Saturday, May 4, 2019

மது, மாத்திரை: பொள்ளாச்சியில் 159 மாணவர்கள் கைது.

பொள்ளாச்சியில் தடைசெய்யப்பட்ட போதை மருந்து, மாத்திரைகள் மற்றும் மதுபாட்டில்களுடன் விடிய விடிய ஆட்டம் போட்ட கோவையில் படிக்கும் கேரள மாணவர்கள் 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சேத்துமடை, அண்ணாநகரை அடுத்துள்ளது 'அக்ரி நெஸ்ட்' எனப்படும் ரிசார்ட். இங்கு நேற்றிரவு (மே-3) கோவையை சுற்றியுள்ள கல்லுாரிகளில் படிக்கும் 159 மாணவர்கள் மது, போதை விருந்து நடத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அண்ணாநகரில், கணேஷ் என்பவருக்கு சொந்தமான 'அக்ரி நெஸ்ட்' என்ற அனுமதி இல்லாத சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் மது விருந்துடன் இரவு கொண்டாட்டம் நடைபெற உள்ளதாக, கேரளாவைச் சேர்ந்த சிலர், சமூக வலைதளம் மூலம் ஆட்களைச் சேர்த்துள்ளனர். முன்பதிவு செய்த வெள்ளியன்று இரவு ரிசார்ட்டிற்கு வந்த ஏராளமான இளைஞர்கள், மது, மற்றும் கஞ்சா, தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை பயன்படுத்தி போதை தலைக்கேறிய நிலையில் இரவு முழுவதும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக வந்த புகாரையடுத்து, கோவை காவல்துறை எஸ்.பி., சுஜித் குமார் தலைமையிலான போலீசார் ரிசார்ட்டில் ஆய்வு செய்து 150 இளைஞர்களை கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர், கோவையில் உள்ள பல்வேறு கல்லூரி படிக்கும் வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்த கேரள மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களின் விலை உயர்ந்த கார்களும், பைக்குகளும் பரிமுதல் செய்யப்பட்டன. விருந்துக்கு ஏற்பாடு செய்த மேலும் 6 பேர் கைதாகியுள்ளனர். தலைமறைவாக உள்ள ரிசார்ட் உரிமையாளர் கணேசை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, அனுமதியின்றி செயல்பட்டு வந்த அக்ரி நெஸ்ட் ரிசார்ட்டிக்கு சீல் வைக்க கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விடிய விடிய ஆட்டம், பாட்டமாய் கொண்டாடியுள்ளனர். பெரிய பெரிய ஸ்பீக்கர்களை அலறவிட்டு ஆடித் தீர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் விருந்தில் அடிதடியும், கூச்சல், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்து கோவை எஸ்.பி., சுஜித்குமார் தலைமையில் பொள்ளாச்சி டி.எஸ்.பி., விவேகானந்தன் உள்ளிட்ட போலீசார் ரிசார்ட்டை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த 159 மாணவர்களிடம் விசாரணை நடக்கிறது.
அவர்களிடமிருந்து மது, கஞ்சா, போதை மாத்திரைகள், அபின் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஏராளமான மது பாட்டில்களையும் கைப்பற்றியுள்ளனர். அங்கு அனுமதியின்றி ரிசார்ட் நடத்தியவர்கள் சிலரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இதுகுறித்து போலீசார் கூறுகையில், '' இந்த மாணவர்கள் தனியாக இன்ஸ்டாகிராம், வெப்சைட்டுகள் மூலம் இணைந்து அடிக்கடி இப்படி போதை விருந்துகளை நடத்தியுள்ளனர். நபர் ஒருவருக்கு இந்த முறை ஆயிரத்தி 200 ரூபாய் செலுத்தி இந்த விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

இதில், சில தமிழக மாணவர்களும் உள்ளனர். அடிக்கடி இவர்கள் இப்படி சந்தித்து தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளை பயன்படுத்தி வந்துள்ளனர். இவற்றை கட்டுப்படுத்தவே அதிரடி ரெய்டு நடத்தினோம். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்த ரெய்டுகள் தொடரும்,'' என்றனர்.



ஏற்கனவே, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், தற்போது மாணவர்களின் போதை விருந்து, கைது நடவடிக்கைகள் மேலும் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.


ரிசார்ட்டுக்கு சீல் : இந்த நிலையில், அனுமதியின்றி இயங்கிய அந்த ரிசார்ட்டுக்கு சீல் வைக்க, கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...