நாம் வீட்டில் பூஜைகள் செய்யும் பொழுது பூஜா விதானம் அல்லது எந்த பூஜை செய்கிறோமோ அதற்குண்டான புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜையை சிறப்பாக செய்து விடுவோம்.
அத்துடன் அன்றைய கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தினசரி காலண்டரை வைத்துக் கொண்டு சொல்லி விடுவோம்.
எனினும், பூஜை முடிந்ததும் பழங்கள், பக்ஷணங்கள் எல்லாம் இருக்கும் அவற்றின் நிவேதனப் பெயர்கள் பலருக்கு தெரிந்து இருக்காது. எனில், இந்த நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும். அதைப் பற்றி விளக்கும் ஒரு தொகுப்பு தான் இது. கீழ்க்கண்ட அட்டவணையில் சமஸ்கிருதத்திற்கு நிகரான தமிழ் பழங்களின் சரியான பெயர்கள் உங்கள் குறிப்புகளுக்கு தரப்பட்டு உள்ளது. அதன் படி இனிமேல் சரியான பழங்களை தேர்ந்தெடுத்து பூஜை செய்யுங்கள்.
* கதலீபலம் – வாழைப்பழம்
* பீஜாபூரபலம் – கொய்யாப்பழம்
* வேத்ர பலம் – பெரப்பம் பழம்
* பதரி பலம் – எலந்தைப் பழம்
* கர்ஜுர பலம் – பேரிச்சம் பழம்
* ஜம்பூ பலம் – நாவல் பழம்
* கபித்த பலம் – விளாம் பழம்
* சூ பழம் – மாம்பழம்
* மாதுஸங்கபழம் – மாதுளம் பழம்
* நாரங்கபலம் – நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி
* பனஸ பலம் – பலாப் பழம்
* உர்வாருகம் – வெள்ளரிக்காய்
* ஜம்பீர பலம் – எலுமிச்சம் பழம்
* இக்ஷகண்டம் – கரும்பு
* சணகம் – கடலை
* ப்ருதுகம் – அவல்
* ஸர்க்கரா – சர்க்கரை
* ததி – தயிர்
* குடோபஹாரம் – வெல்லம்
* ஆப்பிள் – காஷ்மீர பலம்
* அமிருதம் – தீர்த்தம்
* நாரிகேளம் – தேங்காய்
* ஸால்யன்னம் – சம்பா அன்னம்
* குளா பூபம் – அதிரசம், அப்பம்
* தத்யன்னம் – தயிர் சாதம்
* திந்திரியன்னம் – புளியோதரை
* ஸர்கரான்னம் – சர்க்கரை பொங்கல்
* மாஷா பூபம் – வடை
* ரஸகண்டம் – கற்கண்டு
* மோதகம் – கொழுக்கட்டை
* திலான்னம் – எள்ளு சாதம்
* ஆஜ்யோபகாரம் – நெய்
* லட்டூகம் – லட்டு
* சித்ரான்னம் – பலவகை கலந்த சாதம்
* நாரிகேளகண்டத்வயம் – இரண்டாக உடைத்த தேங்காய்
* க்ருதகுள பாயஸம் – வெல்லம் போட்ட பாயஸம்
* கோக்ஷீரம் – பசும் பால்
***************************************
#ஓம்_நமசிவாய...!!!!
#சிவாயநம_ஓம்...!!!
#அன்பே_சிவம்...!
#வாழ்க_நலமுடன்...!
#வாழ்க_வளமுடன்...!!
#வாழ்க_வையகம்...!!!
...................................................................
❀❀❀❀••••🌿🍁🍁🌺🍁🍁🌿••••❀❀❀
#ஓம்_நமசிவாய...!!!!
#சிவாயநம_ஓம்...!!!
#அன்பே_சிவம்...!
#வாழ்க_நலமுடன்...!
#வாழ்க_வளமுடன்...!!
#வாழ்க_வையகம்...!!!
...................................................................
❀❀❀❀••••🌿🍁🍁🌺🍁🍁🌿••••❀❀❀
No comments:
Post a Comment