கையை அசைத்தால், ஓட்டு கிடைத்து விடுமா என்ன.முன்னாள் பிரதமர் ராஜிவ், எம்.பி.,யாக இருந்தபோது, தொகுதி யில் மேற்கொண்ட பணிகள் குறித்து, தற்போதுள்ள இளம் வாக்காளர்களுக்கு தெரியாது. பா.ஜ.,வின் வளர்ச்சித் திட்ட பிரசாரங்கள் அவர்களை ஈர்த்துள்ளது. அதனால், இளம் வாக்காளர்களின் ஓட்டு, அதிகளவில், பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. கடந்த, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், அமேதி தொகுதிக்குட்பட்ட, ஐந்து சட்டசபை தொகுதிகளில், நான்கில், பா.ஜ., வென்றது. ஒன்றை மட்டுமே காங்., வென்றது. 


அதன் பிறகும், இந்த, நான்கு தொகுதிகளில் கட்சியை வளர்ப்பதற்கான முயற்சிகளை, காங்., மேற்கொள்ளவில்லை. மொத்தத்தில், தொகுதி மக்களுடன் அதிக அளவு நேரடி தொடர்பு இல்லாததே, ராகுலின் தோல்விக்கு முக்கிய காரணம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...