கார்கோன்,:'இந்த தேர்தலில், 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று, மீண்டும் தனி மெஜாரிட்டியுடன், பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைக்கும்,'' என, பிரதமர் மோடிநம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மத்திய பிரதேசத்தில், முதல்வர், கமல்நாத் தலைமையிலான, காங்., பகுஜன்சமாஜ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, ஏழாவது கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று முடிவடைந்தது. கார்கோன் லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, மோடி பேசிய தாவது:காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் காமரூபம் வரை, தேசம் முழுவதும், 'இந்த முறை, 300; மீண்டும் மோடியின் தர்பார்' என்ற, ஒரே குரல் தான் ஒலிக்கிறது.
நாடு முழுவதும் உள்ள, 130 கோடி மக்களின் ஒரே தேர்வு, பா.ஜ., தலைமையிலான, தேசியஜனநாயக முன்னணி ஆட்சி தான்.வரும் ஞாயிறு, நீங்கள் போடும் ஓட்டு, புதிய வரலாறு படைக்கும். மிக நீண்ட இடைவெளிக்கு பின், மக்கள், தொடர்ந்து, இரண்டாவது முறையாக, தனி மெஜாரிட்டி அரசை தேர்ந்தெடுக்க உள்ளனர்.இந்த தேர்தல், முந்தைய தேர்தல்களில் இருந்து வித்தியாசமானது. மக்கள் எந்த கட்சி என பார்த்து ஓட்டுபோடாமல், புதிய இந்தியாவை உருவாக்க,நாட்டுக்காக ஓட்டளித்து உள்ளனர்.
என்னை மீண்டும் பிரதமராக்க, முடிவு செய்த மக்களுக்கு நன்றி.இந்த தேர்தலையொட்டி, நான் முதன் முதலாக, உ.பி.,யின் மீரட் நகரில் பிரசாரம் செய்தேன். இங்கு, இறுதியாக பிரசாரத்தை முடிக்கிறேன்.மீரட், கார்கோன் நகரங்களுக்கு, இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு உள்ளது. மீரட்டில், 1857ல், இந்திய விடுதலைப் போருக்கு, முதன் முதலாக வித்திட்ட, சிப்பாய் கலகம் நடைபெற்றது.கார்கோனில், பழங்குடி களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட, பீமா நாயக், வீர மரணம் அடைந்தார்.
சுதந்திர போராட்ட வீரர், ராம் மனோகர்லோகியா, பிரதமராக இருந்த நேருவிடம், 'பெண்களின் மிக முக்கிய பிரச்னை, குடிநீரும், கழிப்பறை வசதியும் தான்' என, கூறினார்.நான், லோகியாவின் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறேன். நாடு முழுவதும், கழிப்பறைகள் கட்டப்பட்டு, பெண்களின் கண்ணியம் காக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆட்சியில், துாய்மையான குடிநீர் வசதி கிடைக்கச் செய்வேன்.இவ்வாறு, மோடி பேசினார்.
'பிரக்யாவை மன்னிக்க மாட்டேன்'
பிரசாரத்துக்கு பின், தனியார், 'டிவி'க்கு, பிரதமர் மோடி அளித்த பேட்டி:மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற, நாதுராம் கோட்சேவை, 'தேசபக்தர்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரக்யா சிங் கூறியுள்ளார். காந்தி குறித்தும், கோட்சே குறித்தும், அவர் கூறியது மோசமான கருத்து; சமுதாயத்துக்கு சீரழிவு ஏற்படுத்தும் கருத்து. அவர் தன் தவறுக்கு, மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால், காந்தியை அவமதிக்கும் வகையில் பேசிய, பிரக்யா சிங்கை, ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment