Saturday, May 25, 2019

அ.ம.மு.க.,வை மாயமாக்க, அ.தி.மு.க., மாஸ்டர் பிளான்! சட்டசபை தேர்தல் வெற்றிக்கு கணக்கு.

தினகரன் தலைமையிலான, அ.ம.மு.க.,வை மாயமாக்க, அ.தி.மு.க., மாஸ்டர் பிளானை வகுத்துள்ளது.
 அ.ம.மு.க.,,  அ.தி.மு.க., மாஸ்டர் பிளான்

லோக்சபா தேர்தலில், தினகரன் தலைமை யிலான, அ.ம.மு.க.,வின் வேட்பாளர்கள், அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை கணிசமாக பிரிப்பர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவை பொய்த்தது. அ.தி.மு.க., தோல்வியடைந்த போதும், அதற்கு, அ.ம.மு.க., காரணமாக அமையவில்லை.

கமலின், மக்கள் நீதி மையம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை, பல இடங்களில், அ.ம.மு.க.,வை பின்னுக்கு தள்ளின. அனைத்து தொகுதிகளிலும், டிபாசிட்டை, அ.ம.மு.க., இழந்திருக்கிறது.சட்டசபை இடைத்தேர்தலில், ஒன்பது இடங்களை கைப்பற்றியதன் மூலம், அ.தி.மு.க.,வின் ஆட்சி, தமிழகத்தில் தக்க வைக்கப்பட்டுள்ளது. 


சட்டசபை இடைத்தேர்தல்களிலும், அ.ம.மு.க.,வால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, அ.தி.மு.க.,  தலைவர்களுக்கு, தன் தயவு தேவைப்படும் என, தினகரன் எண்ணியதும் நடக்கவில்லை. 'அ.தி. மு.க., வில், ஆட்சி அமைப்புகளில் பங்கேற்காத நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பலரிடம் இருந்த, தினகரன் மீதான பாசமும் இனி நீடிக்காது' எனக் கூறுகின்றனர், அ.தி.மு.க., மூத்த தலைவர்கள்.


தவறான வழிகாட்டுதலால் பிரிந்து சென்றோரை, எப்போதுமே, அ.தி.மு.க.,வுக்கு அழைக்கும் வழக்கத்தை, முதல்வர், இ.பி.எஸ்.,சும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கொண்டு இருக்கின்றனர். இம்முறை, இவர்களின் அழைப்பை பலர் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்நிலையில், அ.ம.மு.க.,வில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கான திட்டங்களை, அ.தி.மு.க., வகுத்துள்ளது.


என்னென்ன பிளான்?
பிளான் 1: அ.தி.மு.க., அதிருப்தி, எம்.எல்.ஏ.,க் களை முழுமையாக, முதல்வர் - துணை முதல்வர் தலைமையை ஏற்கவைப்பது.


பிளான் 2: அ.ம.மு.க., வில் உள்ள முக்கிய நிர்வாகி களை, அ.தி.மு.க.,வுக்கு இழுப்பது, தேவைப்பட்டால் குழு ஏற்படுத்துவது அல்லது பேச்சுவார்த்தை நடத்துவது.


பிளான் 3: அ.ம.மு.க., வில் இருந்து, தாங்களாகவே,அ.தி.மு.க.,வில் சேர விரும்புவோருக்கு, உரிய மரியாதை மற்றும் வரவேற்பளிப்பது.


பிளான் 4: முக்கியமாக, அ.ம.மு.க.,வில் உள்ளவர்களை, வேறு கட்சிகளுக்கு செல்ல விடாமல், அ.தி.மு.க.,விலேயே சேர வைப்பது.


பிளான் 5: சசிகலா குடும்பத்தினரை, புற வழியில் கூட, அ.தி.மு.க.,வில் அனுமதிக் காமல் தடுப்பது.லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற வெற்றியைக் குறைத்து மதிப்பிட முடியாது. 



வரும், 2021ம் ஆண்டில் நடக்கவுள்ள சட்ட சபை தேர்தலுக்குள், அ.ம. மு.க.,வில் உள்ளவர்களை, அ.தி.மு.க.,வில் ஐக்கியமாக்குவதன் மூலம், தி.மு.க., அணியை எதிர் கொள்வது எளிதாகும் என, அ.தி.மு.க.,வினர் கணக்கு போட்டு, காய்களைநகர்த்த திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...