இத்தலத்தை தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பாம்பை காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்துவந்த ஸ்தலம். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரரால் தேவாரப்பாடல் பெற்ற தலம்.
திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம். சரும நோய் தீர சுந்தர தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள்.
உருத்திரசன்மன் என்பவன் முக்தி பெற காசிக்கு சென்றான். இத்தலமும் காசிக்கு சமம் தான் என்பதை உணர்த்த சிவன், குண்டோதரனை அழைத்து "நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திரசன்மன் காசிக்கு செல்ல விடாமல் தடுத்து விடு'' என்று கூறினார். அதன்படி பாம்பு இவனை தடுக்க, உருத்திரசன்மன் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு மயங்கி கீழே விழுந்தது. பாம்பை காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்தார். பாம்பாட்டியாக வந்திருப்பது சிவன் என்பதை அறிந்து அவன் வணங்க, "இத்தலத்தை தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்,'' என்று கூறினார்.
இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும்.
சுந்தரருக்கு சரும நோய் தீர்த்தது.
தல விருட்சத்தின் அடியில் இறைவன் இத்தலத்திற்கு எழுந்தருளிய பாதுகை உள்ளது என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
அன்னை பார்வதி இப்பூமியில் மானிட ஜென்மமாய் அவதரித்து, சிவன் மீது காதல் கொண்டாலும் கூட, பெற்றவரிடம் முறைப்படி பெண் கேட்டு அழைத்துச் செல்லும்படி இறைவனிடம் கேட்டாள். இறைவன் அழைத்தே பெற்றவர்களுக்கு மரியாதை கொடுத்த பார்வதி போல, காதலிகள் தங்கள் காதலர் கரம்பிடிக்கும் முன் போராடியேனும் பெற்றோர் சம்மதம் பெற முயற்சிக்க வேண்டும்.
பரதமாமுனிவர் பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என கடும் தவம் இருக்கிறார். இவரது வேண்டுகோளை ஏற்ற இறைவன் வேள்விக் குண்டத்தில் பார்வதியைப் பிறக்கச் செய்தார். பார்வதியும் பெரியவளாகிறாள். இவளது ஒரே விருப்பம் சிவனைத் தன் கணவனாக அடைவது என்பது தான்.
காவிரிக்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வந்தாள். எட்டாவது நாள் வழிபாடு செய்ய வந்த போது அவ்விடத்தில் ஒரு லிங்கம் இருக்கக்கண்டு, சிவனே அவ்வாறு எழுந்தருளியதாகக் கருதி மகிழ்ந்தாள். சிவனும் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பார்வதியின் கையை பற்றி அழைத்தார்.
ஆனாலும், பார்வதி சிவனுடன் செல்லாமல் இறைவனே! என்னை வளர்த்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையும் படி அவர்கள் சம்மதத்துடன் என்னைத் திருமணம் செய்யுங்கள்'' என்று கூற ஈசனும் சென்று விட்டார். சில காலம் கழித்து நந்தியை, பரதமாமுனிவரிடம் மணம் பேசி வர தூது அனுப்பி வைக்கிறார் சிவன். முனிவரும் சம்மதிக்க மண நாள் குறிக்கப்பட்டது. கைலாயத்திலிருந்து மணமகனாக ரிஷப வாகனத்தில் சிவன் வர, "உத்தாலம்' என்னும் மரமும் சிவனுக்கு நிழல் தந்து கொண்டே வந்தது. மணமகள் இருப்பிடமான குத்தாலம் வந்து பெற்றோர் சம்மதத்துடன் பார்வதியை பரமேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார். சிவன் தான் இங்கு வந்து திருமணம் செய்ததற்கு அடையாளமாக தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் விட்டு சென்றார். இதனால் தான் இத்தலம் "குத்தாலம்' எனப்பட்டது.
************************************************************
இக்கோயிலுக்கு அருகில் உள்ள கோயில்கள்:-
************************************************************
இக்கோயிலுக்கு அருகில் உள்ள கோயில்கள்:-
I. மயிலாடுதுறை to திருஆப்பாடி
1. குத்தாலம் (திருத்துருத்தி) – உக்தவேதீஸ்வரர் திருக்கோயில் * * * * * (பதிவில் காணும் கோயில்)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.
