நேற்று ஈரோடு-சேலம் மார்க்கத்தில் அடுத்தடுத்து சென்ற நான்கு ரயில்களில் பயணிகளிடம் நகைகள் 'வட மாநில' கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப் பட்டதாக சன் நியூஸ் தகவல் கூறுகிறது.
குறிப்பிட்ட இடத்தில் இருப்புப்பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாக தகவல் தரப்பட்டுள்ளது. முதலில், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ரயில்வேதுறை, பொதுமக்கள் இருவரிடமுமே விழிப்புணர்வு தேவை.
1. ரயில்வேதுறை முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பயணிக்கும் பெட்டிகளின் கதவுகள் ஸ்டேஷன்களுக்கு இடையில் பூட்டி வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
2. முன்பதிவு பெட்டிகளில் பாதுகாப்புக் காவலர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.
3. டி.டி.இ., டிரைவர், கார்டு போன்றவர்களின் கைபேசி எண்கள் முன்பதிவு பயணிகளுக்கு வழங்கப்பட வேண்டும், குறைந்தபட்சம், குறுந்தகவல் மூலமாகவாவது...
4. முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவில்லாதோர் ஏறுவதைத் தடை செய்ய வேண்டும்.

அடுத்து பயணிகள் பயண நேரத்தில் தேவையற்ற கூடுதல் பணமோ, நகைகளோ கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும்படி அவற்றைக் கையாள்வதைத் தவிர்க்க வேண்டும்.
2. கழிப்பறைக்கு போகுமுன், போய்வந்தபின் தங்கள் உடமைகளைச் சரிபார்க்க வேண்டும்.
3. மொபைலில் மூழ்கி வெளி உலகம் தெரியாமல் இருக்கக்கூடாது. குறைந்தபட்ச விழிப்புணர்வு, கவனம் அக்கம்பக்கம் வைக்க வேண்டும்.
4. சக பயணிகள் பற்றி குறைந்தபட்ச அறிமுக விழிப்புணர்வு வைப்பது நலம்.
5. நம் பாதுகாப்பு நம் கையில் என்பதை உணர்ந்து பயணம் செய்தால் பல அசம்பாவிதங்களைத் தடுக்கலாம்.

No comments:
Post a Comment