மூதறிஞர்,ராஜரிஷி,ராஜாஜி என்றழைக்கப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், மார்ச் 1954 இல் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஏன்..?
( திராவிடக்கூத்துகளுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து அரியணையேற்றியவரே இவர் தான். காமராஜருக்கும் ராஜாஜீக்குமிடையே இருந்த அரசியல் காழ்ப்புதான். காங்கிரஸ், காமராஜரை வைத்து ராஜாஜிக்கு துரோகம் செய்தது. ராஜாஜி திமுக வை வைத்து காங்கிரஸிற்கு மொத்தமாக மூடுவிழா நடத்தி விட்டார். அந்த அரசியல் கதை பேசி நல்ல ஓர் திட்டத்தின் பெருமையை மறைக்க விரும்பவில்லை. நான் சொல்ல வருவது இருவருக்குமான அரசியல் காழ்ப்பைபப் பற்றி அல்ல. நல்ல ஓர் திட்டம் நடைமுறையாகாததைப் பற்றி மட்டுமே)
அதாவது, ஒரு வித்தியாசமான கல்வி முறையக் கொண்டு வர முயற்சி செய்தார். அதற்கு அதிகாரப்பூர்வமாக "மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்" என்ற பெயரே சூட்டப்பட்டது. அதன்படி, ஆரம்பப் பள்ளி மாணாக்கர்களுக்கு பள்ளி நேரம் மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது மட்டுமல்ல. மீதி நேரம் பிள்ளைகள் பெற்றோருக்கு உதவியாகவும், அதாவது தந்தையின் தொழிலுக்கு உதவியாகவும், தந்தையின் தொழிலைக் கற்கவும், (கைத் தொழில்) அப்படியொன்று இல்லாதவர்கள் பிடித்தமான தொழிலைக் கற்கவும் வழி வகை செய்வதான திட்டம்.
அடடா... நல்ல விசயமாக இருக்கிறதே..!! ஆனால் இதைப் பாராட்டியோ புகழ்ந்தோ சொன்னால் நம்மையும் பிராமண அடிமையென்று சொல்லி விடுவார்களே..!! அதனால் எல்லோரையும் போல ஜாதீயத்தை வளர்க்கும் "குலக்கல்வித் திட்டம்". கல்வியை பிராமணர்கள் மட்டும் "ஸ்வாகா" செய்யும் திட்டம் என்றெல்லாம் சொல்லி தமிழகத்திற்கு துரோகியாக நான் திராவிடத் தம்புரா அல்ல. தமிழச்சி.

இந்தத் திட்டம் நடைமுறையாகியிருந்தால், ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
இன்று பதினைந்து வயது வரை, எதற்கு..? என்ன..? ஏன் படிக்கிறோம் என்ற தெளிவே இல்லாமல், "படி படி படி" என்று விரட்டு விரட்டென்று விரட்டி பதினைந்து வயது வரை காலம் வீணடிக்கப்பட்டே வருகிறது.
நேற்றைய கருத்தையே முன் வைக்கிறேன்.
*பத்தாம் வகுப்பு வரை படிக்கும் கல்வியானது ஒருவருக்கு, எந்த வகையில் மேற்படிப்பிற்கோ அல்லது பத்தோடு கல்வியை நிறுத்துபவர்களின் எதிர்காலத்திற்கோ பயன்படுகிறது..?*
வீண் என்பதைத் தவிர வேறு பதில் இல்லை என்பதே நிதர்சனம்.
*கல்வி வியாபாரம் ஆகி விட்ட இன்றைய நிலையில், படிப்பறிவும் எழுத்தறிவும் மட்டுமே போதுமான தமிழகத்தை, இன்றைய கல்வி முறை ஏதோ மிகப் பெரிய எதிர்காலத்தைத் தமிழகத்திற்கோ மனிதருக்கோ தரப் போவதைப் போன்ற மயக்கத்தில் ஆழ்த்தி வைத்திருப்பது துரதிர்ஷ்ட வசமான ஒன்று.*
"என் பையன் படிச்சிகிட்டே சம்பாதிக்கிறான். சம்பாதிச்சிட்டே படிக்கிறான்." இன்றை டிவி விளம்பரம் இது. 😊
இன்றைய தமிழகத் தேவையை அன்றே யோசித்த ஞானிதான் ராஜாஜி. அந்த யோசனையில், இன்றைய சுயநலவாதிகளைப் போல தன்னலம் மட்டும் இல்லவே இல்லை.
ஆனால் அதற்கு ஒரு வண்ணம் பூசப்பட்டது. "குலக்கல்வி முறை" "பார்ப்பன ஆதிக்க சூழ்ச்சி" என்றெல்லாம் உணர்ச்சிகளைத் தூண்டி, கிட்டத்தட்ட மொத்தத் தமிழகத்தையும் ராஜாஜிக்கு எதிராகத் திருப்ப முடிந்தது அன்றைய திராவிடக் கிருமிகளால்.
அதன் பலன் கல்வித்துறை வளர்ந்தது. மக்கள் நலன் நாசமானது. அதனாலான எதிர் வினையைத் தான் தமிழக மக்கள் இன்று அனுபவிக்கிறோம்.
"செருப்பு தைப்பவன் மகன் செருப்பு தான் தைக்க வேண்டுமோ..!! ஏன் படிக்கக் கூடாதோ..?"
"நாவிதன் மகன் அதற்குத் தான் போக வேண்டுமோ.. ஏன் படிக்கக் கூடாதோ.." -- இவைகள் தான் பிரதானமானது பொது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்ட.
அதாவது திட்டம் என்னவென்ற தெளிவு மக்களைச் சென்றடையும் முன், அது எதிரானது என பட்டி தொட்டியெங்கும் திரிக்கப்பட்டு பரப்பப்பட்டது.
திராவிடத்தின் ஆட்சிக் கனவு சூழ்ச்சியால், தமிழக கைத்தொழில்கள் காலாவதியானது.
"செருப்புத் தைப்பவன் மகன் செருப்பு தான் தைக்க வேண்டுமோ.."--- இன்று அந்த செருப்புத் தொழில் செய்பவன் தான் கோடீஸ்வரன். குடிசைத் தொழிலாக இருந்த செருப்புத் தொழிலை அழித்து யாருக்கோ தாரை வார்த்துக் கொடுத்ததே திராவிடக் கிருமிகளின் சாதனை.
"நாவிதன் மகன் அந்தத் தொழிலுக்குத் தான் போக வேண்டுமோ.." --- இன்று அந்தத் தொழில் பட்டப் படிப்பில் இருக்கிறது.
குலத்தொழில், அது அழிவில்லாத கைத்தொழில் என்பதை மறந்த சமூகம் எப்படி இருக்கும்..?
செருப்புத் தைப்பவன் மகன் அதைக் கற்க மறுத்தான்.
நாவிதன் மகன் அதிலுள்ள வலுவான எதிர்காலத்தையும், அது கலைநயமான கைத் தொழில் என்பதை மறந்தான்.
விவசாயி மகன் விவசாயம் செய்ய மறுத்தான்.
இப்படி தச்சன், கொல்லன், நெசவாளன், சமையல்காரன், மாடு மேய்ப்பவன் என அனைவரும் தங்களுடைய பிள்ளை பள்ளிக்கூடத்தில் போய் அமர்ந்ததும் ஏதோ கலெக்டர் டாக்டர் நீதிபதி ஆகும் அளவுக்குக் கற்பனை செய்யும் மயக்கத்தில் ஆழ்த்தியது யார்..? தங்களுடையது தான் அழிக்க முடியாத கைத்தொழில், அதில் தான் வாழ்வும் வளமும் செழிக்கும் என்பதை உணர்த்த மறுத்தது யார்..?
இன்று, படித்துக் கொண்டே பாதி நேர வேலையாக ஆட்டோ ஓட்டுபவர்கள், ஹோட்டலில் டேபிள் துடைப்பவர்கள், மசாஜ் வேலை செய்பவர்கள், ஏதாவது மால்களில் ஏதேனும் ஒரு வேலை செய்பவர்கள் படித்து முடித்த பிறகு, படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமலும் மற்ற அழிக்க முடியாத கைத்தொழில் எதுவும் தெரியாமலும் அதையே தொடர்பவர்கள் லட்சக் கணக்கில் இருக்கிறார்கள் உள்ளே புழுங்கியும் வெளியே கலங்கியும்.
இவைகள் திராவிடப் போர்வையாளர்களின் சாதனைகளில் ஒரு துளி.
இதையெல்லாம் காணும் போது, ராஜாஜியின் அருமை உணர்ந்தால் நிச்சயமாக தமிழக நலனில் நீ அக்கறை உள்ளவரே..!!
காமராஜர், தான் படிக்காததால் அனைவரும் படிக்க வேண்டுமென்று படிப்பறிவையும் எழுத்தறிவையும் கொண்டு சேர்த்தார். ஆட்சி நீடித்திருந்தால், காலத்திற்குத் தகுந்தாற் போல் கல்வி முறையை சீர் செய்திருப்பார்.
அவரைத் துரத்தியடித்து புழுங்கி மரிக்கச் செய்த திராவிடம், காசாக்குவதையும், மத துவேசம் செய்வதையும் மட்டுமே குறிக்கோளாய் தமிழகத்தை நாசமாக்கியது என்றால், அது மிகையல்ல.
பொது நலத்தோடு கொண்டு வந்த திட்டத்தை பார்ப்பனீயம், குலத்தொழில் கல்வி, ஜாதீயக் கல்வி என்றெல்லாம் உணர்ச்சிகளைத் தூண்டி தமிழக மக்களை தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரியிடச் செய்த திராவிடம்...
இட்ட பிச்சைகளைச் சாதனைகளாகச் சொல்லி மேடையில் முழங்கும் போது தமிழகம் புரிந்து கொள்ளவில்லை, தலைமுறை தடுமாறத் தொடங்கியதை.
தாத்தானோடு, அப்பனோடு காணாமல் போனது நெஞ்சம் நிமிர்த்திய கைத்தொழில் திறமை.
தாத்தன் நெசவாளர். பேரன் பத்து வருடம் ஏதேதோ படித்து கடைசியில் துணிக்கடையில் வேட்டி மடித்துக் கொண்டிருக்கிறான்.
செருப்புத் தைத்து விற்றுக் கொண்டிருந்த தாத்தனின் பேரன் பத்து வருடம் ஏதேதோ படித்து BATA செருப்புக் கடையில் விற்பனைப் பையனாக வேலை செய்கிறான்.
விவசாயத்தைச் சொல்லவே வேண்டாம். வலைத்தளங்களில் மட்டுமே அறுவடை வரை புரட்சி நடக்கிறது.
எல்லாக் கைத்தொழிலும் பறிக்கப்பட்டு அது பாலிடெக்னிக் பாடத் திட்டமாக பணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இனி ராஜாஜியே வந்தாலும் இது மாறாது.
தமிழின முன்னேற்றத்தின் ஒவ்வொரு தடைக்கல்லும் திராவிடப் போர்வையிலுள்ள கொள்ளையர்கள், சமூக விரோதிகள் அமைத்த படிக்கட்டுகளே.
இன்றுவரை, சாராய பாட்டிலுக்கும் பிரியாணிப் பொட்டலத்துக்கும் மக்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் திராவிடம் ஒழிந்தாலன்றி தமிழகம் தழைக்காது.🌺
No comments:
Post a Comment