உயிரை வைத்து கொள்ளையடிக்கும் மார்த்தாண்டம் மஞ்சு நர்சிங் ஹோம்...
இது புதிதல்ல மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும் சம்பவம்...
கடந்த நவம்பர் மாதம் 13-ந்தேதி புதுக்கடை பகுதியை சார்ந்த ஒரு பெண்மணி தீக்காயம் ஏற்பட்டு உடனடியாக அவசர அவசரமாக பக்கத்தில் உள்ள மார்த்தாண்டம் மஞ்சு ஆஸ்பத்திரியில் நோயாளியை கொண்டு வந்து முதலுதவி சிகிட்சைக்காக அனுமதித்தனர். நோயாளியின் உறவினர்கள் மேல் சிகிட்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு நோயாளியை கொண்டு செல்வதற்கு கேட்டுள்ளனர். ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் நோயாளியை வெளியே கொண்டு செல்வதற்கு அனுமதிக்கவில்லை.. மாறாக சர்ஜரி பண்ண வேண்டும் அப்படி இப்படியென்று நோயாளியின் உறவினர்களிடம் ₹2,50,000/- வரைக்கும் வசூலித்து விட்டார்கள். அவர்களும் விலைமதிப்பற்ற உயிருக்காக பஞ்சாயத்து வீட்டையே (பசுமை வீடு) ஒத்திக்கு வைத்து பணத்தை அடைத்துவிட்டார்கள். மேற்கொண்டு தற்சமயம் கிட்டத்தட்ட 22 நாட்கள் கடந்த பிறகும் மீண்டும் மேல் சிகிட்சைக்காக ₹2,00,000 கேட்டு நோயாளியின் உறவினர்களை வற்புறுத்துகின்றார்கள். ஆனால், குடும்ப ஏழ்மையின் காரணமாக அவர்களால் மேற்கொண்டு பணம் செலுத்த வசதியில்லாமல் வேறு அரசாங்க மருத்துவமனைக்கு அனுப்பி கேட்டும் மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைக்கவில்லை... இறுதியாக வேறு வழியின்றி காவல் நிலையத்தை நாடி காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் மருத்துவரிடம் பேசியதன் பேரில் ₹60000/- தொகையை மருத்துவமனையில் கட்டி நோயாளியை திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றோம். ஆனால், சிகிட்சை பலனின்றி உயிர் பறிபோனது. லேசான தீக்காயத்தை 22 நாட்களாக எந்தவித சிகிட்சையும் அளிக்காமல், நோயாளியை வேறு மருத்துவமனைக்கும் மாற்றித் தருவதற்கும் ஒத்துழைக்காத இந்த மாதிரி உயிரை வைத்துக்கொண்டு பணத்தை கொள்ளையடிக்கும் மருத்துவமனை நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை பொதுமக்கள் தட்டிக்கேட்க வேண்டும்.!!!

No comments:
Post a Comment