Thursday, May 30, 2019

420 தினகரனின் கூடாரம் காலியாக தொடங்கிவிட்டது.???!!!

டெபாசிட்டை பறிகொடுத்த
அமமுகவின் தங்கதமிழ்ச் செல்வன், புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்டோர் அதிமுகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இவர்கள் மூவரும் தினகரனுடன் வருவதையும் போவதையும் புறக்கணிக்க ஆரம்பித்ததை உணர்த்துகிறது தஞ்சாவூரில் நேற்று நடந்த விஷயம்.
அதிமுகவை பிடிக்க தினகரனுடன் சவடால் விட்டவர்கள் இவர்கள் தான்...
தினகரனின் ஆசைவார்த்தை யில் ஏமாந்து போன விலைமாடுகள்
18 எம்எல்ஏ களும் பதவி பறி போகும் அளவுக்கு நடந்து கொண்டனர். இந்த நிலையில் பதவி போனாலும் பரவாயில்லை, தினகரன் தொடங்கிய கட்சியில் சேர்ந்தனர்.
இதெல்லாம் தியாகம் அல்ல, நாளை அதிமுகவை தினகரன் கைப்பற்றினால் நிச்சயம் இந்த 18 பேருக்கும் பல்வேறு சலுகைகளும் லாபமும் கிடைக்கும் என்ற ஆசைதான். இதனால் தினகரனுக்காக ஏராளமான செலவுகளை செய்தனர்.
அதில் முக்கியமானவர் செந்தில் பாலாஜி. ஒரு கட்டத்தில் இதுபோன்ற செலவு வீண் என்ற உணர்ந்த செந்தில் பாலாஜி தினகரனிடமிருந்து தப்பித்து புத்திசாலித்தனத்துடன் திமுகவில் இணைந்தார், விட்டதை பிடித்தது போல் அரவக்குறிச்சியை கைப்பற்றினார்.
இதை உணராத மற்ற 17 பேரும் இன்னும் பிற ஆதரவாளர்களும் இன்னும் செலவு செய்து கொண்டிருக்கின்றனர். பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பை எண்ணி கட்சியின் முக்கிய தலைகளான தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல், புகழேந்தி உள்பட ஏராளமானோர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் தஞ்சாவூரில் அ.ம.மு.க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எம்.ரெங்கசாமி மகன் திருமணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நடத்தி வைத்தார். இந்த நிலையில் எப்போது தஞ்சை வந்தாலும் தங்க தமிழ்ச்செல்வன், புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வருவது வழக்கம்.
ஆனால், அவர்கள் யாரும் இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதனால் அவர்கள் கட்சி தாவுவது குறித்து கேள்விப்பட்ட அனைத்தும் உண்மையாகிவிடுமோ என தோன்றுகிறது. இன்னொரு புது தகவல் என்னவென்றால் செந்தில் பாலாஜி சென்றது புத்திசாலித்தனம் என தினகரனே பாராட்டியுள்ளார். எனவே நாம் சென்றாலும் தினகரன் நமது புத்திசாலித்தனத்தை நினைத்து மெய்சிலிர்த்து போவார் என லாஜிக்கே இல்லாமல் நியாயப்படுத்துகின்றனர். எங்கிருந்தாலும் வாழ்க என செந்தில்பாலாஜிக்கு வாழ்த்தியதை போல் இவர்களையும் வாழ்த்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எத்தனை கருப்பாடுகள் வேலிதாண்ட போகிறது என்பதை...???
அழியவேண்டிய கட்சிகளில் முன்வரிசையில் இருப்பது 420 தினகரனின் அமமூக்கா...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...