Saturday, May 11, 2019

*இன்றைய சிந்தனை.*

💦💦💦💦💦💦💦💦💦💦💦
*''சோதனைகள்தான்"*

எவ்வளவு தான் நாம் உண்மையுடன் உழைத்தாலும், முன்னேறினாலும் வாழ்வில் பல ஏற்றத் தாழ்வுகளையும், துன்பங்களையும், சோதனைகளையும் கடந்துதான் சிகரங்களாய் அடைய வேண்டியிருக்கிறது.
துன்பங்கள், சோதனைகள் வரும்போது அதை தாங்கி, வெற்றிகரமாக வென்று முன்னேறுகிறவர்கள் சிகரத்தை அடைகிறார்கள்.
ஒரு சமையல் கலைஞரின் மகள் வாழ்வில் எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும், சோதனைகளையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்து வந்தார்.
“ஒரு நாள் தளர்ந்த மனதுடன் தன் தந்தையிடம் வந்தாள். தன் வாழ்வில் தான் படும் இல்லல்களை சொல்லி அழுதார்.
அவரது தந்தை அவளை தேற்றி தன்; சமையல் கூடத்திற்குள் அவளை அழைத்துச் சென்று ஒரு பாத்திரத்தில் கேரட்டுகளைப் போட்டு வேக வைத்தார்.
இன்னொரு பாத்திரத்தில் கோழி முட்டைகளைப் போட்டு வேக வைத்தார். சிறிது நேரம் கழித்து அவற்றை அடுப்பிலிருந்து இறக்கி இரண்டையும் தன் மகளிடம் காட்டி,
“என் அன்பு மகளே, முட்டையின் உட்பகுதி திரவமாய் இருந்தது. உஷ்ணத்தை எதிர் கொண்டதும் இறுகி விட்டது. கேரட்டின் உட்புறம் திடமாய் இருந்தது. உஷ்ணத்தை எதிர் கொண்டதும் இளகி விட்டது.
சோதனைகள் இந்த உஷ்ணம் போல. சோதனை வரும்போது கேரட்போல இளகி விடாதே. முட்டைபோல் திடமாகி விடு” என்று ஆலோசனைக் கூறினார்.
மகளுக்கு சமையலும் புரிந்தது. வாழ்க்கையின் தத்துவமும் புரிந்தது.
ஆம்..
நண்பர்களே...
சோதனைகள் வந்து கொண்டுதான் இருக்கும், ஆனால் துவண்டு விடக் கூடாது.
நம்பிக்கையும், விடாமுயற்சியும் நம்மை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும்.கருத்து.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...