2. திருவேள்விக்குடி - கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
குத்தாலத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
குத்தாலத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
3. திருஎதிர்கொள்பாடி - ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருவேள்விக்குடியிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருவேள்விக்குடியிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
4. திருமணஞ்சேரி - உத்வாக நாதர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருஎதிர்கொள்பாடியிலிருந்து 500 மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருஎதிர்கொள்பாடியிலிருந்து 500 மீ தொலைவில் உள்ளது.
5. பந்தனைநல்லூர் – பசுபதிநாதர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருமணஞ்சேரியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருமணஞ்சேரியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.
6. திருப்பனந்தாள் - செஞ்சடையப்பர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
பந்தனைநல்லூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
பந்தனைநல்லூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது.
7. திருஆப்பாடி - பாலுகந்த ஈஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருப்பனந்தாளலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருப்பனந்தாளலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
II. மயிலாடுதுறை to திருக்கடையூர் மயானம்
1. திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.
2. திருப்பறியலூர் (பரசலூர்) - வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருவிளநகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருவிளநகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
3. செம்பொனார்கோவில் - சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருப்பறியலூரியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருப்பறியலூரியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
4. திருஆக்கூர் - தான்தோன்றியப்பர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
செம்பொனார்கோவிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
செம்பொனார்கோவிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
5. திருக்கடையூர் – அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருஆக்கூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருஆக்கூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
6. திருக்கடையூர் மயானம் - பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்கடையூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்கடையூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
III. மயிலாடுதுறை to அம்பர் பெருந்திருக்கோவில்
1. திருமீயச்சூர் - மேகநாதசுவாமி திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், பேரளம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும்,உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், பேரளம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும்,உள்ளது.
2. திருமீயச்சூர் இளங்கோயில் - சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
(திருமீய்ச்சூர் மேகநாதசுவாமி கோயிலின் உள்ளே திருமீய்ச்சூர் இளங்கோயில் தலம் உள்ளது).
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
(திருமீய்ச்சூர் மேகநாதசுவாமி கோயிலின் உள்ளே திருமீய்ச்சூர் இளங்கோயில் தலம் உள்ளது).
3. செதலபதி (திருதிலதைப்பதி) - மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருமீயச்சூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருமீயச்சூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.
4. கூத்தனூர் - சரஸ்வதி திருக்கோயில்
செதலபதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
செதலபதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
5. கொத்தவாசல் – ஆபத்சகாயஸ்வரர் திருக்கோயில்
(63 நாயன்மார்களுள் ஒருவரான கோச்செங்கட்சோழர் கட்டிய மாடக்கோயில்)
கூத்தனூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
(63 நாயன்மார்களுள் ஒருவரான கோச்செங்கட்சோழர் கட்டிய மாடக்கோயில்)
கூத்தனூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
6. அம்பர் மாகாளம் - மாகாளநாதர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
கொத்தவாசலில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
கொத்தவாசலில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
7. அம்பர் பெருந்திருக்கோவில் - பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
அம்பர் மாகாளத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
* * * * *
* திருக்கோயில்களின் குளங்களை சீரமைப்பதால், மழைநீர் சேகரிப்புக்கு குளங்கள் பெருமளவு உதவியாக இருக்கும்.
இந்த குளங்கள் பண்டைய காலம் முதலே நிலத்தடிநீர் நிலையை மேம்படுத்த உதவிகரமாக இயங்கி வந்துள்ளன.

நம் தமிழ்நாட்டின் பழமையான திருக்கோயில்களை பாதுகாப்போம்.
கோயில் குளங்களை தூர்வாரி சீரமைப்போம்.
கோயில் குளங்களை தூர்வாரி சீரமைப்போம்.
மிக்க நன்றி.
No comments:
Post a Comment